மீனவர்கள் கொலையில் இத்தாலிய கப்பல் பாதுகாப்பு வீரர்களுக்கு எதிரான வழக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 16, 2021

மீனவர்கள் கொலையில் இத்தாலிய கப்பல் பாதுகாப்பு வீரர்களுக்கு எதிரான வழக்கு

உச்சநீதிமன்றத்தில் முடித்து வைப்பு

புதுடில்லி,ஜூன்16- கேரள கடல் பகுதியில் கடந்த 2012ஆம் ஆண்டு மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர் அஜஸ்பிங்க், கேரள மீனவர் ஜெலஸ்டின் ஆகியோர், அவ்வழியாக வந்த தனியார் நிறுவன சரக்குக் கப்பலின் இத்தாலிய பாதுகாப்பு வீரர்கள் மாசிமிலியானே லாத்தோரே, சால்வத்தோரே கிரோனே ஆகி யோரால் துப்பாக்கியால் சுட்டு கொல் லப்பட்டனர். இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட 2 இத்தாலி வீரர்களும் 2013-ஆம் ஆண்டு சிறை விடுப்பில் சொந்த நாடு செல்ல அனுமதிக்கப் பட்டனர். ஆனால் அவர்களை திரும்ப இந்தியாவிடம் ஒப்படைக்க இத்தாலி அரசு மறுத்துவிட்டது. இந்திய சட்டங் களின்கீழ் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று கோரி பன்னாட்டு நீதிமன்றத்தையும் நாடியது.

பன்னாட்டு நீதிமன்றம் தீர்ப்பு: அவர்கள் மீது இந்தியா சட்ட நட வடிக்கை எடுப்பதில் இருந்து விலக்குப் பெற முடியும் என்று பன்னாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் இந்திய தரப்புக்கு இழப்பீடு பெறுவதற்கு உரிமை உள்ளது என நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள பெர்மனென்ட் கோர்ட் ஆப் ஆர்பிட்ரேஷன் தெரிவித்தது.இத்தாலிய வீரர்கள் மீது இந்தியா நடவடிக்கை எடுக்க முடியாது என்று பன்னாட்டு நீதிமன்றம் தெரிவித்திருந்தாலும், அவர்கள் இதை கொலை வழக்காக இத்தாலிய சட்டங் களின்படி எதிர்கொள்ள வேண்டும் என்று கூறியது.

இந்திய ஒன்றிய அரசுக்கு உத்தரவு: இதற்கிடையே மாசிமிலியானே லாத் தோரே தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இத்தாலிய வீரர்களால் கொல்லப்பட்ட 2 இந்திய மீனவர்களுக்கு அந்நாட்டு அரசு வழங்கிய ரூ.10 கோடி இழப்பீட்டுத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்த ஒன்றிய அரசுக்கு கடந்த 9ஆம் தேதி உத்தரவிட்டது.இந்நிலையில், இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, எம்.ஆர்.ஷா ஆகி யோர் அடங்கிய கோடைகால விடுமுறை அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

இந்திய மீனவர்களுக்கு இத்தாலி வழங்கிய ரூ.10 கோடி இழப்பீடு திருப்தி அளிக்கிறது. இத்தாலிய பாதுகாப்பு படை வீரர்கள் மாசிமிலியானே லாத்தோரே, சால்வத்தோரே கிரோனே ஆகியோருக்கு எதிரான வழக்கை முடித்து வைக்கிறோம். உச்சநீதிமன்றத் தில் செலுத்தப்பட்ட ரூ.10 கோடி இழப்பீட்டுத் தொகையை கேரள உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகத் துக்கு மாற்ற உத்தரவிடுகிறோம். அதில் தலா ரூ.4 கோடியை இந்திய மீனவர் களின் இரு குடும்பங்களுக்கும், மீத முள்ள ரூ.2 கோடியை காயமடைந்த படகு உரிமையாளருக்கும் வழங்க வேண்டும். இழப்பீட்டுத் தொகையை பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாரிசு களுக்கு பிரித்து அளிப்பதை உறுதி செய்ய உரிய உத்தரவைப் பிறப்பிக்க நீதிபதியை கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமிக்க வேண்டும்.

இவ்வாறு கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment