உலகக் குருதிக்கொடை நாள்: ஒசூரில் குருதிக்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 15, 2021

உலகக் குருதிக்கொடை நாள்: ஒசூரில் குருதிக்கொடை

ஒசூர், ஜூன்15- உலகக் குருதிக்கொடை நாளில் (ஜூன் 14) தன்னார்வலர்கள் ஆர்வமாகக் குருதிக்கொடை வழங்கி னர். கரோனா தொற்று காலத்தில்   மருத்துவமனைகளுக்கு  இரத்தம் தேவை அதிகரித்திருப்பதைக் கணக் கில் கொண்டு நிழல் அறக்கட்டளை சார்பில் ஜூன் 14 உலக குருதிக்கொடை நாளில் ஒசூர் அரசு மருத்துவமனைக்கு குருதிக் கொடை வழங்கப்பட்டது.

பேரிடர்  காலத்திலும்  23 பேர் குருதிக் கொடை  அளித்தனர். குருதிக் கொடையாளர்கள் அனைவரும் சான் றிதழ் வழங்கி பாரட்டப்பட்டனர்.

குருதிக்கொடைமுகாமைஒசூர் சட்டமன்றஉறுப்பினர்ஒய்பிரகாஷ் துவக்கி வைத்தார். ஒசூர் அரசு மருத் துவமனை தலைமை மருத்து வர் எஸ்.பூபதி, இரத்த வங்கி மருத்துவர் எல்.மகேஷ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்..சத்யா, முன்னாள் நகர்மன்றத் தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரன், திராவிடர் கழக மாவட்டத் தலைவர் வனவேந்தன், காங்கிரஸ் நகர தலைவர் நீலகண்டன்,சிபிஅய் ஒசூர் ஒன்றிய செயலாளர் மூர்த்தி, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சிவகுமார், கிருஷ் ணகிரி மாவட்ட குடியிருப்போர் சங்க துணைத் தலைவர் சத்திய மூர்த்தி, மாநில சட்டக்கல்லூரி மாணவர் கழக துணை அமைப்பாளர் .கா. வெற்றி மற்றும் நிழல் அறக்கட் டளை செயல்பாட்டாளர்கள் சித்தாந்தன், செகஸ்தின், தருன் கலந்துக்கொண்டனர்.

இந்நிகழ்வில்  நிழல் அறக்கட்டளை சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.12,000 வழங்கப்பட்டது.கரோனா தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவியர்களுக்கு தந்தை பெரியார் நூல்கள் வழங்கபட்டது. குருதிக் கொடை  நிகழ்வினை நிழல் அறக்கட்டளை நிறுவனரும்,மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கோ.கண்மணி மற்றும் செயல்பாட்டாளர்கள் ஒருங்கி ணைத்தனர்.

No comments:

Post a Comment