ஆசிரியருக்குக் கடிதம் - பள்ளிகளில் மனநலப் பாடம் தேவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 16, 2021

ஆசிரியருக்குக் கடிதம் - பள்ளிகளில் மனநலப் பாடம் தேவை

மானமிகு ஆசிரியர் அய்யா

இன்று மனவளம் பற்றி திருமதி உலகம்மாள் ஆற்றிய சொற்பொழிவு அறிவுவழி காணொலி வழியாக கேட்டு மகிழ்ந்தேன்.

பெரியார் வழி நடக்கும் பெண்கள் இப்படித்தான் சமூகத்திற்கு உதவி செய்வார்கள் என்று பறைசாற் றுவதாக இருந்தது.

பெண்களின் மனவளம் வீட்டுக்கும் நாட்டுக்கும் மிக தேவையானது. இந்த கருத்தை பள்ளிப் பாடங் களில் சேர்த்தால் சிறுவயதிலிருந்தே மன நலத்தை போற்றி வளர்க்க எளிதாக இருக்கும். மூட நம்பிக்கை வலையில் சிக்காமல் மக்கள் தப்ப வழி கிடைக்கும்.

பள்ளிகளில், கல்லூரிகளில் பாட திட்டத்தில் மனநலம் பற்றி இருக்க வேண்டும். அதற்கு ஆவண செய்ய வேண்டுகிறோம். மிக்க நன்றி.

- சரோ இளங்கோவன்

சிகாகோ, அமெரிக்கா.

பார்ப்பனர் என அழைக்க உரிய ஆதாரம்

அன்புள்ள ஆசிரியருக்கு,

உணர்ச்சிப்பெருக்கால் தாங்கள் எழுதிய 'அடித்த வர்களே அழும் காலமிது' கட்டுரை (15.6.2021) நெஞ்சத்தை எரிமலையாக்கியது! பார்ப்பனர்களை இலக்கியங்கள் பிராமணர் என்று அழைத்ததில்லை என்பதற்கு  திருக்குறள் சிலப்பதிகாரம் முதலிய நூல்களையும் கபிலர், பாரதியார் முதலான நூலோர் களையும் சான்றாகத் தந்துள்ளீர்கள். சமுதாய நடைமுறையிலும் பார்ப்பனர்கள் அப்படித்தான் அழைக்கப்பட்டனர். பார்ப்பனச்சேரி என்றோர் இடம் உண்டு, பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பெண் குழந்தைகள் வெள்ளை வெளேர் என்று இருந்தால் பாப்பாத்தி என்று பெயர் வைக்கப்படுவதுண்டு. "பாப்பாத்தியம்மா மாட்டக்கட்டுணா கட்டுங்க, கட்டாட்டி போங்க" என்ற பழமொழி வழக்கில் உள்ளது. பொற்கொல்லர்கள் செய்யும் ஒரு வகைத்தாலி பாப்பாரத்தாலி என அழைக் கப்படுகிறது. சகுனம் பார்ப்பவர்கள்" ஒத்தப்பார்ப்பான் எதிரே வந்தால் ஆகாது" என்று சொல்கிறார்கள்!

- ஜி.அழகிரிசாமி

செம்பனார்கோயில், மயிலாடுதுறை மாவட்டம்

No comments:

Post a Comment