ஏட்டுத் திக்குகளிலிருந்து... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 18, 2021

ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* உலகப் புகழ் பெற்ற மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் தலைவராக ஆந்திராவைச் சேர்ந்த சத்யா நாதெள்ளா நியமிக்கப்பட்டுள்ளார்.

* பெண்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவார்கள் என்ற தமிழ் நாடு இந்து அற நிலையத்துறை அமைச்சரின் அறிவிப்பு தந்தை பெரியார் மண்ணில் சாத்தியமே என தலையங்கச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* .பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பாஜகவைத் தவிர்த்து சட்டமன்றத் தேர்தலில் சொந்தமாகப் போராட முடியும். அவ்வாறு செய்வதற்கான தனது திறனை நம்பியுள்ள யோகி ஆதித்யநாத், டில்லியில் வளைந்து அல்லது மண்டியிடத் தேவையில்லை என மூத்த பத்திரிக்கையாளர் ஆனந்த் கே.சகாய் குறிப்பிட்டுள்ளார்.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* பிரதமர் மோடியை முதல்வர் மு..ஸ்டாலின் நேற்று மாலை சந்தித்து, நீட் தேர்வு ரத்து, கூடுதல் தடுப்பூசி, ஜிஎஸ்டி நிலுவைத் தொகை வழங்குதல் உள்ளிட்ட 25 முக்கிய கோரிக்கைகளை வைத்தார்.

டெக்கான் ஹெரால்டு:

* மராட்டியர்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்த உச்ச நீதிமன்றத்தின் மே 5 தீர்ப்பை எதிர்த்து மகாராட்டிரா அரசு அடுத்த வாரம் உச்சநீதிமன்றத்தில் மறுஆய்வு மனு தாக்கல் செய்யும் என்று மூத்த அமைச்சர் தெரிவித்தார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பயங்கரவாத சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஆசிப் தன்ஹா, நடாஷா நர்வால் மற்றும் தேவங்கனா கலிதா ஆகியோருக்கு உச்ச நீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவு, நமது சிவில் உரிமைகள் அரசு அதிகாரத்தினால் விழுங்கப்படுவதைத் தடுப்பதற்கான வரவேற்கத்தக்க முயற்சியாகும் என மூத்த பத்திரிக்கையாளர் பானு பிரதாப் மேத்தா குறிப்பிட்டுள்ளார்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் சித்ரகூட்டில் ஜூலை 9 முதல் ஜூலை 13 வரை நடைபெறவுள்ள முக்கிய அமர்வில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.

- குடந்தை கருணா

No comments:

Post a Comment