கோவில்
கருவறையில் பற்றிய தீ!
சேதமடைந்தது கோவில் கூரை!
கன்னியாகுமரி,ஜூன்2- கன்னியாகுமரியில் அமைந் துள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் கருவறையில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டது. தீவிபத்து ஏற்பட்டபோது பூசாரிகளும் வெளியே இருந்ததால் தீ மளமளவௌ கூரை
வரை பரவியது. இதில் கோவிலின் கூரை முழுவதும் சேதமடைந்தது. தீவிபத்து ஏற்பட்டவுடன் பொதுமக்களும், தீய ணைப்புத் துறை வீரர்களும் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். மண் டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இன்று காலை வழக்கம்போல் தீபாரா தனை நடைபெற்றது.
கரோனா
தொற்று பரவல் தடுப்பு நடவடிக் கையாக கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப் படுவதில்லை. காலை, மதியம், மாலை பூஜைகளை கோவில் பூசாரிகளே நடத்தி வருகின்றனர். இந் நிலையிலேயே கருவறைக் குள் தீப்பற்றி பரவியுள்ளது. தீபாராதனை செய்யப்படும் தீபத்திலிருந்து பரவிய தீயினாலேயே விபத்து ஏற் பட்டுள்ளதாக காவல்துறையினரின் முதல்கட்ட விசா ரணையில் தெரிய வந்துள் ளது.
No comments:
Post a Comment