மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்,
மதுரை
மாநகரத்திற்கு, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சியின் போது எண்ணற்ற திட்டங்கள் தீட்டி பெருமை சேர்த்தார். பெரியார்
சமத்துவபுரம், உழவர் சந்தை,பாலங்கள், தலைவர்களுக்கு சிலை, மணி மண்டபங்கள் என ஏராளம் அமைத்தார்
மதுரைக்கு
பெருமை சேர்த்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு மதுரை மக்கள் பெருமை தரும் விதமாக, ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு *முத்தமிழ் அறிஞர் கலைஞர் பேருந்து நிலையம் “ என்று மாண்புமிகு முதலமைச்சர் தளபதியார் அவர்கள் பெயர்சூட்டவேண்டும்.
மதுரையில்
பெரியார், அண்ணா பேருந்து நிலையம் உள்ள நிலையில் கலைஞர் அவர்கள் பெயரும் இடம் பெற்றால் மதுரை மண் மேலும் பெருமை அடையும்.
ஆரப்பாளையம்
பேருந்து நிலையத்திற்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் பேருந்து நிலையம் என்று பெயர்சூட்ட மாண்புமிகு முதலமைச்சர் தளபதியார் அவர்களுக்கு “விடுதலை” நாளிதழ் வழியாக வேண்டுகிறேன்.
மு.
சு. அன்புமணி,
காந்தி
நகர், மதுரை - 20
No comments:
Post a Comment