டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:
· மத்திய அரசு பணிக்கு அழைக்கப்பட்டும் பணியில் சேராதது குறித்து விளக்கம் கேட்டு மேற்கு வங்க முன்னாள் தலைமை செயலாளர் அலபன் பந்தோபாத்யாயாவுக்கு பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த சட்டத்தின் படி அவருக்கு சிறை தண்டனை விதிக்க வாய்ப்புள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
· அமெரிக்கா சென்ற இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கரிடம் முன்னாள் அதிபர் டிரம்பிடம் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த லெப்டினெண்ட் ஜெனரல் ஹெச்.ஆர். மெக்மாஸ்டர், இந்தியாவில் ஜனநாயகத்தைப் பாதிக்கும் அளவிற்கு ஹிந்துத்வா நடவடிக்கைகள் நடப்ப தாக மேலை நாடுகள் கவலை கொள்கின்றன. அது குறித்து உங்கள் கருத்து என்ன என கேட்கப்பட்ட கேள்விக்கு
உரிய பதிலை அமைச்சர் ஜெயசங்கர் தெரிவிக்க முடியவில்லை என மூத்த பத்திரிக்கையாளர்
ஆகார் படேல் குறிப்பிட்டு உள்ளார்.
· தேசவிரோதச் சட்டம் குறித்த அய்.பி.சி.124ஏ,
மறுபரி சீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம்
தெரிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என தலையங்கச் செய்தியில்
தெரிவிக்கப்பட்டு உள்ளது.
டெக்கான்
கிரானிகல், சென்னை:
· 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் தேவையெனில் பின்னொரு நாளில் மாணவர்கள் தேர்வு எழுதி மதிப்பீடு பெற்றுக் கொள்ளலாம் எனவும் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
· திருமணம் என்பது ஒப்பந்தம் அல்ல. அது புனிதமானது. ஆனால், குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டம் வந்த நிலையில் அதற்கு அர்த்தம் இல்லாமல் போனது என சென்னை உயர்
நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியன்
எக்ஸ்பிரஸ்:
· மேற்கு வங்க முன்னாள் தலைமைச் செயலாளர் மீதான் மத்திய அரசின் நடவடிக்கை கவலை அளிக்கிறது. முன் எப்போது நடைபெறாதது. விதிகளுக்குப் புறம்பானது என மத்திய அரசின்
முன்னாள் அதிகாரிகள் பி.கே.சதுர்வேதி,
ஜி.கே.பிள்ளை, சத்யானந்த் மிஸ்ரா
போன்றோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
நியூ
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
· கோவிட் சிகிச்சைக்கு வரிச்சலுகைகள் குறித்து ஆராய்வதற் கான அமைச்சர்கள் குழுவிலிருந்து (அரசு) முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரசை மத்திய அரசு ஒதுக்கி வைத்திருப்பதற்கு ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கேலாட் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தி
டெலிகிராப்:
· அரசின் செலவினங்களை அதிகரித்தல், ஏழை மக்களுக்கு ரொக்கமாக பணம் வழங்குதல், ரேஷன் திட் டத்தை விரிவாக்குதல் ஆகியவற்றை செய்தால் மட்டுமே பொருளாதாரத்தை மீட்க முடியும் என்று காங்கிரஸ் எச்சரித் ததாகவும், ஆனால் பொருளாதார வல்லுநர்கள் பலரின் அறிவுரையை ஒன்றிய அரசு புறந்தள்ளியதாகவும் பசிதம் பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
· பாஜகவின் மத்திய தலைமை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முக்கியமான உத்தரப்பிரதேச தேர்தலுக்கான தயாரிப்புகளைத் தொடங்கியுள்ளது, மாநிலத் தலைவர் களிடையே உள்ள வேறுபாடு களைத் தீர்ப்பது, ஜாதி வாக்கு களைக் கணக்கிட்டு சரியாகப் பெறுவது மற்றும் யோகி ஆதித்யநாத் அரசாங்கத்தின் பிம்பத்தை மேம்படுத்து வதில் கவனம் செலுத்தும் பணியை முடுக்கி விட்டுள்ளது.
- குடந்தை
கருணா
2.6.2021
No comments:
Post a Comment