தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 16, 2021

தகவல்

 படுக்கைகள் காலி

தமிழ்நாடு மருத்துவமனைகளில் 54 ஆயிரம் படுக்கைகள் காலி.

- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ராமன் - முறைகேடு

அயோத்தியில் ராமன் கோவிலுக்கு நிலம் வாங்கியதில் ரூ.16.5 கோடி முறை கேடு - இராகுல் காந்தி பகிரங்கக் குற்றச்சாட்டு.

பெண்கள் பாராட்டு

5 ஆண்டுகளில் பெரும் சாதனை களைப் படைப்பார் முதலமைச்சர் ஸ்டாலின் என்றுசென்னை எக்ஸ் பிரஸ்' இணைய தள டி.வி.க்கு அளித்த பேட்டி யில் பெண்கள் பாராட்டு.

எதிர்ப்பு இயக்கம்

டீசல், பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து சி.பி.அய்., சி.பி.எம்., வி.சி. ஆகிய கட்சிகள் இணைந்து எதிர்ப்பு இயக்கத்தை வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் நடத்த உள்ளனர்.

முக்கியத் தகவல்

தடுப்பூசி போட்டுக்கொண்ட 15நாட்களுக்குப் பிறகு குருதிக் கொடை  அளிக்கலாம்.

கெஜ்ரிவால்

அடுத்தாண்டு குஜராத்தில் நடக்க உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டி - கெஜ்ரிவால் அறிவிப்பு.

69% கட்டாயம்!

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை 69% அடிப்படையில் நடை பெறவேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு.

No comments:

Post a Comment