"சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே!" - என்ற மனுதர்மப் புத்தியிலிருந்து ஒரு கடை கோடி பார்ப்பான்கூட விடுபடவில்லை என்பது அவர்களின் அன்றாட நடவடிக்கைகளின் மூலம் அறிய முடிகிறது.
ஆச்சாரியார்
(ராஜாஜி) இரண்டு முறை சென்னை மாநில முதல் அமைச்சராக இருந்தபோதும், கல்விக் கூடங்களை இழுத்து மூடும் வேலையைத் தானே செய்தார் - மனுதர்மச் சிந்தனை தானே அது!
இடஒதுக்கீடு
என்ற ஒன்றை நீதிக்கட்சி கொண்டு வந்த கால முதல் அவர்களின் ஏகபோகக் கல்வி ஆதிக்கக் கோட்டையின்மீது விழுந்த பேரிடியாகக் கருதி 'இடஒதுக்கீட்டால் தகுதி, திறமை போய்விடும். ஜாதி உணர்ச்சி வளரும்' (ஏதோ இவர்கள் ஜாதி ஒழிப்பு வீரர்கள்போல்) என்று ஒற்றைக் குரலில் பேசினார்கள் - எழுதினார்கள்.
அந்த
முயற்சியில் முற்றும் தோல்வியடைந்த நிலையில் தங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என்ற கட்டத்திற்கு வந்தார்கள். இந்த நிலை வரும் என்பதைத் தந்தை பெரியார் அவர்கள் தொலைநோக்கோடு சொன்னார் ('விடுதலை' 30.9.1970).
பொருளாதார
அடிப்படையில் 10 விழுக்காடு என்ற ஒன்றை, சட்டத்துக்கும் நீதிமன்ற தீர்ப்புகளுக்கும் எதிராக, மத்தியில் பார்ப்பன ஆதிக்க ஆட்சியில் பெற்றுக் கொண்டுள்ளனர்.
என்றாலும்
இடஒதுக்கீடு முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் மட்டும் அவர்கள் குறியாக இருந்தனர் - இருக்கின்றனர்.
'நீட்'
என்பது அந்த வகையில் திணிக்கப்படும் பின்னப்படும் சதியே! மருத்துவக் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் வேலை என்பது - தேர்வு நடத்துவதல்ல என்று உச்சநீதிமன்றம் அறுதியிட்டு தீர்ப்பு சொன்ன பிறகும்கூட திட்டமிட்ட வகையில் செயல்பட்டு 'நீட்டை' நிலைக்க வைத்து விட்டனர்.
தமிழ்நாட்டைப்
பொறுத்தவரை, ஆளும் கட்சியினரும் சரி, எதிர்க்கட்சியினரும் சரி 'நீட்'டுக்கு எதிரான கருத்தினைக் கொண்டவர்கள் தாம்!
இதுபற்றி
'துக்ளக்'கில் (9.6.2021) "தமிழர்களை ஏமாற்றும் அரசியல் வாதிகள்" எனும் தலைப்பில் கேலியும், கிண்டலும் எகத்தாளமும் தொனிக்கும் வகையில் பார்ப்பன வன்மத்தோடு கட்டுரை ஒன்று வெளிவந்துள்ளது.
தமிழ்நாடு
அரசின் உயர்கல்வி அமைச்சர் முனைவர் திரு.
க.பொன்முடி, மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டத்தில் 'நீட்'டை ஏற்க முடியாது
என்று கூறி விட்டாராம்!
அவர்
கூறிய கருத்து ஒன்றும் புதியது அல்லவே! ஏற்கெனவே திமுகவின் நிலைப்போடும் அது தானே!
இதில்
தேவையில்லாமல் 'தமிழன்' என்று குறிப்பிடும் இடங்களில் எல்லாம் இளக்காரமும், சீண்டும் தன்மை பளிச்சிடுகிறது.
தங்கள்
இஷ்டம் போல் ஆட்டம் போட மாநிலப் பட்டியலுக்குக் கல்வியைக் கொண்டு வர முயற்சிக்கிறார்களாம் - எழுதுகிறது 'துக்ளக்'. இதையே நாம் திருப்பி அடிக்க முடியுமே; ஒன்றிய அரசு தம் இஷ்டம் போல் ஆட்டம் போடத்தான் கல்வியைக் கொண்டு சென்றனர் என்று சொல்ல முடியுமே!
மாநில
அரசுகளால் 'நீட்' தேர்வுக்கு எதிராக ஒரு துரும்பைக்கூட நகர்த்த முடியாது என்பதுதான் சட்டத்தின் நிலை. இதனால்தான் பல மாநிலங்கள் 'நீட்'
தேர்வை எதிர்க்கவில்லை என்கிறது துக்ளக்.
மக்களுக்காகத்தான்
சட்டம் - இதற்கு முன்பும் பல சட்டங்கள் மாற்றப்பட்டது
கிடையாதா?
மாநில
அரசுகளால் ஒரு துரும்பையும் அசைக்க முடியாது என்று பார்ப்பன 'துக்ளக்' இறுமாப்போடு எழுதுகிறதே - அப்படியென்றால் தமிழ்நாட்டுக்கு ஓர் ஆண்டு விதிவிலக்குக் கொடுக்கப்பட்டது எப்படி?
நிரந்தரமாக
விதிவிலக்குத் தேவை என்பதற்கான இரு மசோதாக்கள் தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறை வேற்றப்பட்டுள்ளதே!
இதைப்பற்றி
எல்லாம் இவர்கள் எழுத மாட்டர்கள்; பேச மாட்டார்கள். 'நீட்' தேர்வினால் அரசுப் பள்ளி மாணவர்களும், கிராமப்புற மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர் என்பது - புள்ளி விவரங்களால் வெளிப்படுத்தப்பட்டும், அந்தப் பக்கம் எல்லாம் தலை வைத்துப் படுக்க மாட்டார்கள்.
இந்தியாவில்
பல தரப்பட்ட கல்வி முறைகள் இருக்கும் போது சி.பி.எஸ்.இ. கல்வித் திட்டத்தின்
அடிப்படையில் 'நீட்' தேர்வு நடத் துவது எப்படி நேர்மையானதாகும் - எப்படிப் பொதுவான தேர் வாகும் என்பதுபற்றி எல்லாம் பார்ப்பனர்களுக்கு எப்பொழுதுமே கவலையில்லை.
யார்
வீட்டில் பிணம் விழும், கருமாதிக்குப் போகலாம், ஆண்டுக்கு ஒரு முறை திவசம், திதி என்ற பெயரில் புரோகித சுரண்டல் தொழிலை நடத்தலாம் என்னும் பிணம் தின்னிக் கழுகுப் புத்திதான் அவர்களைப் பொருத்தவரை!
9.3.1946 அன்று
சேலத்தில் கூட்டப் பெற்ற பார்ப்பனர் மாநாட்டுத் தலைமை உரையில் சர்.சி.பி. இராமசாமி
அய்யர் சொன்னார்.
"வகுப்புவாரிப்
பிரதிநிதித்துவத்தால்
அரசியல் நிர்வாகத்தில் தகுதியும், வினைத் திட்டமும் (Merit and Efficiency) கெடலாயின" என்ற பல்லவியை நீங்கள் பாடப் பாட பிராமணரல்லாதாரின் மனதைப் புண்படுத்துவதுமன்றி, அவர்கள் பகைமையையும் பெருக்கிக் கொள்கிறீர்கள்" என்றாரே! அவர்களில் மிக முக்கியமான பார்ப்பனரே அ(இ)டித்துக்
கூறிய பிறகும்கூட நல்ல புத்திவர வில்லையே - மாறாக 'நல்ல' பாம்பாகத்தானே படம் எடுக்கிறார்கள்.
'நீட்'
திணிப்பு என்பது அதற்கான யதார்த்த கண்கண்ட சாட்சியமாகும்.
தமிழர்களே,
பார்ப்பனர்களைப் புரிந்து கொள்வீர் புரிந்து கொள்வீர்!!
No comments:
Post a Comment