மாநிலம் முழுவதும் நடைபெறும் பெரி யாரியல் பயிற்சி மாணவர்களின் பின்னூட்டக் கருத்துகள் இங்கே தொகுத்துத் தரப்படுகின்றன.
அவ்விவரம் வருமாறு:
மிகவும் பயனுள்ள வகுப்பு
இந்த வகுப்பினால் தமிழர் தலைவர் அவர்களைப்பற்றி நன்றாக அறிந்து கொண்டேன் இந்த வகுப்பு எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருக்கின்றது இதில் தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாறையும் தமிழ்நாட்டின் சமுதாய வரலாறையும் என்னால் அறிந்து கொள்ள முடிகிறது. இது எனக்கு என் சிந்தனைகளை மேம்படுத்த ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது
சில படித்த வரலாறுகள் இருந்தாலும், பல படிக்காத வரலாறும், சாதனைகளும் அறிந்து கொண்டுள்ளேன்......
வசந்த் குமார், இளங்கலை மூன்றாம் ஆண்டு வேதியியல், பொள்ளாச்சி
எதிர்கால தூண்கள் என்று நம்பப்பட்டு வரும் இளைஞர்களில் பெரியாரியல், பகுத்தறிவு சிந்தனைகள் போன்றவற்றை ஊட்டி அவர்களின் சமூகப் பொறுப்பு, எதிர்கால கடமைகள் என்னென்ன என்பதை எடுத்துரைத்து அவர்களை மானமும் அறிவும் உள்ள ஒரு நல்மனிதனாக உருவாக்கும் பணியை சிறப்பாக செய்து வருகிறீர்கள். பயன் பெறுபவர்களில் நானும் ஒரு மாணவி என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
இந்த வாய்ப்புக்கு நன்றி!
சி. அபிநயா, 12 ஆம் வகுப்பு, திருப்பூர்.
சிதறிக் கிடந்த எனது முற்போக்குக் குறித்த எண்ணங்களுக்கு வடிவம் தருவதாக இந்த பெரியாரியல் பயிற்சி வகுப்பு அமைந்துள்ளது. தோழர் மதிவதனி உரை கேட்டு என்னுள் ஒழிந்து கிடந்த சில ஆணாதிக்க சிந்த னைகளை தூர் எடுத்தேன். காதலையும் சுயமரியாதைகாரர்களிடம் கற்றுக் கொள்கிறேன்.
க.பிரதீப், மதுரை
மிகவும் சிறப்பான கருத்துக்கள். கேட்க கேட்க இன்னும் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
உதாரணமாக சத்துணவுத்திட்டம் காமராசர் கொண்டு வந்தார் என்பது நாங்கள் இதுவரை அறிந்தது.நீதிக்கட்சி தான் இதைக் கொண்டு வந்தது என்பது இன்றே தெரியும்.
இவ்வாறு ஆழ்ந்த கருத்துக்களைத் தெரிந்து கொள்ள எங்கிருந்து நாங்கள் துவங்க வேண்டும், எந்த புத்தகத்தில் இருந்து நாங்கள் துவங்க வேண்டும்...
நள்ளி, நா.மனோஜ்குமார், திண்டுக்கல்
பெரியாரின் கொள்கையை தேன் தடவி கொடுத்திடும் வகுப்பு!
நான் தேடி செல்லும் கருத்தினை வீடு தேடி கொடுத்திடும் பெரியாரியல் வகுப்பினை என்னவென்று சொல்வது? முத்தென சொன்னால் பொருந்துமோ..! அறிவு ஊற்றென சொன்னால் பொருந்துமோ..! பெரியாரின் கொள்கையை தேன் தடவி கொடுத்திடும்.!
பேரின்ப வகுப்பினை வர்ணிக்க வார்த்தையின்றி வாயடைத்து நிற்கிறேன்.!
சமரசம் இல்லா கொள்கையில் சமத்துவம் கற்று கொள்கிறேன்.! சமூகத்தை அடிமை செய்த சங்கிகள் கதைகேட்டு விழிப்புற்று எழுகிறேன் .! புது வீரியம் பெறுகிறேன்.!
