ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 3, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

·     மேற்கு வங்க முதல்வரின் சிறப்பு ஆலோசகர் அலபன் பந்தோபாத்யாயா பிரச்சினை முடிந்து விட்டது என்கிறார் மம்தா.

·     2021-க்குள் அனைவர்க்கும் தடுப்பூசி என மத்திய அரசு சொல்வது ஒரு புரளி என மம்தா கருத்து.

டெக்கான் கிரானிகல், சென்னை:

·     செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி மய்யத்தை உடன் துவக்கிட அனுமதிக்குமாறு மத்திய சுகாதார அமைச்சருக்கு தமிழ் நாடு முதல்வர் மீண்டும் வலியுறுத்தல்.

·     தமிழ் நாட்டில் பிளஸ் 2 மாணவர்கள் தேர்வை ரத்து செய்திடாமல் தேர்வு நடத்திட பெரும்பாலானோர் கருத்து. மத்திய அரசின் மோசடி வலையில் வீழ வேண்டாம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     கேரள மாநில தேர்தலுக்கு முன்பாக தங்கள் கட்சியுடன் கூட்டணி அமைக்க முன் வந்தால் ஜே.ஆர்.எஸ். கட்சிக்கு ரூ.10 கோடி பணம் தரப்படும் என பாஜக மாநிலத் தலைவர் சுரேந்திரன் பேசியதாக  காணொலி வெளியாகி பரபரப்பு.

·     அலோபதி ஒரு முட்டாள்தனமான விஞ்ஞானம் என சாமியார் ராம்தேவ் பேச்சுக்கு உபி அரசு ஒப்புதல் அளித்ததன் பின்னணியில் இந்து சவர்ணா அமைப்புக்கு அரசின் கட்டமைப்பை உருவாக்குவதன் வெளிப்பாடாகும் என்கிறார் பத்திரிக்கையாளர் அலோக் ராய்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     மத்திய அரசின் கோவிட் தடுப்பூசி கொள்கை அடிப்படையிலேயே தன்னிச்சையானது. மறு ஆய்வு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்.

·     கோவிட் மரணங்களை அரசாங்கம் மறைத்து வருவதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இலவச தடுப்பூசி கோருமாறு மக்களுக்கு வேண்டுகோள்.

தி ஹிந்து:

·     கலாச்சாரம் மற்றும் அரசியல் அடிப்படையில், ஒரு பன்மை இந்தியாவின் கருத்தை பாதுகாக்க ஒரு கூட்டாட்சி முறை வேண்டும் என பேராசிரியர்கள் கலையரசன், விஜய பாஸ்கர் தங்கள் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.

·     ஜி.எஸ்.டி.யின் நோக்கம் இறந்து விட்டது என காங்கிரஸ் தலைவர் .சிதம்பரம் கருத்து.

தி டெலிகிராப்:

·     தத்துவ பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக உபி முதல்வர் சாமியார் ஆதித்யநாத் மற்றும் சாமியார் சாமியார் ராம் தேவ் எழுதிய நூல்கள், உபி பல்கலைக்கழகங்களில் திணிப்பு.

·     புதிய கல்விக் கொள்கை பழைய வர்ணாசிரம முறையை மீண்டும் உருவாக்குகிறது. ஒரு பேரழிவுக்கான முன்னறிவிப்பு என ஜாதவ்பூர் பல்கலைக்கழகப் பேராசிரியர் சுகந்தா சவுத்ரி குறிப்பிடுகிறார்.

·     பாஜகவின் ஹிந்துத்துவா கொள்கையை நிலை நிறுத்த அரசின் அத்தனை அமைப்புகளையும் அழிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

- குடந்தை கருணா

3.6.2021

No comments:

Post a Comment