‘‘தேர்தல் 2021 முடிவுகள்'' காணொலி சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர்
சென்னை,
ஜூன் 1 பெரியாருடைய வாக்கு - சிந்தனை - ஆணை
- ‘‘கடைசி மூடநம்பிக்கைக்காரன் இருக் கின்ற வரையில், கடைசி ஜாதி வெறியன் இருக் கின்ற வரையில், கடைசி ஜாதியினுடைய சின்னம் இருக்கின்ற வரையில் கருப்புச் சட்டை இருக்கும்'' என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
உரையாற்றினார்.
‘‘தேர்தல் 2021 முடிவுகள்'' காணொலி சிறப்புக் கூட்டம்
கடந்த
14.5.2021 மாலை 7 மணியளவில் ‘‘தேர்தல் 2021 முடிவுகள்'' என்ற தலைப்பில்
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் நடைபெற்ற காணொலி கருத்தரங் கத்தில், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சிறப்புரையாற்றினார். திராவிடர்
கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
நிறைவுரையாற்றினார்.
அவரது
நிறைவுரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
பவுத்தம்
இந்து மதத்தினுடைய ஒரு பிரிவு என்று சொல்லுகிறீர்களே - பவுத்தம் கடவுள் மறுப்பைக் கொண்டது - இது இன்னொரு செய்தி.
வி.டி.சவார்க்காரே நாத்திகர் என்பதை நீங்கள் மறுக்க முடியுமா?
இதைவிட
அரசியல் ரீதியாக வரவேண்டுமானால், இந்துத்துவாவிற்கு உரு கொடுத்து, அதை இந்துத் துவா என்று தலைப்பு கொடுத்து கொண்டு வந்த வி.டி.சவார்க்காரே
நாத்திகர் என்பதை நீங்கள் மறுக்க முடியுமா?
இந்தக்
கேள்வியெல்லாம் கவைக்கு உதவாத கேள்விகள். சங்கடத்தை எப்படியாவது உருவாக்க வேண்டும் என்று பார்த்தார்கள்; ஆனால், அது பயன்படவில்லை.
அடுத்தபடியாக
நண்பர்களே, எத்தனை ஜோதிடம்?
ஒரு
சினிமா நடிகர் அரசியலுக்கு வரவில்லை யென்றால், நான் ஜோதிடத்தையே விட்டுவிடுவேன் என்று சொன்னவர், இன்னமும் ஜோதிடத்தை தினமும் சொல்லிக் கொண்டிருக்கிறார் தொலைக் காட்சியில். பரவாயில்லை, பிழைத்துக் கொண்டு போகட்டும் என்று விட்டிருக்கிறோம்.
அவர்கள் கணித்த ஆரூடம் ஏதாவது நடந்திருக்கிறதா?
ஆகவே,
ஜோதிடத்தை நம்பிக்கொண்டு, பைத்தியக் காரர்கள்போன்று அ.இ.அ.தி.மு.க.
அமைச்சர்கள் எத்தனை பேர் உளறினார்கள். உங்களுடைய ஜோதி டம் என்னாயிற்று? இதற்குப் பிறகு நீங்கள் ஜோதிடம் பார்க்கலாமா? அவர்கள் கணித்த ஆரூடம் ஏதாவது நடந்திருக்கிறதா?
எவ்வளவு
தெளிவான ஆட்சியை அமைத்து, எல்லோரையும் வென்றெடுக்கக் கூடிய அளவில், இன் றைக்குச் சொல்லுகிறார், ‘‘நமக்குள்ளே பேதமில்லை. முதலமைச்சர் என்பவர் எல்லோருக்கும் உரியவர்தான்.'' எவ்வளவு பெருந்தன்மை அவருக்கு.
இன்னா
செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம்
செய்து விடல்
என்று
சொல்வதைப்போல, எல்லோரையும் அழைத்துக் கருத்துக் கேட்கிறார்.
மனம்
இரங்காதவர்களிடம் - சட்டத்தின்மூலம் அதைச் சாதித்து வெற்றி பெற்றார்
கலைஞருடைய
மறைவிற்குப் பின், அண்ணா நினைவிடத்திற்கு அருகில், கலைஞரை அடக்கம் செய்யவேண்டும் என்கிற கலைஞரின் விருப்பத்தை - நேரிலே சென்று கேட்டுக்கொண்டதற்குப் பிறகும் கூட, மனம் இரங்காதவர்களிடம் - சட்டத்தின்மூலம் அதைச் சாதித்து வெற்றி பெற்றார் - அவர்தான் தளபதி.
அப்படிப்பட்ட
சூழ்நிலையிலும்கூட, வன்நெஞ்சத்தோடு அவர்களைப் பார்க்கவில்லையே! ஒரு
கட்சித் தலைவராக அவர் பார்க்கவில்லை. ஒரு முதலமைச்சராக உயர்ந்து நிற்கிறார்.
நாட்டில்
இன்றைக்கு எது முக்கியமான பிரச்சினை - கரோனா தொற்றைத் தடுக்கின்ற பணியில் கவனம் செலுத்தவேண்டும் - அந்தப் பணியில் எல்லோரையும் அரவணைத்துச் செல்லவேண்டும் என்கிற உணர்வு இருக்கிறதே, அது அவருடைய பரந்த மனப்பான்மையைக் காட்டுகிறது.
‘திராவிட'
என்று சொல்லிவிட்டார் என்றால், அதுதானே அண்ணாவின் ஆட்சி - அதுதானே பெரியாருடைய பாரம்பரியம்!
