மாநிலம் முழுவதும் நடைபெறும் பெரியாரியல் பயிற்சி மாணவர்களின் பின்னூட்டக் கருத்துகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 15, 2021

மாநிலம் முழுவதும் நடைபெறும் பெரியாரியல் பயிற்சி மாணவர்களின் பின்னூட்டக் கருத்துகள்

மாநிலம் முழுவதும் நடைபெறும் பெரியாரியல் பயிற்சி மாணவர்களின் பின்னூட்டக் கருத்துகள் இங்கே தொகுத்துத் தரப்படுகின்றன.

அவ்விவரம் வருமாறு:

எக்காலத்திற்கும் பொருந்தும் 5 வரி!

சுயமரியாதைத் திருமணம்- இந்தி எதிர்ப்பு-கடவுள் எதிர்ப்பு (மூடநம்பிக்கை, சாஸ்திரம், புராணம், சகுனம், கோயில், மோட்சம், நரகம்) திண்டுக்கல், கடலூர், திரு வாரூர், கும்பகோணம், மதுரை மாநாடு மற்றும் கூட்டங்கள்- துலாபாரம் மற்றும் பரிசுகள்- மனித நேயம் - கொள்கை மய்யப்புள்ளி (உலகிற்கு பொதுவானது) - பெண்ணடிமை - 193 நாடுகளுக்கும் யோசித்தார் - அறிவு சொல்வதை கேள் - அறிவு, ஆற்றல், இன்பம் ஆகியவை அடைய தடையாய் இருபதற்காக கடவுளை எதிர்த்தார். இட ஒதுக்கீடு - ஆதிக்கத்தின் எதிரி,  கடவுள் இல்லை, ஜாதி ஒழிப்புப்பற்றி கூறியதும் எக்காலத்திற்கும் பொருந்தும் 5 வரி என கூறியதும் சிறப்பு!

- திவ்யா, திண்டுக்கல்

முதல் நாள் வகுப்பு  மிகவும் சிறப்பு!

12.06.2021 ஆம் நாளின் பெரியாரியல் பயிற்சி வகுப்பில், "தந்தை பெரியார் ஓர் அறிமுகம்"  என்ற தலைப்பில், தமிழ் பேராசிரியர் அய்யா நம்.சீனிவாசன் அவர் கள் தந்தை பெரியாரின் உருவ அறிமுகம் முதல் கொள்கை, தனித்தன்மை, பயணம், போராட்டங்கள், பதவி துறத்தல், UNESCO  விருது, நோக்கம் ஆகிய அனைத்தையும் சுருக்கமாகவும், மிக எளிமையான முறையிலும் எடுத்துரைத்து, ஆரம்ப மாணவர்களுக்கு பயனுள்ளவாறு தந்தை பெரியார் ஆதிக்கத்தின் எதிரி என்றும், தொலைநோக்குச் சிந்தனையாளர் என்றும் மிகச் சிறப்பான கருத்துகளை பகிர்ந்துக் கொண்டார். முதல் நாள் வகுப்பு மிகவும் சிறப்பு!

- .தில்ரேஷ், திண்டுக்கல்

வாருங்கள்! தோழர்களே,... பெரியாரோடு  பயணிப்போம்!

வணக்கம். பெரியாரியல்  வகுப்பு மிகவும் சிறப்பாக உள்ளது. நிறைய தகவல்களை ஒரு மணி நேரத்தில் அழகாக விளக்கி விடுகின்றனர் ஆசிரியர்கள். பெரியார் பற்றி அதிகமாக தெரிந்து கொண்டேன். அந்த மாமனிதரை நினைத்தாலே இன்னும் வியப்பாக இருக்கிறது, இன்னும் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். இந்த 15 நாள் வகுப்பும் நிச்சயமாக பயனுள்ள வகுப்பாக எனக்கு அமையும்.  மிகச் சரியான முறையில் வகுப்புக்களை நடத்துகிறார்கள். வாருங்கள்! தோழர்களே,... பெரியாரோடு  பயணிப்போம்! என்றும் அய்யாவின் நினைவுகளில்...

- முனீஸ்வரன், காரைக்குடி

இணையதளம் போன்றவற்றில் இல்லாத தரவுகள்கூட...

பெரியாரால் நான் இன்று முதல் தலை முறை சட்டக்கல்லூரி மாணவன். தலைவரின்  கருத்துகளை என் கொள்கையாக ஏந்திப் பயணிப்பது நான் அடைந்த பயனுக்கு காட்டும்  நன்றியுணர்ச்சி என்றே நான் கருதுகிறேன். சமுதாய களப் பணியில் எந்த தொய்வுமின்றி பணியாற்றிவரும் மூத்த பேராசிரியர்கள், உற்சாகப் பெருக் கோடு பெரியாரியலை புதிதாக வரும் தோழர்களுக்கு ஏற்றவாறு பயிற்சி வகுப்புகளாக நடத்துகின்றனர். கேட்கும் கேள்விக்கு வரலாற்றுத்  தரவுடன் சுலபமாக, பொறுமையாக பதிலளித்து வருகின்றனர் என்பது மகிழ்ச்சியாகவே உள்ளது.

