திராவிட இயக்கத் தலைவர்கள் குறித்து சமூக வலை தளங்களில் அவதூறு கருத்து பரப்பியவர் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 16, 2021

திராவிட இயக்கத் தலைவர்கள் குறித்து சமூக வலை தளங்களில் அவதூறு கருத்து பரப்பியவர் கைது

சென்னை, ஜூன்16- சமூக வலைதளங்களில் பா... மற்றும் அதிமுகவுக்கு ஆதரவாக பதிவிட்டு வருபவர் கிஷோர் கே சுவாமி. இவர் சமூக வலைதளங்களில் தமிழ்நாட்டு முன்னாள் முதலமைச்சர்களான அறிஞர் அண்ணா, கலைஞர் மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு..ஸ்டாலின் மற்றும் பத்தி ரிகையாளர்கள், ஊடகங்கள் மீது அப் பட்டமான அறுவெறுக்கத்தக்க வகையில் கருத்து பதிவிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு. தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிசந்திரன் கடந்த 10ஆம் தேதி கிஷோர் கே சுவாமியை கைது செய்யக் கோரி புகார் அளித்தார். புகாரின் பேரில் சங்கர் நகர் காவல்துறையினர் கிஷோர் கே சாமி மீது 153-கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு செயல்படுதல், 505(1)(தீ)- அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக ஒரு குற்றத்தை செய்ய தூண்டுதல், 505(1) (நீ) - ஒவ்வொரு வகுப்பு அல்லது சமூகத்தை வேறு சமூகத்துக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுதல் என 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து கிஷோர் கே.சாமியை 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க தாம்பரம் கிளை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து சைதாபேட்டை சிறையில் கிஷோர் கே.சாமி அடைக்கப்பட் டார். மேலும், 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

ஊடகத்துறை பெண்கள் மற்றும் பெண் செயல்பாட்டாளர்களை மிகவும் தரக் குறைவான வார்த்தைகளால் தொடர்ந்து விமர்சனம் செய்து வருவதாக பெண் ஊடகவியலாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், சென்னை காவல்துறையால் 29.7.2020 அன்று கைது செய்யப்பட்ட இவர் பாஜகவினரின் அழுத்தம் காரணமாக அப்போது உடனடியாக அன்றைய ஆட்சி யாளர்களால் விடுவிக்கப்பட்டவர். அரசி யல் நாகரிக உணர்வு ஏதுமின்றி,  சமூக ஊட கங்களில் திராவிட இயக்கத் தலைவர்களைக் கொச்சைப்படுத்திவந்த கிஷோர் கே.சாமி தற்பொழுது கைது செய்யப்பட்டது குறிப் பிடத்தக்கது.

No comments:

Post a Comment