ராஜ்யசபையில்
அண்ணா அவர்களின் கன்னிப் பேச்சில் என்ன பேசினார்?
‘‘I belong to the Dravidian stock. I am proud to call myself a Dravidian'' என்று பேசினார்.
அதேபோல,
‘‘திராவிட சமுதாயத்தைத் திருத்தி, மானமும், அறிவும் உள்ள மக்களாக அந்த மக்களை ஆக்கவேண்டும்'' என்று சொன்னவர் தந்தை பெரியார் அவர்கள்.
‘‘நான்தான்
திராவிடன் என்று சொல்லும்பொழுது நாவெலாம் தேன் இனிக்கிறது'' என்று சொன்னவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள்.
இத்தனையையும்
அந்த ஒரு வரியிலேயே அவர்கள் மிகத் தெளிவாக நிலைநாட்டிக் காட்டியிருக்கிறார்.
திராவிடம்
என்பது யாரையும் பேதப்படுத்தாது.
எல்லோருக்கும் சமத்துவம் கொடுப்பது திராவிடம்
ஆங்கிலத்தில்
இப்போது மிகப்பெரிய ஒரு போராட்டம் Inclusive - Exclusive என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார்கள்.
மற்றவர்களை
வேறுபடுத்துவது Exclusive என்பது.
எல்லோரையும்
ஒன்று சேர்ப்பது Inclusive என்பது.
எல்லோரையும்
ஒன்று சேர்ப்பது, எல் லோருக்கும் சம வாய்ப்பு கொடுப்பது,
எல்லோ ருக்கும் சமத்துவம் கொடுப்பது திராவிடம்.
எல்லோரையும்
வேற்றுமைப்படுத்துவது,
பிரித்து
வைப்பது,
எட்டி
நில் என்பது
தள்ளி
நில் என்பது,
தொடாதே
என்பது,
படிக்காதே
என்பது
ஆரியம்!
எனவே,
திராவிடம் - திராவிடன் என்று சொல்லுகின்ற நேரத்தில், அதற்கு ஒரு விரிந்த பார்வை உண்டு.
ஒரு
உலகப் பார்வை -
‘‘யாதும்
ஊரே, யாவரும் கேளிர்''
எனவே,
நான் உலக மானிடன்! மனிதத்திற்குத்தான் முக்கியத்துவம்.
என்னுடைய
அடையாளம் - என்னுடைய முகவரி திராவிடம் என்று சொல்லக்கூடிய நிலை, ஓர் ஆட்சித் தலைவருக்கு வந்திருக் கிறது என்றால், அந்த ஆளுமை இங்கே வந்திருக்கிறது - அந்தத் தீர்ப்பை மக்கள் வழங்கியிருக்கிறார்கள் - இவ்வளவு பெரிய மதத்தைக் காட்டிய நேரத்திலும்கூட!
‘‘இருட்டறையில்
உள்ளதடா உலகம்-ஜாதி
இருக்கின்ற
தென்பானும் இருக்கின்றானே
மருட்டுகின்ற
மதத் தலைவர் வாழ்கின்றாரே
சுருட்டுகிறார்
தம் கையில் கிடைத்தவற்றை
சொத்தெல்லாம்
தம தென்று சொல்வார்தம்மை
வெறுட்டுவதே
பகுத்தறிவு இல்லையாயின்
விடுதலையும்
கெடுதலையும் ஒன்றேயாகும்''
என்றார்
புரட்சிக்கவிஞர் அவர்கள்.
கடைசி
ஜாதியினுடைய சின்னம் இருக்கின்ற வரையில் கருப்புச் சட்டை இருக்கும்
பெரியாருடைய
வாக்கு - சிந்தனை - ஆணை - ‘‘கடைசி மூடநம்பிக்கைக்காரன் இருக்கின்ற வரை யில், கடைசி ஜாதி வெறியன் இருக்கின்ற வரையில், கடைசி ஜாதியினுடைய சின்னம் இருக்கின்ற வரையில் கருப்புச் சட்டை இருக்கும்.''
அனைத்து
ஜாதியினரும் அர்ச்சகர் என்று தந்தை பெரியார் சொன்னார்? அதை ஏன் கலைஞர் அவர்கள் சட்டமாகக் கொண்டு வந்து நிறைவேற்றினார்கள்?
இன்றைக்கு
நல்ல வாய்ப்பாக, அனைத்து ஜாதி யினரும் அர்ச்சகர் பயிற்சி பெற்றுவிட்டு பல ஆண்டுகளாக வேலை
கிடைக்காமல் இருக்கின்ற வர்கள், நம்பிக்கையோடு இந்த ஆட்சியை அணுகுகிறார்கள், நம்புகிறார்கள். உடனடியாகப் பணி நியமனங்கள் கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு என்று சொல்லுகின்றபொழுது, வெறும் நியமனப் பிரச்சினையா அது?
இல்லை!
காலங்காலமாக
இருக்கின்ற ஜாதியினுடைய அடி வேர் - தத்துவத்தையே
அறுக்கின்ற முயற்சி அது.
அதை
செய்யக்கூடிய ஆட்சிதான் இன்றைக்கு வந்திருக்கும் ஆட்சி.
மக்களிடம்
எடுத்துச் சொன்னோம்!
பெரியார்
சமத்துவபுரம் என்று திராவிட மாடல் - திராவிட எடுத்துக்காட்டாக இருக்கிறதே - இந்தியாவிலே ஜாதி வெறி, சமய வெறி இவற்றிற் கெல்லாம் இடமில்லாத வகையில், மனிதநேயத்தை உருவாக்கக் கூடிய திட்டத்தை, தமிழ்நாடு முழுக்க உருவாக்கினார்கள். அதை நாசப்படுத்தியதுதானே, முந்தைய ஆட்சி. அதை மக்களிடம் எடுத்துச் சொன் னோம் - அதற்குத்தானே மக்கள் தீர்ப்பளித்திருக் கிறார்கள்.
கரோனா
தொற்று இல்லையானால், இந்நேரம் அந்தப் பிரச்சினைகள் எல்லாம் சரியாகியிருக்கும். அடுத்து, அவருடைய கவனம் அந்தப் பக்கம் திரும்பும்.
நண்பர்களே,
இது யாருக்கோ சில இடங்களில் இருக்கின்ற ஒரு திட்டம் என்பதைவிட, ஒரு லட்சி யத்தினுடைய மிக முக்கியமான நுழைவு வாயில். ஜாதி மறுப்பு - அது வெறும் பரிசல்ல.
சகோதரர்
பேராசிரியர் சுப.வீ. அவர்கள் சொன்னார் அல்லவா - ஜாதி மறுப்புப் படை - அதைவிட பெரியார் சமத்துவபுரம். அந்த பெரியார் சமத்துவபுரத்தை நடைமுறைப்படுத்தி, அத்தனை ஊராட்சி ஒன்றியங்களில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பகுதிகளிலும், ஒவ்வொரு ஊரிலும் பெரியார் சமத்துவபுரம் அமைக்கப்பட்டது.
வெளிநாட்டிலிருந்து
ஒருவர் வந்து பெரியார் சமத்துவபுரம் என்றால் என்ன என்று கேட்டால், நாடே சமத்துவபுரம் என்று ஆவதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு.
நாடே
சமத்துவபுரம் ஆகவேண்டும் என்பது தானே இந்த ஆட்சியினுடைய லட்சியம். அதைக் கண்டுதானே எதிரிகள் அலறுகிறார்கள்.
எனவேதான்,
திராவிடம் என்பதனுடைய விரிந்த பொருள் என்ன?
அந்த
விரிந்த பொருளுக்குக் காட்சிப்படுத்துவது தான் - செயல்படுத்துவதுதான் ஆட்சி. அந்த ஆட்சிக்கான தீர்ப்பைத்தான் மிகத் தெளிவாக இன்றைக்கு மக்கள் வழங்கியிருக்கிறார்கள்.
சமூகநீதியைப் பறிப்பதுதானே பா.ஜ.க.வினுடைய நோக்கம்
இதை
நேர் எதிராகக் கொண்டு வந்து அந்த சமூகநீதியைப் பறிப்பதுதானே பா.ஜ.க.வினுடைய நோக்கம். அதற்குத் துணை போனதுதானே அ.தி.மு.க.
இந்த
இயக்கம் இல்லாவிட்டால், உங்களுக்கு ஏது அந்த நிலை?
இன்றைக்குப்
பத்திரிகையாளர்களாக இருக்கக் கூடிய சில பார்ப்பனர்கள் தி.மு.க.
வாங்கிய வாக்கு சதவிகிதம் குறைவுதானே என்று சித்தரிக்கிறார்கள்.
கவிஞர்
அவர்கள் உரையாற்றும்பொழுது மிக அழகாகச் சொன்னார் - 66 இடங்கள்தானே வந்திருக்கிறீர்கள்; இதுபோன்று இரண்டு மடங்கு இடங்களை தி.மு.க.
பெற்றிருக்கிறதா? இல்லையா? தனித்த பெரும்பான்மை இருக்கிறதா? இல்லையா?
எதிர்க்கட்சியாக
தி.மு.க. இருந்தபொழுது,
அவர் கள் வாங்கிய இடங்களைக்கூட உங்களால் எட்டிப் பிடிக்க முடியாத அளவிற்கு இருக்கிறது.
இந்த
அளவிற்கு நீங்கள் பெற்ற இடங்கள்கூட எதனால் என்பது எல்லோருக்கும் தெரியும். அதனு டைய ரகசியம் என்னவென்று தெரியும். அதில் ஒரு பகுதியை சகோதரர் சுப.வீ. அவர்கள் தெளிவாகச் சொன்னார்.
ஒரு
பக்கம் ஜாதி; இன்னொரு பக்கம்? அவர் சொல்லவில்லை, பணம்.
நாம்
செய்யவேண்டிய அடுத்தகட்ட பணி என்ன வென்றால், தேர்தல் சீர்திருத்த இயக்கத்தை நாம் உருவாக்கவேண்டும்.
மதத்தை
பேசினாலே தவறு என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மட்டுமல்ல - இந்தியன் பீனல் கோடிலேயே இருக்கிறது. அதை யாரும் கவனிப்பதில்லை.
மிக
முக்கியமாக மதத்தைச் சொல்லி வாக்கு கேட்பது தவறு என்று சொல்லி, மும்பையில் உள்ள சிவசேனா கட்சியின் நிறுவனர் பால்தாக்கரே சம்பந் தப்பட்ட வழக்கில் தீர்ப்பு வந்திருக்கிறதே! ஆனால், இன்றைக்கு எந்த அளவிற்கு அது நடைமுறையில் பயன்பட்டு இருக்கிறது.
இட
ஒதுக்கீட்டை ஒழிப்பதற்கான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்
எனவேதான்,
மதத்தைச் சொன்னாலும், தமிழ் நாட்டு மக்களிடம் எடுபடாது. ஜாதியைச் சொல்லி, சில நேரங்களில் நீங்கள் வந்திருப்பது - வகுப்புவாரி உரிமையினுடைய அந்தத் தத்துவத்தினாலே, இட ஒதுக்கீடு என்பதைக்
காட்டித்தானே உங்களால் வர முடிகிறது; அந்த
இட ஒதுக்கீட்டை ஒழிப்பதுதானே உங்களுடைய கூட்டணியின் தலைவராக இருந்து - கூட்டணியை இன்றைக்கும் யார் நடத்திக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் அந்த இட ஒதுக்கீட்டை ஒழிப்பதற்கான
பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இட
ஒதுக்கீட்டைப் பாதுகாக்கின்ற பணி தி.மு.க.
தலைமையிலான அணிக்குத்தானே இருக்கிறது. அதை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்.
எனவே,
சமூகநீதியைப் பாதுகாக்கும் அணி திராவிட முன்னேற்றக் கழக அணிதான்.
ஜாதியை
ஒழிப்பதற்கு, தீண்டாமையை ஒழிப் பதற்கு, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு வாழ் வளிப்பதற்கு, பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் அணி திராவிட முன்னேற்றக் கழக அணிதான்.
எவ்வளவு
கேவலமாக, பிரதமராக இருக்கக்கூடிய மோடி அவர்கள், இங்கே தேர்தல் பிரச்சாரத்தில், ‘‘திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு நீங்கள் வாக்களித்தால், பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்காது'' என்று சொல்லியிருப்பார்.
அதேநேரத்தில்,
உத்தரப்பிரதேசத்தில் என்ன நடக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும். வடக்கே என்ன நடக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும்.
தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்தாரே பிரதமர் மோடி, எடுபட்டதா?
அதைப்பற்றியெல்லாம்
கவலைப்படாமல், தமிழ் நாட்டில் பிரச்சாரம் செய்தாரே பிரதமர் மோடி, எடுபட்டதா? என்பதை தயவு செய்து நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.
அதுமட்டுமல்ல,
தேர்தல் முடிவுகள் என்கிறபோது நீங்கள் கேரளாவையும், மேற்கு வங்காளத்தையும் மறந்துவிடக் கூடாது.
அசாமில்
நாங்கள் வெற்றி பெற்றோம் என்று அவர்களால் சொல்ல முடியாது. அங்கே நீங்கள் ஏற்கெனவே இருந்த இடங்களைவிட, மிகக் குறைந்த இடங்களைத்தான் பெற்றிருக்கிறீர்கள்.
தேர்தல்
முடிவு வெளியான அன்று, ஊடகங்களின் துணையோடு, மிக சாமர்த்தியமாக, அவர்கள்தான் அதிகமான இடங்களை மேற்கு வங்கத்தில் முன்பு பெற்ற இடங்களைவிட வாங்கியிருக்கிறார்கள் என்று சொன்னார்கள்.
மேற்கு
வங்கத்தில், அந்த அம்மையாரை வரவிடக் கூடாது என்பதற்காக, எவ்வளவோ திட்ட மிட்டு, எத்தனை முறை படையெடுத்தார்கள்; 8 கட்டமாக தேர்தலை நடத்தினீர்களே - அப்படியும் நீங்கள் படுதோல்வி அடைந்தீர்களா? இல்லையா?
ஆனால்,
‘‘எண்ணிக்கையில் நாங்கள் அதிக இடங்களில் வந்துவிட்டோம்'' என்று சொன்னீர்களே, அதே வாதம், அசாம் மாநிலத்தில் இருந்ததா?
நீங்கள்
முன்பு இருந்ததைவிட, தேய்ந்து போயி ருக்கிறீர்கள். அதேநேரத்தில், தமிழ்நாட்டில் யார் முதலமைச்சர் என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம் என்று தோள் தட்டினீர்கள்; வீம்பு பேசி னீர்களே, உங்களுக்கு இடம் உண்டா?
மதவெறிக்கு இடமில்லை; ஜாதி வெறிக்கு இடமில்லை
நாங்கள்
நான்கு பேர் வந்துவிட்டோம் என்று இப்பொழுது வியாக்கியானம் செய்கிறீர்களே, அதற்கான பதிலை நாங்கள் ஏற்கெனவே சொல்லியிருக்கிறோமே -
நீங்கள்
யார் தோள்மீது ஏறிக் கொண்டிருக் கிறீர்கள் - உங்களுக்கென்று தனியான வாய்ப்பு என்ன இருக்கிறது?
யார்
யார் வீம்பு பேசினார்களோ - யார் யாரை விளம்பரப்படுத்தினீர்களோ, அவர் களின் நிலை என்ன?
திராவிட
முன்னேற்றக் கழகத்தின் வெற்றியினால் மிகத் தெளிவாக உறுதியாக்கப்பட்டு இருக்கிறது!
எனவே,
இங்கே மதவெறிக்கு இடமில்லை; ஜாதி வெறிக்கு இடமில்லை.
ஜாதக
நம்பிக்கை என்று சொல்லி, அதன்மூலமாக ஜோதிடத்தை நம்பிக்கொண்டு ஏமாற்றலாம் என்று கருதினால், இயல்பாக நம்புபவர்கள்கூட, இதை நம்புவதற்குத் தயாராக இல்லை என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியினால் மிகத் தெளிவாக உறுதியாக்கப்பட்டு இருக்கிறது.
கற்றிடம்
என்று சொன்னோமே - அதை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்.
தளபதி
மு.க.ஸ்டாலின் அவர்களுடைய
ஆற்றல் எப்படி என்பதைப் பார்க்கும்பொழுது,
சாதாரணமாக
ஓர் அலட்சியப் பார்வையோடு அவரைப் பார்த்தார்கள். அரிதாரம் பூசிய சில பேர்கூட, ‘‘ஆகா, நாங்கள் சுலபமாக வந்துவிடு வோம்'' என்றார்கள்.
ஒரு
குதிரையைத் தயாரித்தார்கள் - நாம் திராவிடம் வெல்லும் என்ற உரையின்போதே சொன்னோம் - அந்தக் குதிரை பொய்க்கால் குதிரை - அது ஓடாது - அது வராது என்று தெளிவாகச் சொன்னோம்.
கடைசியில்
அது அப்படியே நடந்தது.
பல
நண்பர்கள் அதுகுறித்து கேட்டார்கள், ‘‘எப்படி உங்களுக்குத் தெரிந்தது?'' என்று.
இது
சாதாரண விஷயம். அவர் கெட்டிக்காரர் - இன்னொருவர் மாட்டிக்கொண்டார்.
இவர்களை
ஏவியவர்கள் யார்?
திராவிட
முன்னேற்றக் கழகத்திற்கு வாக்குகள் போய்விடக் கூடாது என்பதற்காக, பா.ஜ.க.வினாலே ஏவிவிடப்பட்ட ஏஜெண்டுகள்தான் - மூன்றாவது அணியில் இருந்தவர்கள் என்று சொல்லக்கூடி யவர்கள்.
அவர்கள்
செலவழித்த தொகை எப்படி, எங்கே இருந்து வந்தன? மக்களிடம் இருந்து வசூலித்தார்களா? என்ற கேள்வி கேட்டால், அந்தக் கேள்விக்கான விடை தேடினால், அப்பொழுது பல ரகசியங்கள் வெளியே
வரக்கூடிய சூழல் வந்து விடும்.
தங்களுக்கென்று
சில ஏடுகள், தங்களுக்கென்று சில தொலைக்காட்சிகளை எல்லாம் வைத்துக் கொண்டு முன்னால் வரலாம் என்றால், என்ன செய்தாலும், இந்த ஒப்பனைகள் ஒருபோதும் உண்மைகள் ஆகாது.
ஒப்பனைகளைக்
கலைத்தே தீரவேண்டும் - ஒப்பனையை எவ்வளவு நாள்களுக்குத்தான் போட முடியும். ஒப்பனையைப் போட்டுக் கொண் டிருக்கும்பொழுது, வித்தியாசமாகக் காட்ட லாம் - அது நடிப்புக்கு நன்றாக இருக்கும் - கலைத் துறைக்குச் சரியாக இருக்கும். ஆனால், அரசியலில் ஒருபோதும் அது சரியாக வராது என்று சொன்னோம்; இன்றைக்கு அது தெளிவாகி விட்டது.
2019 ஆம்
ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத்
தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் ஒரு செய்தியைச் சொன்னேன்.
அந்தக்
கூட்டணி பதவிக் கூட்டணி - அ.தி.மு.க. தலைமை என்று
வெளியில் சொல்லிக்கொண்டு, பா.ஜ.க.
உண்மையான தலைமையேற்று, அவர்களு டைய சிண்டைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கக் கூடிய அந்தக் கூட்டணிக்குக் கொள்கை கிடையாது.
எத்தனை
விஷமச் செய்திகளை அவர்கள் ஊடகங்களில் பரப்பினார்கள்
அதேநேரத்தில்,
தளபதி மு.க.ஸ்டாலின்
தலைமையில் அமைந்திருக்கக்கூடிய திரா விட முன்னேற்றக் கழகக் கூட்டணி என்பது லட்சியங்களால் உருவானது. வெறும் பதவிக் காக உருவானது கூட்டணியல்ல. அது எங்கே பிறந்தது என்றால், போராட்டக் களங்களில் பிறந்தது என்று எல்லா தேர்தல் கூட்டங்களிலும் மக்கள் மத்தியில் சொன்னது மட்டுமல்ல - தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு இடங் களைப் பிரித்துக் கொடுக்கும்பொழுது, எத் தனை விஷமச் செய்திகளை அவர்கள் ஊட கங்களில் பரப்பினார்கள்.
‘‘ஆகா,
இவர் கேட்ட இடங்கள் கிடைக்கவில்லை'',
‘‘அவரை
அலட்சியப்படுத்தி விட்டார்'',
‘‘இவர்
கோபமாக வந்துவிட்டார்'' என்றெல்லாம் சொன்னார்கள்.
யாரும்
கூட்டணியை விட்டு வெளியே போக வில்லையே - வெளியில் இருந்தவர்கள்தான் இந்தக் கூட்டணிக்குள் வந்திருக்கிறார்கள்.
அதேநேரத்தில்,
அந்தக் கூட்டணியில் இருந்த வர்கள் வெளியே போயிருக்கிறார்கள்; இந்தக் கூட்டணியில் இல்லாதவர்கள் உள்ளே வந்திருக் கிறார்கள்; வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
இதில்
கற்றிடம் என்பதற்கு அடையாளம் என்னவென்றால், அவர் தன்னுடைய கட்சியை மட்டும் பார்க்கவில்லை. ஒரு ஆற்றல்மிகுந்த தலை மையைத்தான் பார்த்தார்கள்.
திராவிடம்
என்றால், வெறும் இனப்பெயர் என்று யாரும் நினைத்துவிடாதீர்கள்!
சுயமரியாதை
இயக்கத்தை ஆரம்பிக்கும் பொழுது தந்தை பெரியார் அவர்கள் சொன் னார், ‘‘அனைவருக்கும் அனைத்தும்'' என்று.
திராவிடம்
என்பது குறள்நெறி -
‘‘பகுத்துண்டு
பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள்
எல்லாந் தலை'' என்கிறது.
புரட்சிக்கவிஞர்
பாரதிதாசன்,
‘‘எல்லாருக்கும்
எல்லாம் இருப்பதான இடம் நோக்கி நடக்கட்டும் இந்த வையகம்'' என்றார்.
இதை
எல்லாம் சேர்த்ததுதான் திராவிடம்.
திராவிடம்
என்றால், வெறும் இனப்பெயர் என்று யாரும் நினைத்துவிடாதீர்கள். பெரிய தத்துவத்தினுடைய உருவாக்கம் அது. லட்சியத் தினுடைய பெரு உரு அது.
அந்த
லட்சியம் என்பதில் என்ன அடங்கியிருக் கிறது என்றால், அங்கேதான் கற்றிடம் என்பதற்குப் பொருள் காணவேண்டும்.
கற்றிடம்
என்பது இருக்கிறதே - எல்லோருக்கும் எல்லாம் தந்து அணைத்துச் செல்வது.
யாரையும்
பிரித்து வெளியாக்குவது அல்ல.
ஒரு
சிறு உதாரணத்தை உங்களுக்குச் சொல் கிறேன்,
தளபதி
ஸ்டாலின் அவர்களுடைய இயக்க வரலாற்றை எடுத்துப் பாருங்கள் - 2019 இல் - அவர் தலைவராக வந்த சூழலில், நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய அளவிற்கு வெற்றி பெற்று, இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்தார்.
அவர்களுடைய திட்டம் வெற்றி பெற்றதா?
2019 இல்
நாடாளுமன்றத் தேர்தலில் மோடி வெற்றி பெறுகிறார். இங்கே ஓடி வந்தார், எல்லாம் செய்தார்கள். ஆனால், என்ன நடந்தது இங்கே? வெற்றி பெற முடிந்ததா, அவர்களால். ‘இங்கே வெற்றிடம்தான், நாங்கள் உள்ளே நுழைந்து விடு வோம்' என்றெல்லாம் திட்டமிட்டார்களே, அவர் களுடைய திட்டம் வெற்றி பெற்றதா?
தளபதி
மு.க.ஸ்டாலின் வகுத்த
வியூகம் என்பது சாதாரணமானதல்ல. அதன் பின்னணியில், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோருடைய கடல் போன்ற அனுபவங்களையும், பாடங்களையும் அவர் கற்றிருக்கிறார்.
அந்தக்
கற்றிடம் இருக்கிறதே, அது சாதாரண மானதல்ல. அதன் விளைவாக, தமிழ்நாட்டில் 39 இடங்கள் என்று சொன்னால், அவர் பிரித்துக் கொடுத்தபோதுகூட, அழகாக எல்லோரையும் அணைத்தார்.
வெறும்
பதவிக்காக அல்ல - இடதுசாரி அமைப்புகளுக்கே - இந்தியாவில் வாய்ப்புகளை ஏற்படுத்தியது திராவிட முன்னேற்றக் கழகம் என்று வடக்கே இருக்கின்ற ஏடுகள் எல்லாம் எழுதக்கூடிய அளவிற்கு வாய்ப்புகளை உருவாக்கித் தந்தார்கள்.
காங்கிரஸ்
கட்சி 10 இடங்களில் நின்று - 9 இடங் களில் வெற்றி பெற்றார்கள்.
திராவிட
முன்னேற்றக் கழகம் 20 இடங்களில் வெற்றி.
இந்திய
கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு இடங்களில் வெற்றி
மார்க்சிஸ்ட்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டு இடங்களில் வெற்றி.
இந்திய
யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஓர் இடத்தில் வெற்றி
விடுதலைச்
சிறுத்தைகள் கட்சி இரண்டு இடங் களில் வெற்றி
மறுமலர்ச்சி
திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி, கொங்கு மக்கள் தேசியக் கட்சி ஆகியவை தலா ஓர் இடத்திலும் வெற்றி.
தன்னுடைய
உழைப்பை, தன்னுடைய சிந்தனையை, நேரத்தை அளித்தார்
அதேபோல,
2021 சட்டமன்றத் தேர்தலிலும் பார்த்தீர்களேயானால், தனது கட்சிக்கும், கூட்டணி கட்சிகளுக்கும் பிரச்சாரம் செய்தார். அத்தனை தொகுதிகளுக்கும் சென்றார்; அத்தனை பேருக்கும் வெற்றியை - எப்படி தன்னுடைய சொந்தக் கட்சியில் தேர்தலில் நிற்பவர்கள் வெற்றி பெறுவது மிக முக்கியமோ - திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெறுவது எவ்வளவு முக்கியமோ - அதே அளவிற்கு, திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் உள்ள கட்சியினரும் வெற்றி பெறவேண்டும் என்பதற்கு தன்னுடைய உழைப்பை, தன்னுடைய சிந்தனையை, நேரத்தை அளித்தார்.
