சீனாவில்...
சீனாவில்
பிறப்பு விகிதம் குறைந்ததால், மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள அரசு அனுமதி.
பு(ப)கை!
புகை
பிடிப்பவர்களுக்கு கரோனா பாதிப்பு அபாயம் அதிகம். - மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்த்தன் அறிவிப்பு.
ஊரடங்கு
தெலங்கானா,
அரியானா, ஒடிசா மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிப்பு.
உயிரிழப்பு
புகையிலைப்
பழக்கத்தால் இந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சம் பேர் உயிரிழப்பு!
ரூபாய்
5 லட்சம் வரை
கரோனா
சிகிச்சை பெற்றுக் கொள்வதற்கு தனிநபருக்கு ரூ.25,000 முதல் ரூ.5 லட்சம் வரை கடன் கொடுக்க பொதுத் துறை வங்கிகள் அறிவிப்பு.
ஜூன்
மாதத்தில்
கரோனா
நிவாரண நிதி இதுவரை பெறாதவர்கள் ஜூன் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
சரியான
பதிலடி
மத்திய
அரசுப் பணிகளுக்கு அனுப்ப மறுத்து பிரதமருக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா கடிதம் எழுதியதைத் தொடர்ந்து, தலைமைச் செயலாளர் பதவி விலகல் - முதலமைச்சரின் தலைமை ஆலோசகராக நீடிப்பு.
தேர்வு
ரத்து
கரோனா
பரவல் காரணமாக நடப்பாண்டு 12ஆம் வகுப்பு (சிபிஎஸ்இ) தேர்வுகள் ரத்து. தமிழ்நாட்டில் 8ஆம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி!
வழக்கு
ரத்து
அத்தியாவசியப்
பொருள்களின் விலை உயர்வைக் கண்டித்துப் போராடுவது ஜனநாயக உரிமை எனக் கூறி சிபிஎம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், சிபிஅய் மாநில செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்டவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் ஆணை.
செயற்கை
மரம்
செவ்வாயில்
செயற்கை மரம் உருவாக்கும் முயற்சி - மனிதன் குடியேறவும் திட்டம்.
பாலியல்
புகார்கள்
தமிழ்நாடெங்கும்
பள்ளி - கல்லூரி ஆசிரியர்கள் மீது 100 பாலியல் புகார்கள் குவிந்தன.
உரிமம்
ரத்து!
தெலங்கானாவில்
அதிகக் கட்டணம் வசூல் செய்த 10 தனியார் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து!
2 அடி
உயர குழந்தை!
பிரிட்டன்
பக்கிங்காம் ஷைர் பகுதி மருத்துவ மனையில் பிறந்த ஒரு குழந்தையின் உயரம் 2 அடி, எடை அய்ந்தரைக் கிலோ!
No comments:
Post a Comment