ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 19, 2021

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்விஅறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களின் படம் போட்டு இனமலரானதினமலர்கேள்வி கேட்கிறது என்றால் அமைச்சர் சரியான திசையில் பயணிக்கிறார் என்றுதானே பொருள்?  

- இர. சரஸ்வதி, பெருங்களத்தூர்.

பதில்:  அதிலென்ன சந்தேகம்? எதிரிகள் நம்மையோ, நம்மை சார்ந்தவர் களையோ புகழ்ந்தால், பாராட்டினால் நாமும், நம்மைச் சார்ந்தவர்களும் எங்கே சறுக்கி விட்டோமோ என்று கவலையாய் ஆராய்ந்து தெளிவடைய வேண்டும்.

இன எதிரிகள் தாக்கினால், கேள்வி கேட்டால் நாம் சரியான பாதையில் பயணிக்கிறோம் என்று பொருள். அமைச்சர் சேகர்பாபு, திராவிட இயக்க லட்சியப்பாதையில் சரியாகவே, முதல் அமைச்சரின் தக்க வழிகாட்டுதலுடன் பொறுப்புடன் பயணிக்கின்றார்!

கேள்வி:   கரோனா இரண்டாவது அலை தாக்கத்தைக் கட்டுப்படுத்த திமுக அரசு நூறு சதவிகிதம் சிறப்பாக செயல்படுவதாக இந்திய மருத்துவர் சங்க மருத்துவர்கள் பாராட்டு தெரிவித்திருப்பது - தமிழக அரசுக்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதலாமா?

 - . காமராஜ், செய்யாறு.

பதில்பாராட்டு மட்டுமல்ல; உரியவர்களிடமிருந்து கிடைத்திருக்கும் உயரிய விருது இது!

கேள்வி :    மோடி அரசு புதிதாக பல ஆயிரம் கோடி செலவில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்காக கையகப்படுத்தப்படும் இடங்களில் தேசிய ஆவணக்காப்பகமும் இடம் பெற்றுள்ளதே - பழைய ஆவணங்களை அழிக்கும் முயற்சியாக இருக்குமோ என்று சிலர் அய்யம் கிளப்புகிறார்களே?

- காசிநாதன், இலஞ்சி

பதில்:   நியாயமான சந்தேகங்கள்; எனவே தேவையான எதிர்ப்புகள். வரலாற்றுப் புரட்டர்களைக் கொண்டு பல்வேறு தந்திர உபாயங்களைக் கையாண்டு திரிபுவாதம் செய்வதைத் தங்கள் ஆட்சியின் திட்டமாகவே ஆர்.எஸ்.எஸ். கொண்டுள்ளதே!

கேள்வி :   பல பத்தாண்டுகளாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டுமானால் தமிழ்நாடு அரசு தன் சொந்த உத்தரவால் அதனைச் செய்ய முடியுமா? ஒன்றிய அரசின் அனுமதி அவசியமா?

- .சே. அந்தோணி ராஜ், தென்காசி,

பதில்:   தமிழ்நாடு அரசு அதிகாரத்திற்குள்பட்டே உள்ளது - இந்திய அரசமைப்புச் சட்டப்பிரிவு (Article) 161இன்படி; ஒன்றிய அரசுக்குப் கொண்டு போக வேண்டிய தேவையேயில்லை.

கேள்வி : மதவெறி அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் அமைச்சர்கள் பங்கேற்பதை தவிர்க்க முடியாதா?

- திராவிட விஷ்ணு, வீராக்கன்

பதில்:  பங்கேற்கக் கூடாது; “கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொரிந்து கொள்ளுதல்போன்ற தவறு இது!

திருப்பூரில்  இரண்டு அமைச்சர்களின் செயல் நமக்கு வேதனையைத் தருகிறது. திருத்திக் கொள்வார்களாக! கொள்கையில் தவறு இழைக்கக் கூடாது!

கேள்வி : சங்பரிவார்கள்  தமிழ்நாட்டில் காலூன்ற வாய்ப்பாக தம் பணிகளுக்கு  கோயில்களைப் பயன்படுத்தி வருகிறார்களே அரசு இதில் கவனம் செலுத்துமா?

- மணிமேகலை, வீராபுரம்

பதில்:  ஆர்.எஸ்.எஸ்., ஹிந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் எல்லாம் திட்டமிட்டு மக்களிடையே பக்தி போதையைமயக்க பிஸ்கட்டுகளாக வழங்கி, வாக்குரிமையைக் களவாட  இத்தகைய ஒரு வாய்ப்பே - கோயில், பக்தி! எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!!

முந்தைய பிள்ளையார் சதுர்த்தி மத வேறுபாட்டினையும், வெறுப்பையும் பெருகச் செய்தது. இப்போதைய 90 அடி பிள்ளையார் ஊர்வலம் - வழிபாடு அவையோடு கலவரத்தையும் உண்டாக்கி, அரசியல் விளைச்சலுக்கான மூலதனமாகவும் அதனைப் பயன்படுத்துகின்றனர். மறவாதீர் என்றும்!

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமான தாகும்.

கேள்வி : பன்வர் மெக்வன்ஷி போன்ற செயல்பாட்டாளர்களை நம் பணிகளில் இணைத்துக் கொள்ளும் திட்டம் உள்ளதா?

- வேலவன், குரோம்பேட்டை

பதில்:  வாய்ப்பு வரும் போது நிச்சயம் செய்வோம்; இனி, எல்லாம் சாலைகளும், ஈரோடு நோக்கியே!

கேள்வி : கருநாடகாவில் பார்பனியம் குறித்து தமது கருத்தைப் பதிவு செய்த நடிகர் சேத்தன் குமார் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளதே - பாஜக ஆட்சியில் உள்ளதால் தானா?

- சங்கர் அப்பாசாமி, ஜெயங்கொண்டம்

பதில்: ஆம்! ஆம்! முந்தைய .தி. மு.. ஆட்சியில் துள்ளிய வர்களை இங்கே கண்டோமே! அதுபோல, கருநாடக பா... ஆட்சியில் பார்ப்பனர் - ஆர்.எஸ்.எஸ்.சினர் தலை கொழுத்து ஆடுகின்றனர். இதன் விளைவாக கருநாடக அரசியல் போக்கில் பிரச்சினைகள் பெரியதாக வெடிப்பது உறுதி!


கேள்வி :  உள்கட்சி சண்டையால் அதிமுக அழிந்தால் அந்த இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ள கட்சி எது?

- தமிழ் மைந்தன்,  சைதாப்பேட்டை

பதில்: ஊகத்திற்குப் பதில் சொல்லி நேரத்தை வீணாக்கலாமா தோழரே!

கேள்வி:  உண்மையில் தமிழ்நாட்டில் முழுமதுவிலக்கு சாத்தியமா? 

-அயன்ஸ்டின் விஜய், சோழங்குறிச்சி

பதில்: உண்மையில் மது விலக்கு - நடைமுறையில்,  குடிமக்கள்வாழ்வில் நிச்சயம் சாத்தியப்படாது என்பது யதார்த்த உண்மை!  கடுமையான பிரச்சாரத்தைச் செய்தால் முழு வெற்றி பெறா விட்டாலும் ஓரளவாவது வெற்றி கிட்டும்.

No comments:

Post a Comment