டேராடூன், ஜூன் 17 தடுப்பூசி போடுவதைத் தவிர்க்கிறார்கள் என்று முஸ்லிம்கள்மீது பழி போடுகிறார் உத்தரகண்ட் மாநில பாஜக முன்னாள் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்.
மக்கள் தொகை அதிகரிப்பதற்கு முஸ்லிம்கள்தான் காரணம் என்று அசாம் பாஜக முதல்வர் ஹிமந்த பிஸ்வாசர்மா அண்மையில் அவதூறு செய்திருந்தார்.
இந்நிலையில், இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள், தடுப்பூசி போட்டுக் கொள்வதைத் தவிர்ப்பதாக உத்தரகண்ட் மாநில பாஜக முன்னாள் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் அடுத்த அவதூறை அள்ளி வீசியுள்ளார். உலக குருதிக்கொடை நாளையொட்டி, ரிஷிகேஷில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திரிவேந்திர சிங் ராவத் கலந்துகொண்டு பேசியுள்ளார்.
அப்போதுதான், “நமது நாட்டிலுள்ள முஸ்லிம்கள், கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதைத் தவிர்க்கின்றனர். தடுப்பூசி தொடர்பாக அவர் களுக்கு தயக்கம், அச்சம், தவறான எண்ணங்கள் உள்ளன. இந்த எண்ணத்தை சமூக அமைப்புகளும், ஊடகங்களும் போக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
மேலும், “கரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும். கரோனா தடுப்பூசியால் எந்தவிதப் பிரச்சி னையும் இல்லை என்பதை அவர் களுக்கு புரியவைக்க வேண்டும். முஸ்லிம்களின் தயக்கத்தைப் போக்க வேண்டிய கடமை நமது சமூகத்துக்கு உள்ளது'' என்று முஸ்லிம்கள் மீது அக்கறை கொண்டிருப்பதைப் போல, அவர்கள் மீது நயவஞ்சகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment