பூமிக்கு மிகவும் அருகில் இருக்கும் கோளான வெள்ளி கோளுக்கு ஆராய்ச்சி செய்ய இரண்டு திட்டங்களை தேர்வு செய்துள்ளது நாசா. டாவின்சி மற்றும் வெரிட்டாஸ் என்று அழைக்கப்படும் இந்த திட்டங்கள் அவற்றின் அறிவியல் மதிப்பு மற்றும் அவற்றின் வளர்ச்சித் திட்டங்களின் சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இதற்காக ஒதுக்கப்படும் என்றும் இந்த திட்டம் விண்ணில் 2028 - 2030 காலங்களில் ஏவப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வீனஸ் கிரகம் பற்றி...?
பூமியில் இருந்து பார்க்கும் போது சந்திரனுக்கு அடுத்தபடியாக மிகவும் பிரகாசமாக காட்சியளிப்பது வெள்ளி கிரகம் ஆகும். அதன் அடர்த்தியான மேகங்கள் ஊடே வெளிச்சம் புகுந்து பிரதிபலிப்பது அதன் பிரகாசத்திற்கு காரணம் ஆகிறது. சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் இரண்டாவது கோளான இதனை நாம் பூமியின் இரட்டை கோள் என்றும் அழைப்பதுண்டு. இரு கோள்களும் ஒரே அளவில் இருப்பதால் நாம் இதனை புவியின் இரட்டை கோள் அல்லது சகோதரி என்று கூறுகிறோம் ஆனாலும் இவ்விரு கோள்களுக்கு இடையே வேறுபாடுகளும் உண்டு.
ஒன்று,கோளின் அடர்த்தியான வளிமண்டலம் வெப்பத்தை தக்க வைக்கிறது மற்றும் சூரியனுக்கு மிக நெருக்கமான கோளான புதனுக்குப் பின் வந்தாலும், இது சூரிய மண்டலத்தின் வெப்பமான கோள் என்பதற்கு காரணமாக அது அமைகிறது. 471 டிகிரி செல்சியஸ் வரையிலும் இதன் வெப்பம் அதிகரிக்கலாம். இது காரியத்தையே உருக்கும் அளவுக்கு போதுமான வெப்பமாகும்.
சூரியனை சுற்றும் வெள்ளி கோள் முன்னோக்கி நகர்ந்தாலும் தன்னுடைய அச்சில் அது பின்னோக்கி சுழலுகிறது. இதனால் சூரியன் அந்தக்கோளில் மேற்கில் தோன்றி கிழக்கில் மறைகிறது. பின்னோக்கி சுழலுவதால் வீனஸில் ஒரு நாள் என்பது புவி நாட்களில் 243 நாட்களுக்கு சமமாகும். வெள்ளி கோளுக்கு சுற்று வளையங்களும் துணைக் கோள்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மனிதர்கள் வெள்ளிக் கோளுக்குச் சென்றதுண்டா?
வீனஸின் கடுமையான சூழல் காரணமாக இதுவரை மனிதர்கள் யாரும் இங்கு பயணம் மேற் கொண்டதில்லை. விண்கலம் அனுப்பப்பட்ட போதி லும் அது மிக நீண்ட காலத்திற்கு பயனுடையதாக அமையவில்லை. வீனஸின் மேற்பரப்பில் நிலவும் வெப்பம் காரணமாக சிறிது காலத்திற்குள் எலெக்ட்ரானிக் கருவிகள் வெப்பம் அடைகின்றன. எனவே மனிதர்கள் அங்கு வாழ்வதற்கான வாய்ப்புகளே இல்லை என்று நாசா கூறுகிறது.
பல்வேறு நாடுகள் ஆளில்லா செயற்கைக் கோள்களை இந்த கோளின் மீது ஆராய்ச்சி நடத்த அனுப்பப்பட்டுள்ளது. அந்த வகையில் ரஷ்யாவின் வெனேரா முதன்முறையாக அனுப்பப்பட்டது. ஆனால் அங்கு நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக நீண்ட நாட்கள் ஆராய்ச்சியில் ஈடுபட இயலவில்லை), நாசாவின் மகெல்லன் திட்டம் மூலம் வெள்ளி கிரகத்தை 90-94 காலங்களில் ஆய்வு செய்யப்பட்டது. நாசாவின் அகட்சுகி திட்டம் சுற்றுப் பாதையில் இருந்து வெள்ளிக்கோளை ஆய்வு செய்து வருகிறது.