இனிவரும்  நாள்கள் எவ்வாறு இருக்கும் என்ற அவாவிலேயே ஒவ்வொரு நாள் வகுப்பிற்கும் வருகிறோம். தொடர்ந்து பெரியார் கரம் பற்றிப் பயணிப்போம். பய னுள்ளதாக அமைகிறது. இணையதளம் போன்றவற்றில் இல்லாத தரவுகள்கூட, இவ் வகுப்பின் வழியே எங்களுக்கு கிடைப்பது ஒரு நல்வாய்ப்பாக உள்ளது. கரோனா காலகட்டத்தில் நூலகங்களுக்கு சென்று பகுத்தறிவை விருத்தி செய்ய இயலாத குறையை, இவ்வகுப்பு பூர்த்தி செய்வதாகக் கருத முடிகிறது.

- பாலாஜி, சென்னை.

எங்கள் பாதையும், கருவியும் எதுவென உறுதிப்படுத்த உதவுகிறது!

இந்த வகுப்பு தேடலையும், இலக்கையும் தெளிவாக்கி உள்ளது. இந்த சமூகம் எதிர் கொண்ட சமமின்மையும் அதன் விளை வாய் நாம் இயல்பாய் ஏற்றுகொண்ட இழி நிலையும் என்ன என்பதை ஆதாரங் களோடு தெளிவுப்படுத்துவது இன்னும் பலம் ஊட்டுவதாய்  உள்ளது. இது எங்கள் பார்வையை சிதறடிக்காமல், எங்கள் பாதையும், கருவியும் எதுவென உறுதிப் படுத்த உதவுகிறது.

இளவேனில், சென்னை

எங்களுக்கு புத்துணர்ச்சியைத் தருகிறது!

தந்தை பெரியாரின் கொள்கைகள் எவ்வளவு தேவை என்பதை உணர்ந்தோம் இந்த வகுப்பால். அது எங்களுக்கு புத்துணர்ச்சியைத் தருகிறது. இதைத் தொடர்ந்து கவனித்து தந்தை பெரியாரின் கொள்கைகளைதெரிந்துகொள்ளவிரும்பு கிறோம். எங்கள் ஊர் வீராக்கன் கிராமத்தி லிருந்து 11 மாணவர்கள் பங்கு பெற்றிருக் கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரி வித்துக் கொள்கிறோம் - சிறப்பு! மகிழ்ச்சி அளிக்கிறது அய்யா!

- எஸ்.எஸ்.திராவிடசெல்வன் வீராக்கன்,

செந்துறை ஒன்றியம், அரியலூர் மாவட்டம்

பகுத்தறிவினைப்பற்றி முழுதும் அறிய இப்பயிற்சி வகுப்பு பேருதவி புரிகிறது

எங்களைப் போன்ற இளந்தலைமுறையி னர்க்கு இன்பம். இன்றைய கால சூழ லென்பது வேற்றுமொழிப் படையெடுப்பு, பண்பாட்டுச் சீரழிப்பு, வடநாட்டார் ஊட றுப்பு, அடிமையாதல், உரிமைப் பறித்தல், மக்களைப் பிரித்தல் என்று பல் விதத்தில் பெருகி வருகிறது. ஆனால், அவையெதுவும் தமிழ்நாட்டில் நிலைப்பதில்லை என்பதற் கான ஒற்றைக் காரணம் பெரியார் இன்னும் வாழ்கிறார் என்பதே ஆகும். ஆம்! அவர் கருத்தும், அவர் ஊட்டிய பகுத்தறிவும் இன்னும் வாழ்கிறது. இனியும் வாழும்! அத்தகைய பகுத்தறிவினைப்பற்றி முழுதும் அறிய இப்பயிற்சி வகுப்பு பேருதவி புரிகிறது.

அவர் அன்று போராடி வென்ற இட ஒதுக்கீடுதான் நாங்கள் பள்ளியிலும், கல்லூரி யிலும் படித்துக் கற்றுயர இன்று உதவுகிறது.

காளிமுத்து அய்யா விரிந்து உரைத்த இட ஒதுக்கீடுபற்றிய செய்திகள், அருள் மொழி அம்மா கூறிய சமூக நீதியும் பெண்ணுரிமையும் குறித்தான செய்திகள், கலி.பூங்குன்றன் அய்யா இன்னும் பல்லோர் பெரியார்பற்றி நிகழ்த்தியப் பேருரைகள் எல்லாம் என்னை வியப்பில் ஆழ்த்தின.

அத்தகைய 'மகானைப்'பற்றி அறிய இந்தத் தளத்தினை அமைத்துக் கொடுத்துப் பெரியாரினை உயிர்ப்புடன் வைத்திருக்கும் உங்களுக்கென் வணக்கங்கள்!

இன்னும் பெரியாரைப் பற்றியும் அவர் போராட்டங்களைப் பற்றியும் முழுதறியக் காத்திருக்கிறேன்.

நன்றி!

- பாவலர். தனியெழிலன்,

தஞ்சை

பெரியார் எவ்வழியோ, அவ்வழியே மாணவர்கள்!

நடந்த மூன்று வகுப்புகளும் மிகவும் அருமையான பதிவுகளை கொண்டது. எனக்கு பெரியாரைப்பற்றி ஒரு சில விஷ யங்கள் மட்டும்தான் தெரியும். ஆனால் இந்த காணொலி மூலம் இன்னும் அதிகமாகக் கற்றுக்கொண்டேன். இன்னும் இந்த வகுப்பின் மூலம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். பெரியார் எவ்வழியோ, அவ்வழியே மாண வர்கள்!

 - சு. சத்தியப்பிரியா, நெல்லை

No comments:

Post a Comment