அன்புள்ள ஆசிரியருக்கு,
இனமலர் என்று அழைக்கத்தக்க ‘தினமலர்’ நாளேட்டின் கடிதத்திற்கு மறுப்பாக வந்த “ பரிதாப நிலையில் இருக்கிறார்களா பார்ப்பனர்கள்? “விடுதலை தலையங்கம் (17 - ஜூன்)வாசித்தேன்.இக்கடிதம் உண்மையில் வாசகரால் எழுதப்பட்டதாக இருக்க முடியாது.பல நேரங்களில் தன்னுடைய கருத்தையே வாசகர் கடிதமாக வெளி யிட்டு தன் ஆற்றாமையை தணித்துக் கொள்ளும் தினமலரின் (கு)யுக்தி இது! வாராது வந்த மாமணிபோல் வந்த தி.மு. கழக ஆட்சிக்கு களங்கம் கற்பிக்க திசைக் கொருவராக நின்று கூர் தீட்டிக் கொண் டிருக்கிறார்கள். அரசியல், சமூகப் பொது வெளியில் எந்தப் பங்கையும் ஆற்றாது பல பத்தாண்டுகளாக ஒதுங்கி யிருந்தவர்கள் பதுங்கு குழியிலிருந்து வெளியே வருகிறார்கள், இவர்களே திருவள்ளுவருக்கு காவி அணிவிக் கிறார்கள், திராவிடத்தலைவர்களின் சிலைகளை அவமதிக்கிறார்கள்.அரசி யலில் குழப்பம் விளைவிக்கிறார்கள் (சமீபத்திய எடுத்துக்காட்டு: புதுச்சேரி)இவர்கள் கடிதங்கள் எழுதினாலும் நேர்காணலில் வந்தாலும் விவாதத்தில் பங்கு பெற்றாலும் மூர்க்கத்தனமாக இருப்பதைக் காணும்போது இவர்க ளுக்கு மறைநிரல் இருப்பதை உணர முடியும்! மத்தியில் அமைச்சர்களாகவும், காபினட் செயலாளர்களாகவும், நீதிபதி களாகவும், தூதரக அதிகாரிகளாகவும், கலைத்துறை, தொழில்துறை, ஊடகத் துறை, விருந்தோம்பல், ஆன்மிகம் என்று அனைத்து இடங்களையும் ஆக் டோபஸ் போன்று வளைத்துள்ளவர்கள் திராவிட அரசியல் எழுச்சியால் தங்க ளுடைய பிடி தளருமோ என்ற பயத்தில் ‘புலி வருது’ என்ற பாணியில் வருமுன் கூச்சல் போடுவதையே தினமலர் கடி தம் காட்டுகிறது. பார்ப்பனர்கள் கலவ ரம் செய்தார்களா என்று கேட்பவர்கள்.
பார்ப்பனர்களுக்கு எதிராக தற் போது கலவரம் நடக்கிறதா என்ற கேள்வியை ஏன் தங்களுக்குள் கேட்க மறுக்கிறார்கள்? 50ஆண்டுகள் திரா விட ஆட்சியில் ஏன் மாற்றம் கொண்டு வரமுடியவில்லை என்ற கேள்வி நகைப்புக்குரியது. நான்காயிரம் ஆண் டுகள் படிமத்தை ஒரேயடியாக மாற்ற முடியுமா? மனு அதர்மம் போன்ற பார்த் தீனியம், மன்னிக்கவும், பார்ப்பனீயம் தமிழர்தம் எண்ணம், செயலில் வெளிப் பட்டுக் கொண்டே இருக்கின்றன, அது அய்ம்பது ஆண்டுகளில் ஒழியுமா என்ன?
அன்பன்,
ஜி.அழகிரிசாமி, செம்பனார்கோயில்
No comments:
Post a Comment