முதல்வருக்கு வி.ஜி.சந்தோசம் பாராட்டுசென்னை, ஜூன் 19- பேரறிஞர் அண்ணா 1967 தமிழக சட்ட சபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்து, சட்டசபை நடவடிக்கைக ளைத் துவங்கும் முன் திருக் குறளைச் சொல்லி அதன் பிறகே சபை துவங்கும் என்பது வரலாறு.
அந்த காலகட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் சென் னையில் ஓடும் ஒவ்வொரு அரசு பேருந்துகளிலும் திருக் குறள்களை வைத்தார். மற்றும் தமிழகம் எங்கும் உள்ள அரசு பேருந்துகளிலும் திருக்குறள் கள் வைக்கப்பட்டன. நாள டைவில் திருக்குறள்களைப் பொதிந்து வைத்திருந்த சட் டங்கள் உடைந்தும், கழன்றி யும் விட்டதினாலும், பராம ரிப்பு சரிவர இல்லாததாலும், பேருந்துகளில் காணப்பட வில்லை.
தற்போது, தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள், மீண்டும் அரசு பேருந்துகளில் திருவள்ளுவர் படமும், ஈரடி திருக்குறளும், அந்த திருக்குறளுக்கு உரிய தெளிவுரையையும் சேர்த்து வைக்கும்படி ஆணைப் பிறப் பித்திருப்பதை விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக பாராட்டையும், வாழ்த்துத லையும் தெரிவித்துக் கொள் கின்றேன்.
வாழும் இலக்கணமாம் வள்ளுவத்தை தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் படித்து, குறள்வழியைப் பின்பற்றி வாழ்க் கையில் சிறந்து விளங்கிட வழிசெய்த மாண்புமிகு தமிழக முதல்வர். மு.க.ஸ்டாலின் அவர் களின் முயற்சியை மீண்டும் வாழ்த்தி மகிழ்கின்றேன்.
No comments:
Post a Comment