குருமூர்த்திகளே! ஜோஸியம் என்னாச்சி? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 16, 2021

குருமூர்த்திகளே! ஜோஸியம் என்னாச்சி?

கேள்வி: 'மு.. ஸ்டாலினுக்கு அவரது ராசிப்படி முதல்வராகும் யோகம் கிடையாது' என்று பல ஜோதிடர்கள் சொல்லும் ஆரூடம் பற்றித் தங்கள் கருத்து?

துக்ளக் பதில்: எனக்கு ஜோஸியத்தில் ஏராள நம்பிக்கை இருப்பதால் நான் ஜோஸியம் பக்கம் போகவே அஞ்சுவேன். ஆனால் கடவுளிடம் நம்பிக்கை இல்லாத கழகத்தினர்கள்கூட ஜோஸியத்தை நம்பு கிறார்கள், ஜோஸியரிடம் போகிறார்கள். ஸ்டாலினும் அந்த ரகத்தைச் சேர்ந்தவர் என்றால் ஜோஸியர்கள் இப்படிக் கூறு வதைக் கேட்டு, அவரால் தூங்க முடியாது, பாவம்.

'துக்ளக்'கின் இந்தப் பதில் மூலம், ஜோஸியம் என்பது பொய்யென்று பச்சை யாக நிரூபணமாகி விட்டது. இப்பொழுது தூக்கம் கெட்டுப் போனவர்கள் யார் என் பதை அறிவு  நாணயத்தோடு குருமூர்த்தி கும்பல் சொல்லட்டும் பார்க்கலாம்.

அறிவு நாணயமா? அது கிலோ என்ன விலை என்று கேட்பவர்கள் ஆயிற்றே!

No comments:

Post a Comment