‘அனைவருக்கும்
அனைத்தும்'
‘பகுத்துண்டு
பல்லுயிர் ஓம்புதல்'
இதுதான்
மிக முக்கியம். இதற்குப் பெயர்தான் கற்றிடம்.
திராவிடத்திலிருந்து
கற்றுக் கொள்ளவேண்டும். இதுதான் திராவிடம்.
அதைக்
கற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பை இந்தத் தேர்தல் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.
தாய்க்கு
இருக்கின்ற கவலையும், பொறுப்பும் மிக அதிகமாக இருக்கும்
இரண்டு
தேர்தலையும் ஒப்பிட்டுப் பாருங்கள் - இரண்டு தேர்தலும் இரண்டாண்டு இடைவெளியில் நடைபெற்று இருக்கின்றன.
வெற்றிடம்
என்று யார் சொன்னார்களோ, அவர்களுடைய கருத்து தவறானது என்று, அவர்களே தங்களைத் திருத்திக் கொள்ளவேண்டிய அளவிற்கு, மாற்றிக் கொள்ளவேண்டிய அளவிற்கு, இந்தியாவுக்கே ஓர் அரசியல் பாடத்தைத் தெளி வாகக் கொடுத்த இயக்கம் - திராவிட இயக்கம் - திராவிட முன்னேற்றக் கழகம். அதற்குத் துணை நின்ற மிகப்பெரிய அமைப்பு என்று நாங்கள் சொல்லமாட்டோம் - சாதாரண அமைப்பு நாங்கள் (திராவிடர் கழகம்). தாய் எளிமையாகத்தான் இருப்பார் - அந்தத் தாய்க்கு இருக்கின்ற கவலையும், பொறுப்பும் மிக அதிகமாக இருக்கும்.
தாய்ப்பாசம்
என்பது வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடியதல்ல. தாய்க்கு, தன்னுடைய பிள்ளை களைக் காப்பாற்றக் கூடிய பொறுப்பு உண்டு.
அதேபோலத்தான்
நண்பர்களே, இன்றைக்கு இந்த வெற்றியை அவர்கள் பெற்றிருக்கிறார்கள்.
‘‘நான்கு
இடங்களில் நாங்கள் வெற்றி பெற்று விட்டோம், வெற்றி பெற்றுவிட்டோம்'' என்று பா.ஜ.க.வினர் சொல்கிறீர்களே, நீங்கள் என்ன நினைத்தீர்கள்? தமிழ்நாட்டில் ஆட்சியையே அமைத்துவிடலாம் என்றுதானே நினைத்தீர்கள்.
அதுமட்டுமல்ல,
தேர்தல் நடைபெறுவதற்கு சில நாள்களுக்கு முன்பு தளபதி மு.க.ஸ்டாலின்
அவர் களுடைய மகள்- மருமகன் வீட்டில் வருமான வரிச் சோதனையை நடத்தினீர்கள். சோதனையில் என்ன எடுத்துக்கொண்டு திரும்பினீர்கள்?
ஏமாற்ற முயற்சித்தீர்களே, மக்கள் ஏமாந்தார்களா?
அதுமட்டுமல்ல,
எவ்வளவு கொச்சைப்படுத்தி, பணத்தை வாரி இறைத்து, முழுப் பக்க விளம் பரங்களை பத்திரிகைகளில் கொடுத்தீர்கள். பத்திரிகை தர்மம் என்றெல்லாம் பேசுவார்கள் - அந்தத் தர்மத்தையெல்லாம் குப்பைத் தொட்டியில் போட்டு கொச்சைப்படுத்தக் கூடிய பழைய செய்திகளை - குப்பைத் தொட்டியில் இருந்து வாரி கண்டுபிடித்து, செய்திகளைப்போல, அவற்றையெல்லாம் பிரச்சார மாக செய்தீர்களே, அடுத்தவர்களுக்குப் பதில் சொல்லக் கூடிய வாய்ப்பில்லாமல், வாக்குச் சாவடி களுக்கு மக்கள் செல்வதற்கு முன்னால், முழுப் பக்க விளம்பரங்களையெல்லாம் செய்திகளைப் போல கடைசி நேரத்தில் போட்டு ஏமாற்ற முயற்சித்தீர்களே,
மக்கள் ஏமாந்தார்களா?
திராவிடம்
வென்றது -
ஆரியம்
தோற்றது -
ஆரிய
சூழ்ச்சி தோற்றது - பா.ஜ.க.
தோற்றது - அ.தி.மு.க. தோற்றது என்றால்,
ஆரியம் தோற்றது என்று அதற்குப் பொருள்.
அதற்கு
முன்னாலே, என்னென்ன தந்திரங்களை செய்தார்கள். ஒரு அம்மையார் வந்திருக்கிறார், அவர் வந்தால், அதன்மூலமாக வாக்குகள் பிரியும் - அதனால், தங்களுக்கெல்லாம் வாய்ப்புகள் வரும் - உடனே ஆட்சியைப் பிடித்துவிடலாம் என்பதற்காக - அவர்களைத் தனியே அழைத்து - அவர்களை ஒதுக்கிவிட்டு - அந்த ஏற்பாடுகளை செய்துவிட்டு - அதற்கு அறிக்கை விடச் சொல்லி - என்னென்ன வியூகங்களை செய்ய முடியுமோ, அதையெல்லாம் செய்தார்கள்.
பரம்பரை யுத்தத்தில் அவர் வென்றார்!
ஆனால்,
எல்லாவற்றையுமே அமைதியாக, அடக்கமாக, கொள்கைவயப்பட்டு நின்று, அதுவும் காலங்காலமாக உருவாக்கப்பட்ட கொள்கை வயப்பட்டு, இந்தப் பரம்பரை யுத்தத்தில் அவர் வென்றார்.
பெரியார்
திடலில் ஒருமுறை கலைஞர் அவர்கள் பேசும்பொழுது
சொன்னார், ‘‘இராவணன் என் பாட்டன்; நான் இராவணனின் பெயரன்'' என்று சொன்னார்.
அந்தப்
பெயரனின் பிள்ளை, அந்தப் பாரம் பரியத்தில், இந்தப் பரம்பரை யுத்தத்தை நான் முடித்துக் காட்டுகிறேன். என்னுடைய தாத்தா தொடங்கியது, என்னுடைய தந்தை தொடங்கியது - இதோ நான் முடித்துக் காட்டுகிறேன் என்றார்.
அப்படி
முடித்துக் காட்டியதுதான்,
I belong to the Dravidian stock. I am proud to call myself a Dravidian.
என்று
அண்ணா சொன்னார் என்றால்,
நீங்கள்
எந்த மொழியை நீஷ பாஷை என்று சொன்னீர்களோ,
எந்த
இனத்தைத் தொடக்கூடாத இனம் என்று சொன்னீர்களோ,
யாரை
சூத்திர இனம், பஞ்சம இனம், கீழ்ஜாதி என்று சொன்னீர்களோ,
அந்த
இனத்தைச் சார்ந்து, அந்த சமுதாயத்தைச் சார்ந்து, மனித குலத்தையே விடுதலை செய்ய வேண்டும் - ஒன்றாக்க வேண்டும்; நாம் அனைவரும் சகோதரர் - அனைவரும் ஒன்று - அனைவரும் உறவினர் என்ற முறையில், உருவாக்கவேண்டும் என்ற தத்துவத்தைத்தான் இந்த வெற்றி காட்டியிருக்கிறது.
கற்காதவர்களுக்கு
நட்டமே!
எனவே, இது
வெற்றிடமல்ல - எல்லோரும் கற்றுக்கொண்டு போகவேண்டியது. இது கற்றிடம் -
திராவிடம்
என்பது கற்றிடம் -
கற்காதவர்களுக்கு
நட்டமே தவிர, வேறொன் றுமில்லை.
எனவேதான்,
வெற்றியைப் பெற்றிருக்கக்கூடிய நம்முடைய தளபதி, திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிமூலம் இன்றைக்குப் பொற்காலத்தை சமைக்க இருக்கிறார்கள்; பொற்கால ஆட்சிக்கு ஒரு புதிய தத்துவத்தை, ஒரு புதிய வடிவத்தை இதன்மூலம் நாம் நிச்சயமாக பார்ப்« பாம் என்பதை எடுத்துச் சொல்லி,
இந்த
வெற்றி என்பது,
ஜாதியைத்
தாண்டி -
மதத்தைத்
தாண்டி -
அடக்குமுறையைத்
தாண்டி -
அதிகாரத்தைத்
தாண்டி மக்களால் கொடுக் கப்பட்ட வெற்றி - அதை உணர்ந்து, மக்களுக் காகவே இந்த ஆட்சி என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அடக்கத்தோடும், அமைதியோடும், எதிர்கொண்டிருக்கின்ற பல்வேறு பிரச்சினைகளை - தன்னுடைய இளந்தோள்களில் சுமந்து - ஆனால், அது வலிமை மிக்க அந்தத் தோளில் சுமந்து வெல்வார்.
அவர்
பெற்ற அரசியல் தழும்புகளும், வடுக்களும் அவரை நிச்சயமாக உயர்த்தும்
காரணம்,
அந்தத் தோள்கள் எப்படிப்பட்ட தத்துவத்தைத் தாங்கியிருக்கிறது என்றால்,
பெரியாரின்
தத்துவம் -
அண்ணாவின்
தத்துவம் -
கலைஞருடைய
தத்துவம், கொள்கைகள், நடைமுறைகள் இவற்றையெல்லாம் தாண்டி, மிசா காலத்தில், சிறையில் அடிபட்டு எழுந்த உறுதி இருக்கிறதே, அவர் பெற்ற அரசியல் தழும்புகளும், வடுக்களும் அவரை நிச்சயமாக உயர்த்தும்.
பாதுகாப்பதுதான் தாய்க்கழகத்தினுடைய வேலை
‘‘திராவிடம்
வெல்லும் - நாளை வரலாறு இதைச் சொல்லும்'' என்பது வெறும் அலங்காரச் சொல் அல்ல!
அதுவே
வழி - அந்த ஆட்சி இன்றைக்கு வந்துவிட்டது; அதனைப் பாதுகாப்பதுதான் தாய்க் கழகத்தினுடைய வேலை.
நாங்கள்
வாளும் - கேடயமாக இருப்போம்!
வாளாக
இருந்து, சுழலவேண்டிய நேரத்தில் சுழலுவோம் - கேடயமாக இருந்து பாதுகாக்க வேண்டியவர்களைப் பாதுகாப்போம்
- ஆட்சி உள்பட!
நன்றி,
வணக்கம்!
- இவ்வாறு
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்
உரையாற்றினார்.
No comments:
Post a Comment