சிறைக் கைதிக்கு இருந்த "விடுதலை" படிக்கும் ஆர்வம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 1, 2021

சிறைக் கைதிக்கு இருந்த "விடுதலை" படிக்கும் ஆர்வம்!

பாளையங்கோட்டையில் ஆயுள் கைதியாக இருந்த தோழர் ஒருவர் அக்டோபர் 1980இல் எழுதிய மடல்.

"எனது பெரு மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய மானமிகு அண்ணன் கி.வீரமணி அவர்களுக்கு மானமிகு. தம்பி .பக்கிரிமுகம்மது எழுதும் விவரம். வணக்கம். அய்யா, நான் ஆயுள் தண்டனையில் இருக்கிறேன். 12 ஆண்டு ஆகிறது: அப்படி இருந்தும் பகுத்தறிவுப் பணிக்கு வேன் நிதிக்காக என்னால் முடிந்த அளவு ரூ.15 அனுப்பி இருக்கிறேன். தாங்கள் பெற்றுக் கொண்டதற்கு உடன் கடிதம் எழுதுமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டுகிறேன். விடுதலை இதழ் வந்து கொண்டு இருக்கிறது. மிகவும் நன்றி!.

- .பக்கிரி முகம்மது

சி.என்.. 2640

மத்திய சிறை, பாளை

குறிப்பு: சிறையிலே உடல் இருந்தாலும் அந்த ஆயுள் கைதியின் சிந்தனை "விடுதலை" படிப்பதில் சிறகடித்துப் பறந்துள்ளது. இங்கு வெளியிலே உலவிக் கொண்டிருக்கும் மனிதர்களில்  எத்தனையோ பேர் "விடுதலை" படிக்கும் தன்மையின்றிச் சிந்தனை முடங்கிய சிறையிலே ஆயுளைக் கடத்துகின்றனர்.

No comments:

Post a Comment