ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 1, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

1.6.2021 டெக்கான் கிரானிகல், அய்தராபாத்:

·    கரோனா தடுப்பூசி விலை நிர்ணயத்தில் குளறு படி இருப்பதாக மத்திய அரசுக்கு கண்டனம் தெரி வித்துள்ள உச்ச நீதிமன்றம், மாநிலங்களுக்கு மட்டும் ஏன் அதிக விலைக்கு தடுப்பூசி தரப்படுகிறது என கேள்வி எழுப்பியுள்ளது.

 · மராட்டியர்களுக்கு பிற்படுத்தப்பட்டோர்க்கான இட ஒதுக்கீடு செல்லாது என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை யடுத்து, உயர்ஜாதியினரில் வருமானம் குறைந்தோர்க்கான 10 சதவீத இட ஒதுக்கீடு மராட்டியர்களுக்கு உண்டு என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.

 · மக்களுக்கு எதிரான ஆணைகளைப் பிறப்பித்துவரும் லட்சத்தீவின் அதிகாரியை மத்திய அரசு நீக்கிடக் கோரும் தீர்மானத்தை கேரள சட்டமன்றத்தில் பினராயி விஜயன் தலைமையிலான அரசு நிறைவேற்றியுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

· மத்திய அரசே தடுப்பூசியை கொள்முதல் செய்து மாநிலங் களுக்கு இலவசமாக வழங்க கூட்டாக வலியுறுத்த கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழக முதலமைச்சர் மு..ஸ்டாலின் உள்பட 11 மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

தி டெலிகிராப்:

· மேற்கு வங்க தலைமைச் செயலாளர் அலபன் பந்தோபாத்யாய பணி நிறைவு அடைந்ததையடுத்து, அவரை சிறப்பு ஆலோசகராக  மூன்று ஆண்டுகளுக்கு நியமித்து ஆணை பிறப்பித்தார் மம்தா.

· 7 ஆண்டுகால மோடி ஆட்சியில் அரசு வங்கிகளில் ரூ.5 லட்சம் கோடி அளவிற்கு மோசடிகள் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

· மோடி அரசின் எதேச்சாதிகாரத்தை எதிர்த்து அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  - குடந்தை கருணா

No comments:

Post a Comment