‘விடுதலை' ஏட்டின் நேற்றைய (18.6.2021) முதல் பக்கத்தில் வெளிவந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கையில் முதல் காலம் நான்காவது பத்தியில்,
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக, 10.12.2015 இல் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஜஸ்டீஸ் திரு.ஆர்.சுதாகர், அவர்கள் 20.4.2007 இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்பதை,
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக, 10.12.2005 இல் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஜஸ்டீஸ் திரு.ஆர்.சுதாகர், என்று திருத்தி வாசிக்குமாறும்,
மேலும், மூன்றாவது காலம் கடைசி பத்தியில் உள்ள,
அதுபோல, சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்த மூத்த நீதிபதியான ஜஸ்டீஸ் திரு.மணிக்குமார் அவர்கள், கேரளா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு, ஓராண்டு 18 மாதங்கள் ஆகின்றன என்பதை,
சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்த மூத்த நீதிபதி யான ஜஸ்டீஸ் திரு.மணிக்குமார் அவர்கள், கேரளா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு, ஓராண்டு 8 மாதங்கள் ஆகின்றன என்று வாசகர்கள் திருத்தி வாசிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தவறுக்கு வருந்துகிறோம்.
- (ஆ-ர்)
திருத்தப்பட்ட அறிக்கையை இங்கே காண்க: https://www.viduthalai.page/2021/06/blog-post_198.html
No comments:
Post a Comment