மார்ச் 12ஆம் தேதி யிலிருந்து குஜராத், டில்லி, உத்தரப்பிரதே சம், பீகார், மத்தியப் பிர தேசம் போன்ற மாநிலங் களில் கரோனா மரணங்கள் ஆக்ஸிஜன் பற்றாக்குறைபற்றி இன்றுகூட ஊடகங் களில் செய்தி வெளியா கிறது. இத்தனைக்கும் டில்லியைத் தவிர மற்ற மாநிலங்களில் மத்திய அரசை ஆளும் பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநி லங்கள் ஆகும். ஆனால், 3 மாதங்கள் கழித்து மெல்ல மெல்ல கரோனா தொற்று குறைந்த பிறகே அங்கு நிலைமை தானாகவே தணியத் துவங்கியுள் ளது. அங்குள்ள அர சுகள் ஒன்றுமே செய்ய வில்லை. ஆனால், பலத்த நெருக்கடி நிலை யில் ஆட்சிக்கு வந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழ்நாட்டில் 20 நாள் களுக்குள்ளாகவே கரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டது என்று அய்.சி.எம்.ஆர். பாராட்டியுள்ளது.
இது ஒரு செய்தியா?
'பாரத ரத்னா' விருது பெற்றவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இந்தியன் ஏர்லைன்ஸில் இலசவமாகப் பயணிக் கலாம்; அந்த வகையில் 'பாரத ரத்னா' விருது பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் 2015 முதல் 2019 வரை 21 முறை பயணம் செய்துள்ளாராம்.
இதில் என்ன குற்றம் இருக்கிறது? சட்டப்படி தானே நடந்திருக்கிறது. ஆனால், தினமலரோ (3.6.2021) ஏதோ ஒரு குற்றச் செயல்போல 4 பத்தி வெளியிட்டு சீண்டுகிறதே - ஏன்?
டெண்டுல்கர் சென் றிருந்தால் அப்படி எழு தாததற்குக் காரணம் தெரிந்ததே!
மோடி ஆட்சியில்...
மோடியின் ஏழாண் டுக் கால ஆட்சியில் அதானி - ஆசியா விலேயே இரண்டாவது பெரும் செல்வந்தராக "வளர்ச்சி!"
No comments:
Post a Comment