மோ.மோகன் ராஜ், முதுகலைத்தமிழ், தலத்தெரு, காரைக்கால்
இன்றைய வகுப்பு மிக அருமையாக இருந்தது.
தமிழர் தலைவரின் தன்மைகள் என்னை வியப்புக்கு உள்ளாக்கியது. இந்த வயதிலும் அவரின் உழைப்பும், பாடுகளும் போற்றுதற்குரியது. அம்பேத்கரும் பெரியாரும் கார்ல் மார்க்ஸ்ம் என் முன்மாதிரியாக இருந்தார்கள், இனி தமிழர் தலைவரையும் அந்த வரிசையில் ஏற்றுக்கொள்கின்றேன்.
சூரியா காண்டீபன், அரக்கோணம்
தமிழர் தலைவர் அவர்களின் தனித்தன்மைகள் குறித்து குமரேசன் அவர்கள் விளக்கிய விதம் அருமையாக இருந்தது.
ஒவ்வொரு நாளும் புதிய செய்திகளை தெரிந்து கொள்கிறோம். இந்த வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்த அனைவருக்கும் நன்றி.
பெரியாரியல் பயிற்சி வகுப்புகள், எளிமை யாகவும், தெளிவாக புரியும் வண்ணம் நடைபெற்று வருவது சிறப்பு. தந்தை பெரியாரின் மனித நேயம் குறித்தும் , தமிழுக்கு பெரியார் ஆற்றிய தொண்டுகள் குறித்தும், சமூகநீதிக்காகவும், பெண்ணுரிமைக்காகவும் பெரியாரின் போராட்டங்கள் குறித்தும் அறிந்தோம். நன்றி.
- வே.சித்தார்த்தன், ஆண்டிமடம்
தள்ளாத வயதிலும் உழைத்த மகத்தானவரை அறிந்தேன்!
தஞ்சை மண்டல பெரியாரியல் காணொலி பயிற்சி வகுப்பை ஏற்பாடு செய்த பெரியார் சிந்தனை உயராய்வு மய்ய பொறுப்பாளர்களுக்கும்; 8 ஆம் நாள் பெரியாரியல் பயிற்சி வகுப்பில் பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனைகள் என்றத் தலைப்பில் மிகச் சிறப்பாக உரையாற்றி மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சிரமம் பார்க்காமல் பதில் கூறிய வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி அவர்களுக்கும், வகுப்பில் கலந்து கொள்ள பெரும்பங்காற்றிய அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கும், வீணாகும் நேரத்தை பயனுள்ளதாக மாற்றி “எல்லோரும் மனிதர்கள் என்று எங்கு பார்த்தாலும் முழங்க வேண்டும். இதுவே என் முதல் இலட்சியம்” என்று முழங்கி இந்த மண்ணில் ஜாதிகளற்ற சமுதாயம் மலர்வதற்குத் தள்ளாத வயதிலும் இடையறாது உழைத்த மகத்தான மனிதர்தான் ஈ.வெ.ராமசாமி எனும் தந்தை பெரியார். அய்யாவை பற்றி தெரிந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
திராவிடர் கழக பொறுப்பாளர்களுக்கும், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கும் பெரியாரியல் பயிற்சி மாணவர்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். நன்றி வணக்கம்
பு.தாரிணி, மன்னார்குடி கழக மாவட்டம்
( விக்கிரப்பாண்டியம்)
பெண் விடுதலை கொள்கைகளை சிறப்பாக எடுத்துரைத்த வகுப்புகள்
‘பெரியாரின் பெண்விடுதலை சிந்தனைகள்' என்ற தலைப்பில் வகுப்பு எடுத்த அம்மா வழக்குரைஞர் சே.மெ .மதிவதனி அவர்களுக்கு மிக்க நன்றிகள். இன்றைய வகுப்பு என்பது பெண்ணியம் என்பது என்ன என்று மட்டும் பேசுவதாக இல்லாமல் பெண்கள் எங்கு எல்லாம் அடக்கப்படுகிறார்களோ அங்கு எல்லாம் எப்படி பதிலடி தந்து அவர்கள் சுயமரியாதையோடு முன்னேற்றம் காண செய்யவேண்டிய வழிகளையும் அதற்கு மனதில் உறுதி பெருகிட எப்படி பெரியார் அய்யாவின் சிந்தனைகளையும் எழுத்துக்களையும் அடித்தளமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதை மிக தெளிவாக கூறுவதாக அமைந்தது.
