டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
*
மேற்கு வங்கத்தில் ஆளுநரை சந்திக்கும் பாஜக சட்டமன்றக் குழுவை 24 பாஜக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்ததையடுத்து
ஆளுநர் தான்கர் டில்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திக்கிறார்.
*
தேர்தல் ஆணையர்களாக தற்போது நியமிக்கப் பட்டுள்ள மூன்று ஆணையர்களுமே உ.பி.யில்
பணியாற்றியவர்கள் என மூத்த பத்திரிக்கையாளர்
டில்லி காபாபு குறிப்பிட்டுள்ளார்.
நியூ
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
*
தான் உறுதியளித்தபடி, கரோனா நிவாரண நிதிக்கு தனது தங்கச் சங்கிலியை நன்கொடையாக அளித்த பெண்ணுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை வாய்ப் பைப் பெற்றுத் தந்துள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தி
டெலிகிராப்:
* கருத்து
வேறுபாட்டை நசுக்குவதற்கான அதன் கவலையில், அரசின் மனதில், அரசமைப்பு ரீதியாக உத்தரவாதமளிக்கும் உரிமைக்கும், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் இடையிலான கோடு ஓரளவு மங்கலாகி வருவதாகத் தெரிகிறது. இந்த மனநிலை இழுவைப் பெற்றால், அது ஜனநாயகத்திற்கு ஒரு சோகமான நாளாக இருக்கும் என்று டில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்து, பயங்கரவாதச் சட்டத்தில் சிறைப்படுத்தப்பட்ட மூன்று மாணவர்களுக்கும் பிணை வழங்கினர்.
டைம்ஸ்
ஆஃப் இந்தியா:
*
பொறியியல் மற்றும் வேளாண்மை போன்ற தொழில்முறை படிப்புகளில் அரசுப் பள்ளி மாண வர்கள் சேரும் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ள தற்கான காரணங்களை ஆராய்ந்து தீர்வு தந்திட டில்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி நீதிபதி டி.முருகேசன் தலைமையில்
ஒரு ஆணையத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா
லின் அறிவித்துள்ளார்.
- குடந்தை
கருணா
No comments:
Post a Comment