தற்போதைய நாசாவின் திட்டங்கள் என்ன?
1992ஆம் ஆண்டு துவங்கிய நாசாவின் டிஸ்கவரி திட்டத்தின் ஒரு பகுதியாக இவ்விரண்டு திட்டங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஆய்வாளர்களுக்கு குறைவான வளங்களைப் பயன்படுத்தும் மற்றும் குறைந்த வளர்ச்சி நேரங்களைக் கொண்ட சில பயணங்களைத் தொடங்க வாய்ப்பு அளிக்கிறது. இரண்டு தேர்வு களும் ஒன்பதாவது கண்டுபிடிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகும், அவை 2019 இல் சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களிலிருந்து செயல்பட உள்ளது.
Deep Atmosphere Venus Investigation of Noble gases, Chemistry and Imaging என்பதன் சுருக்கம் தான்DAVINCI+ . 1978ஆம் ஆண்டுக்கு பிறகு வெள்ளிக்கோளை ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா தலைமையில் செயல்படுத்தப்படும் முதல் திட்டம் இதுவாகும். இக்கோளின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சி ஆகிய பணிகளை இது மேற்கொள்ளும். . இந்த பணி இக்கோளின் அடர்த்தியான வளிமண்டலத்தை கடந்து, அவதானிப்புகளை மேற்கொண்டு, உன்னத வாயுக்கள் மற்றும் பிற உறுப்புகளின் அளவீடுகளை எடுக்கும் பணியை மேற்கொள்ளும். தனித்துவமான ஒரு புவியியல் அம்சத்தின் முதல் உயர் தெளிவுத் திறன் புகைப்படங்களை அனுப்புவதும் இதன் நோக்கமாகும். இது உலகில் டெக்டோனிக் தகடுகள் இருப்பது போன்று வெள்ளி கிரகத்தில் டிசெரெ என்ற அமைப்பு இருப்பதை ஆய்வு செய்யும்.
‘Venus Emissivity, Radio Science, InSAR, Topo graphy and Spectroscopy’என்பதன் சுருக்கம் தான் VERITAS என்று அழைக்கப்படுகிறது. இது அந்தக்கோளின் பரப்பினை ஆய்வு செய்து வரைபடமாக்கும் மேலும் புவியில் இருந்து அதனை வித்தியாசப்படுத்துவது என்ன என்பதையும் ஆராயும். வெரிட்டாஸ் ரேடருடன் வீனஸ் கோளின் சுற்றுப்பாதையில் ஆய்வு மேற்கொள்ளும். அதன் மூலம் வீனஸின் டோப்போகிராஃபியை முப்பரிணமான கட்டமைப்பு செய்ய வழி
வகுக்கும்.
இதன் மூலம் ஆராய்ச்சியாளர்களுக்கு அங்கிருக்கும் டெக்டோனிக் தகடுகள் மற்றும் செயல்பாட்டில் இருக்கும் எரிமலைகள் பற்றிய தரவுகளை வழங்கும். இது வீனஸில் இருக்கும் பாறைகளின் வகையை தீர்மானிக்க உதவும். அதே நேரத்தில் எரிமலைகள் வளிமண்டலத்தில் நீராவியை வெளியிடுகின்றனவா என்பதையும் தீர்மானிக்க இது உதவும்.
ஆராய்ச்சிக்கு ஏன் வெள்ளி தேர்வு செய்யப்பட்டது?
சூரிய குடும்பத்தில் எவ்வாறு கோள்கள் உருவானது என்பது தொடர்பான புரிதலை DAVINCI+ நமக்கு ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. இரண்டு ஆராய்ச்சி முடிவுகளும் வெள்ளிக்கோ இன் மேக கூட்ட அடர்த்தியை பற்றியும் அங்கிருக்கும் எரிமலைகள் பற்றியும் அறிந்து கொள்ள உதவும். அங்கு உயிர்வாழதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அறிந்து கொள்ளவும் இது உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment