சென்னை, ஜூன் 17, சென்னை மண்டலத்தில் பெரியாரியல் பயிற்சி வகுப்பு தொடங்கியது. முதல் வகுப்பை கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் கற்றுக்கொடுக்க 90 மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
சென்னை மண்டலத்தின் சார்பில் 10.6.2021 முதல் 26.6.2021 வரை நடத்துவதாக முடிவு செய்து அதன்படி 10 ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஜூம் காணொலி வழியாகத் தொடங்கப்பட்டது. தொடர்ந்து மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் தலைமையேற்றுப் பேசினார். முன்னதாக மணடலச் செயலாளர் தே.செ.கோபால் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மண்டலத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி, வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், தாம்பரம் மாவட்டத் தலைவர் இரா.முத்தையன், ஆவடி மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் த.ஆனந்தன், திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் வெ.மு.மோகன், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி.வீரபத்திரன் மண்டல இளைஞரணித் த்லைவர் ஆ.இர. சிவசாமி, மண்டல இளைஞரணி அமைப்பாளர் சோ.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர்.
நிகழ்வில் கழகப்பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் தொடக்கவுரை வழங்கினார். அதைத் தொடர்ந்து பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் Ôபகுத்தறிவே வழிகாட்டும்Õ என்ற தலைப்பில் உரையாற்றினார். தொடர்ந்து மாணவர்கள் கேள்விகள் கேட்டு தங்களின் அய்யங்களைப் போக்கிக் கொண்டனர். முன்னதாக இணைப்புரை வழங்கிய ச.பிரின்சு என்னாரெசு பெரியார் மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகளுக்கான கட்டுப்பாடுகளை சுட்டிக்காட்டினார்.
சிறப்பாக பங்கேற்று 25 ஆம் தேதி நடைபெறும் தேர்வில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு பெரியார் பன்னாட்டு இயக்குநர் டாகடர் சோம.இளங்கோவன் பரிசுகள் அறிவித்திருப்பதை சுட்டிக்காட்டி உற்சாகப்படுத்தினார்.
இறுதியாக பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரவீன் நன்றி கூறி நிகழ்வை முடித்து வைத்தார்.
No comments:
Post a Comment