பெண் விடுதலை பற்றி முழுதாக அறிய உதவும் நூல்களை தொகுத்து கூறியதும் பெரியார் அய்யாவிற்கு பின் திராவிடர் கழகம் அதே உறுதியோடு பெண் விடுதலை கொள்கைக்காக எடுத்த செயல்பாடுகள் பற்றி கூறியதும் மிகவும் சிறப்பானதாக அமைந்தது
வரலாறு மட்டும் இன்றி இன்று நடக்கும் அநீதிகளுக்கும் அதை எதிர்க்க செய்யவேண்டிய செயல்கள் பற்றி கூறியது இன்றைய சூழலில் இன்றியமையாதவை
மேன்மேலும் இது போன்ற வகுப்புகள் தொடர விரும்பும் பெரியாரின் மாணவனாக
சத்ய ஜெயந்த், பொறியியல் பட்டதாரி,
தஞ்சாவூர் மாவட்டம்
மிகவும் பயனுள்ள வகுப்பு
நான் ஜூன் 3ஆம் தேதியில் இருந்து சேலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பெரியாரியல் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு இருக்கிறேன். இந்த வகுப்பில் தான் முதல் முறையாக பெரியாரை பற்றியும் அவரின் ஜாதி ஒழிப்பு வேட்கையையும் பெண் விடுதலை பற்றியும் தெரிந்து கொண்டேன். மேலும் மூட நம்பிக்கை பற்றிய உன்மையான புரிதலையும் அடைந்தேன். இந்த பயிற்சி வகுப்பில் உரையாற்றிய அனைத்து தோழர்களும் அறிவியல் மற்றும் பகுத்தறிவு கருத்துகளை சிறப்பாகவும் , நகைச்சுவையுடனும் பேசினர்.
அதிலும் குறிப்பாக,
தோழர் சரவணன் அவர்களின் - நீதி கட்சியும் சுயமரியாதை இயக்கமும், தோழர் சந்திர சேகரன் அவர்களின் - மூட நம்பிக்கையும் பகுத்தறிவும், தோழர் கோ.கருணாநிதி அவர்களின் - உலகெங்கும் பெரியார், தோழர் நேரு அவர்களின் - சமூகநீதி ஒரு வரலாற்று பார்வை, தோழர் தகடூர் தமிழ்செல்வி அவர்களின் - பெரியாரின் பெண் விடுதலை சிந்தனைகள், வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி அவர்களின் - சமூக புரட்சி பயணத்தில் அண்ணல் அம்பேத்கரும் அய்யா.பெரியாரும், தோழர்..இரா.பெரியார் செல்வன் அவர்களின் - தந்தை பெரியாருக்கு பின், தோழர். ச.பிரின்சு அவர்களின் - திராவிடம் வெல்லும், மருத்துவர் இரா.கவுதமன் அவர்களின் - சாமி ஆடுதல் பேயாடுதல் ஓர் மருத்துவ விளக்கம் போன்றோர்களின் வகுப்பு என்னை மிகவும் கவர்ந்தது.
மேலும் இந்த வகுப்பினை சிறப்பாகவும் நேர்மையாகவும் ஒருங்கிணைத்த தோழர் பா.வைரம், தோழர் தமிழ் பிரபாகரன் மற்றும் தோழர் மதியழகன் அவர்களுக்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.
பெ.மேகலா, சேலம்.
No comments:
Post a Comment