ராமன் கோயில் விவகாரத்தில் ராமஜென்மபூமி அறக்கட்டளையின் முறைகேடுகள் அம்பலம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 15, 2021

ராமன் கோயில் விவகாரத்தில் ராமஜென்மபூமி அறக்கட்டளையின் முறைகேடுகள் அம்பலம்!

.பி. முதலமைச்சர் இல்லம் முற்றுகை காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது

லக்னோ, ஜூன் 15 - உத்தரப்பிரதேச மாநிலத்தில் அயோத்தியில், பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் 2019ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி ராமன் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காகப் பிரச்சினைக்குரிய நிலம் அன்றி அதை சுற்றியுள்ள பல பகுதி களிலும் ராமன் கோயில் அறக் கட்டளை சார்பில் நிலங்கள் வாங்கப்பட்டு வருகின்றன. இதில் ராமன் கோயில் அறக்கட்டளைமீது ஊழல் புகார் கிளம்பியுள்ளது. இதன் சார்பில் ரூ.18.5 கோடியில் வாங்க ஒப்பந்தமிடப்பட்ட நிலம், சில நிமிடங்களுக்கு முன் வெறும் ரூ.2 கோடியில் விற்கப்பட்டது தெரிய வந்துள்ளது.

இந்தப் புகாரை உத்தரப்பிரதேச முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சியின்  முன்னாள் அமைச்சர் பவண் பாண்டே எழுப்பியுள்ளார். அவரது புகாரின்படி, அயோத்தியின் பிஜேஷ்வர் தோப்பில் 12,080 கெஜம் அளவிலான நிலம், பாபா ஹரிதாஸ் என்பவருக்கு சொந்தமானது.

இந்த நிலத்தை அவர், கடந்த மார்ச் 18ஆம் தேதி உள்ளூரின் சுல்தான் அன்சாரி, ரவி மோகன் திவாரி ஆகிய இருவருக்கும் ரூ.2 கோடிக்கு விற்பனை செய்துள்ளார். இந்த விற்பனையைப் பற்றி ராமர் கோவில் தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் நிர்வாகக் குழு உறுப்பினரான டாக்டர் அனில் மிஸ்ரா மற்றும் அயோத்தியின் மேயர் ரிஷி கேஷ் உபாத்யா ஆகியோருக்குத் தெரிந் துள்ளது.

இதைத்தொடர்ந்து அதே நிலத்தை சுல்தான் மற்றும் மோகன் திவாரி இணைந்து ராமன்கோவில் அறக்கட் டளைக்கு ரூ.18.5கோடிக்கு விற்றுள்ளனர். இதற்கான தொகை சுல்தான் மற்றும் மோகன் திவாரியின் வங்கிக் கணக்கு களுக்கும் மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலபேரம் குறித்து சிபிஅய் விசாரிக்க வேண்டும் என சமாஜ்வாதி கட்சி  கோரி யுள்ளது. இதே புகாரை ஆம் ஆத்மி கட்சியினரும் எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து அறக்கட்டளையின் பொதுச்செயலாளரான சம்பக் ராய் கூறும்போது, ‘‘கோவில் கட்டும் பணி தொடங்கிய பின் உத்தரப்பிரதேச அரசு அயோத்தியில் பல இடங்களில் நிலங்களை விலைக்கு வாங்குகிறது. இதை வாங்க வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் ஆர்வம் காட்டுகின்றனர். இதன் காரணங்களால் இங்கு நிலங்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள முக்கிய நிலத்தின்மீதான புகாரை விசாரிப்போம். பொதுமக்களை திசை திருப்பவும், அரசி யல் உள்நோக்கத்துடனும் இந்த புகார் எழுப்பப்பட்டுள்ளது’’ எனக் கூறினார்.

யஷ்வந்த் சின்கா கேள்வி

இதுகுறித்து ஒன்றிய அரசின் பா... முன்னாள் அமைச்சரும், திரிணாமுல் காங்கிரசின் மூத்த தலைவருமான யஷ் வந்த் சின்கா தனது டிவிட்டர் பக்கத்தில், ‘‘ராமனையும் விட்டு வைக்காதவர்கள் மீதம் வைத்திருப்பது என்ன? மோடி இருந்தால் அனைத்தும் சாத்தியம்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

.பி.முதலமைச்சர் இல்லம் முற்றுகை

இந்த நிலையில் ஊழல் நடந்ததாகக் கூறப்பட்டதை அடுத்து  உத்தரப்பிரதேச மகளிர் காங்கிரஸ் அணியினர், முதல்வர் சாமியார் ஆதித்யநாத்தின் இல்லம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய பெண் தொண்டர்கள் முதல் வரின் இல்லத்தை நோக்கி பேரணி செல்ல முயன்றனர், ஆனால் முதல்வர் குடியிருப்பு அமைந்துள்ள காளிதாஸ் மார்க்கில் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். மகளிர் காங்கிரசின் மாநில பிரிவுத் தலைவர் பிரதிபா அச்சால் பால் தலைமையிலான பெண் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். பெண்போராட்டக்காரர்களைகாவல் துறையினர் தவறாகக் கையாண்டதாக வும்  அவர்கள் குற்றம் சாட்டினார். இந்த நிலையில் ராமன் கோவில் நில முறைகேடு விவகாரத்தில் அறிக்கை அளிக்க ராமஜென்மபூமி அறக்கட்டளைக்கு உத்தரப்பிரதேச முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.




No comments:

Post a Comment