‘நீட்’ பிரச்சினையில் மாணவர்களை குழப்பியது யார்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 19, 2021

‘நீட்’ பிரச்சினையில் மாணவர்களை குழப்பியது யார்?

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்



சென்னை, ஜூன்.19- ’நீட்பிரச்சினை தொடர்பாக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் .பன்னீர்செல்வம் விடுத்த அறிக்கையில், நேற்று (18.6.2021) செய்தியாளர் சந்திப்பில் பதிலடி கொடுத்த மருத்துவம் மற்றும் மக் கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘நீட்தேர்வுப் பிரச்சினையில் மாணவர்களைக் குழப்பியது யார்? எனக் கேள்வி எழுப்பியதோடு, இப்பிரச்சினைக்கு முழுக் காரணம் .தி.மு.. அரசு தான் என்பதற்கு அடுக்கடுக்கான ஆதாரங்களை எடுத்துரைத் தார்.

மேலும், தமது பேட்டியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன், ‘நீட்தேர்வு குறித்து கழக அரசு அமைத்துள்ள நீதியரசர் .கே. ராஜன் தலைமையிலான குழு தரும் அடிப்படையில் கழக அரசுநீட்தேர்வை ரத்து செய்யும் - என உறுதியளித்தார்.

முதல்வர் அவர்களின் வழி காட்டுதலின் படி நேற்று (18.6.2021) சென்னை தலைமைச் செயலகத்தில் நீட் தொடர்பான எதிர்க்கட்சித் துணைத் தலைவர் .பன்னீர்செல் வம் அறிக்கைக்கு மருத்துவம் மற் றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச் சர் மா.சுப்பிரமணியன் செய்தியா ளர்களைச் சந்தித்து தெளி வான பதில் அளித்தார்.

அதன் விவரம் வருமாறு: எதிர்க்கட்சித் துணைத் தலைவர் .பன்னீர்செல்வம் அண்மையில் நீட் தேர்வு குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டியிருந்தார். அதில் நீட் தேர்வு பயிற்சிகள் தமிழகத்தில் நடை பெறுவதால் மாணவர்கள் குழப்பம் அடைவதாகத் தெரிவித்துள்ளார். .தி.மு. ஆட்சிக் காலத்தில்தான் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் பள்ளிக்கல்வித் துறை மூலம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் .பன்னீர்செல்வம் மாணவர்களுக்காக கவலைப் பட் டுப் பேசுகிறாரா? அல்லது அரசி யல் செய்ய வேண்டுமென் பதற்காக பேசுகிறாரா? என்ற குழப்ப நிலை உள்ளது.

நீட்தேர்வு பற்றி ஆராய குழு அமைப்பு!

நீட்தேர்வு பயிற்சி வகுப்புகள் பற்றி குழப்பம் கொள்ள வேண்டிய தேவை இல்லை. தி.மு.. ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வ தற்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளபடி அறிவித்த தற்கேற்ப, தி.மு.. ஆட் சிக்கு வந்த பிறகு தமிழக முதல மைச்சர் அவர்களின் வழிகாட்டுத லின் படி, சரியான அளவில் முறை யான வழிகாட்டு நெறிமுறைகளின் படி இனிமேல் நீட் தேர்வு நடை பெறாமல் இருப்பது குறித்து ஆராய நீதியரசர் .கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அக்குழுவிற்கு ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அக்குழு அமைக்கப் பட்டு ஒரு வார காலத்திற்குள் நான்கு தொடர் கூட்டங்களை மிக வேகமாக நடத் தியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாண்பு மிகு தமிழக முதல்வர் அவர்கள் டில்லியில் பிரதமரை சந்தித்தபின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்க கோரிக்கை வைக்கப்பட்டது பற்றி யும், அதை கனிவுடன் பரிசீலிப்ப தாக பிரதமர் அவர்கள் தெரிவித் ததையும் குறிப்பிட்டுள்ளார். நீட் தேர்விற்கு விலக்கு கிடைக்கும் என் பதில் மாற்று கருத்திற்கு இட மில்லை.

ஆனால் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் நீட் தேர்வு தொடங்கப் பட்டது போல் கருத்து தெரிவித் துள்ளார். 2010 டிசம்பர் 27 அன்று ஒன்றிய அரசு குறிப்பாக தேசிய தகுதி மற்றும் இந்திய மருத்துவ குழுமம், மருத்துவம் மற்றும் மருத் துவ மேற்படிப்பு களுக்குநீட்தேர்வை அறிமுகப்படுத்தியது. 2011 ஜனவரி 3ஆம் நாள் தேசிய அளவில் மருத்துவம் மற்றும் மருத் துவ மேற்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வை பரிசீலிக்க வேண்டுமென்று தமிழக அரசைக் கேட்டுக்கொண்டது.

தி.மு.. ஆட்சிக் காலத்தில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

2011ஆம் ஆண்டு ஜனவரி 6 அன்றுதான், தமிழக முதலமைச் சராக இருந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நீட்த் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, அவ்வழக்கில் தடையாணையும் பெற்றுத் தந்தார். தி.மு.. ஆட்சிக் காலத்தில்தான் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

2017இல் ஆட்சியில் இருந்த .தி.மு.. அரசு மருத்துவம் மற் றும் பல் மருத்துவம் சார்ந்த படிப்பு களில் நீட் தேர்விற்கு விலக்கு அளிக்கக் கோரி சட்ட மன்றத்தில் இரண்டு தீர்மானங் கள் நிறைவேற் றப்பட்டது. அத்தீர்மானத்திற்கு அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் - இன்றைய தமிழக முதலமைச்சர் அவர்கள் முழு ஆதரவு அளித்து அத்தீர்மானங்கள் நிறைவேற கார ணமாக இருந்தார்.

அந்த மசோதாக்கள் ஒன்றிய அரசின் கவனத்திற்கு, அதாவது குடியரசுத் தலைவர் ஒப்புதலுக் காக அனுப்பி வைக்கப்பட்டது. அதிமுக அரசின் சார்பில் எந்த விதமான அழுத்தம் மற்றும் தொடர் வலியுறுத்தல்கள் இல்லாத கார ணத்தால் குடியரசுத் தலைவர் அவர்கள் ஒப்புதல் தராமல் நிறுத்தி வைத்தார். சட்ட முன் வடிவை உள் துறை அமைச்சகமும், குடியரசுத் தலைவர் ஒப்புதல் தராததால் திருப்பி அனுப்பப் படுவதாக தெரிவித்தது. அப்போதெல்லாம் எதிர்க் கட்சித் துணைத் தலைவர் எந்த விதமான கருத்துக்களையும் தெரி விக்கவில்லை . தமிழக மாணவர் களுக்காகப் பரிந்து எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

நீட்தேர்வை விலக்க கழக அரசின் முழு முயற்சி!

ஆனால் இப்போது நீட் தேர் விற்கு எதிரான தீவிர நடவடிக் கையில் ஈடுபடும் போது, நீட் தேர் விற்கு மாணவர் களுக்கு பயிற்சி அளிப்பது குழப்பத்தை ஏற்படுத்து வதாக தெரிவித்துள்ளார். நீட் தேர்வு இல்லாமல் மாணவர்களின் சேர்க்கை நடைபெற வேண்டு மென்று தெரிவித்துள்ளார்.) நிச்ச யமாக அவருடைய கருத்திற்கேற்ப தி.மு.. நீட் தேர்வை விலக்குவதற்கு தேவையான முழு முயற்சிகளை முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது.

நீட் தேர்வை மறுபடியும் நடை முறைக்கு கொண்டுவந்தது யார்? மாணவர்களின் மன உளைச்சலுக்கு காரணமாக இருந்தவர்கள் யார்? மாணவர்களின் தொடர் குழப்ப தற்கு காரணமானவர்கள் யார்? என்று தமிழக மக்களுக்குத் தெரி யும். இந்த விவரங்களெல்லாம் அவருக்கும் தெரியும். தெரிந்திருந் தும் இதுபோன்ற குழப்ப அறிக் கையை ஏன் வெளியிட்டார் என்று தெரியவில்லை.

மாணவர்கள் நீட் தேர்விற்குத் தயாராவ தென்பது கடந்த 4 ஆண்டுகளாகவே நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கேற்றாற் போல் மாணவர்களும் நீட் தேர் விற்கு தயாராகிக் கொண்டிருக் கிறார்கள். ஆனால் நீட் தேர்வி லிருந்து விலக்கு பெற வேண்டும் என்பது தமிழக அரசின் முடிவு எண்ணம்.

ஆனால் கடந்த கால அதிமுக அரசு, குடியரசுத் தலைவரிடம் தெளிவாக விளக்கிக் கூறி நீட் தேர்விற்கு விலக்குபெறாமல் விட்டு விட்டது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது டாக்டர் அனந்தகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் குழு அமைத்து நீட் தேர்விற்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் தடையா ணைப் பெற்று நீட் தேர்வை ரத்து செய்தது திமுக ஆட்சியில்தான். அதேபோல் இப்போது ஓய்வு பெற்ற நீதியரசர் .கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப் பட் டுள்ளது. ஒரு மாதத்திற்குப் பிறகு அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப் படையில்தான் அதற்கான மேல்நடவடிக்கை தொடரும்.

மேலும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அவர்கள்ஆன்லைன் வகுப்புகளில் இருக்கிற கஷ்டங்கள் தெரியாதா? என்று கேட்கிறார். அந்த ஆன்லைன் வகுப்புகளும் தொடங்கப்பட்டது கடந்த ஒன் றரை ஆண்டுகளுக்கு முன்புதான். அதுவும் இப்போது தொடங்கப் பட்டதுபோல் பேசுவதுதான் ஆச் சரியமாக உள்ளது.

கடந்த கால அதிமுக ஆட்சியில் மசோதா நிறைவேற்றப்பட்டு குடி யரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு தொடர்ந்து வலியுறுத்தல் இல்லா மல், உள்துறை அமைச்சகத்தால் திருப்பி அனுப்பப்பட்டது போல் இல்லாமல், நீட் தேர்விற்கு எதி ரான வலுவான காரணங்களை ஆராய்வதற்காக நீதியரசர் .கே.ராஜன் அவர்கள் தலைமை யில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக் குழு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது அமைக்கப்பட்ட டாக்டர் அனந்தகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட குழு போல் செயல்பட்டு அப்போது நீட் தேர்வுகள் ரத்து செய்யப்பட் டது போல் இப்போதும் ரத்து செய்யப்படும். இவ்வாறு மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச் சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.

No comments:

Post a Comment