செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, June 20, 2021

செய்தியும், சிந்தனையும்....!

நடிகர்களுக்கும் பொறுப்பு உண்டு

*           'நீட்' தேர்வு சமூகநீதிக்கு எதிரானது

- நடிகர் சூர்யா   

>>           'நீட்' என்றால் யாருக்கோ வந்த விருந்து என்று எண்ண வேண்டாம்!     

அலட்சியத்துக்கு அளவில்லை

*             பீகாரில் ஒரு பெண்ணுக்கு ஒரே நாளில் அடுத்தடுத்து இருமுறைத் தடுப்பூசி போடப்பட்டது       

>>           தடுப்பூசிப் பற்றாக்குறை இல்லையோ!

ஏனிந்த அவசர சர்டிபிகேட்

*             .பி. முதல்வர் ஆதித்யநாத் நேர்மையானவர், அவர் ஆட்சியில் ஊழல் ஒழிந்துள்ளது.

- .பி. மாநில பா... தலைவர் சுரேந்திரதேவ் சிங்  

>>           என் வீட்டுப் பிள்ளைகளிலேயே அதோ கூரைமீது ஏறிக் கொள்ளி வைக்கின்றானே அவன்தான் யோக்கியன் என்றானாம் அவன் அப்பன்.  

கோயில் பிசினஸ்

*             500 ஏழுமலையான் கோயில்கள் கட்டப்படும். 

>>           ஏழுமலையான் பெரிய கார்ப்பரேட்டாயிற்றே - பிராஞ்சுகள் திறக்கப்பட வேண்டாமா?

 

No comments:

Post a Comment