- செய்தியாளர்களிடையே பேரவைத் தலைவர் அப்பாவு -
சென்னை, ஜூன் 19 சட்டசபை கூட்டத் தொடரில் அனைத்து கட்சிகளுக்கும் அரசியல் பேதமின்றி வாய்ப்பு வழங் கப்படும் என்று பேரவைத் தலைவர் அப்பாவு கூறினார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையான ராஜ்பவனுக்கு தமிழக சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு நேற்று (18.6.2021) சென்றார். தமிழக சட்டசபையில் 21 ஆம் தேதி கூடும் கூட்டத்தொடரின் முதல் கூட் டத்தில் உரையாற்ற வரும்படி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு பேரவைத் தலைவர் மு.அப்பாவு அழைப்பு விடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேர வைத் தலைவர் அப்பாவு அளித்த பேட்டி வருமாறு:-
16 ஆம் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் 21 ஆம் தேதி தொடங் குகிறது. முதல் நாள் கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்துவார். எனவே சட்டசபை கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு ஆளுநரை பேரவைத் தலைவர் சந்தித்து அழைப்பது வழக்கமாக உள்ளது. அதன்படி ஆளுநரை சந்தித்து அழைப்பு விடுத்தேன். அவரும் மகிழ் வுடன் வருவதாக ஒப்புதல் அளித்தார்.
சட்டசபை கூட்டத்தொடரை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. அது பரிசீலனையில் உள்ளது. கட்டாயம் அது நிறைவேற்றப்படும்.
முதலமைச்சர் ஏற்கெனவே சொன் னதுபோல, ஜனநாயக முறைப்படி விருப்பு வெறுப்பின்றி அனைத்து கட்சிகளுக்கும் சட்டசபையில் பேசும் வாய்ப்புக்கான நேரம் ஒதுக்கப்படும். மக்களுக்கு வழங்கப்படும் 14 வகை மளிகைப் பொருட்களை அனைத்துக் கட்சி சட்டசபை உறுப்பினர்களும் மக்களுக்குக் கொடுக்கச்சொல்லி முதலமைச்சர் கூறியுள்ளார். அதுபோன்ற ஜனநாயகம் சட்டசபையிலும் நடக்கும்.
இந்த கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் கூட்ட வேண்டும் என்பது குறித்து, 21 ஆம் தேதி சட்டசபையில் ஆளுநர் உரை நிகழ்ச்சி முடிந்த பிறகு ஆய்வுக்குழு கூடி முடிவெடுத்து அறிவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment