சென்னை, ஜூன் 18 அரசு பள்ளிகளில் கூடுதல் ஆங்கில வழி வகுப்புகளை துவங்குவதற்கு தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட் டுள்ளது.
தனியார்
பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு இடம்பெயரும் மாணவர்களின் நலனுக்காக அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை அதிகப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்
தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தலின்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நேற்று அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,
அரசு
மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் பாடப்பிரிவுகள் மற்றும் ஆங்கில வழி வகுப்புகளை துவங் குவதற்கு தலைமை ஆசிரியர்கள் விண் ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment