தஞ்சாவூர், ஜூன் 19 தஞ்சை மண்டலத்தில் பெரியாரியல் பயிற்சி வகுப்பு 07.06.2021 அன்று மாலை 5.30. மணியளவில் தஞ்சை மண்டல செயலாளர் குருசாமி அனைவரையும் வரவேற்று உரையாற்றிட, மண்டல தலைவர் அய்யனார் தலைமையில் இனிதே தொடங்கியது.
இந்நிகழ்வில் மாநில மாணவர் கழக துணை செயலாளர் அஜிதன், மாநில மாணவர் கழக அமைப்பாளர் செந்தூரப்பாண்டியன், பட்டுக்கோட்டை கழக மாவட்ட செயலாளர் வை.சிதம்பரம், மன்னார்குடி கழக மாவட்ட செயலாளர் கோ.கணேசன், குடந்தை கழக மாவட்ட தலைவர் கு. நிம்மதி, தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் அ. அருணகிரி, பட்டுக்கோட்டை மாவட்ட தலைவர் பெ.வீரையன், மன்னார்குடி கழக மாவட்ட தலைவர் ஆர் பி எஸ் சித்தார்த்தன், தஞ்சாவூர் மாவட்ட தலைவர் சி.அமர்சிங், மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத் தலைவர் கோபு. பழனிவேல், மாநில பகுத்தறிவாளர் கழக தலைவர் மா.அழகிரிசாமி, மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர் அதிரடி க.அன்பழகன் ஆகியோர் முன்னிலையேற்று உரை
யாற்றினார்.
இந்நிகழ்வில் திராவிடர் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன் உள்ளிட்ட மாநில, மண்டல, மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.
மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிகுமார் இத்தொடக்கவிழாவினை ஒருங்கிணைத்து இணைப்புரை சிறப்பாக வழங்கினார்.
பெரியாரியல் பயிற்சி வகுப்பில் பதிவு செய்துள்ள 92 மாணவர்களில் 70 மாணவர்கள் தொடக்கவிழா மற்றும் முதல் வகுப்பில் கலந்து கொண்டனர்.
பெரியார் உயராய்வு மய்யத்தின் இயக்குநர் பேராசிரியர் நம்.சீனிவாசன் கலந்துகொண்டு பயிற்சி வகுப்பினை தொடக்கி வைத்து உரையாற்றினார். தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் நெல்லுபட்டு வே.ராஜவேல் நன்றி கூறினார்.
பெரியாரின் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் முதல் வகுப்பில் பேராசிரியர் முனைவர் பா.காளிமுத்து, அவர்கள் பெரியாரியல் பயிற்சி வகுப்பின் அடிப்படை கல்வியான பெரியாரின் இளம் வயது தொடங்கி இறுதிக் காலம் வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை புதிய மாணவர்களுக்கு எளிமையாக புரியும்படி பல்வேறு ஆதாரங்களை எடுத்துக் கூறி வகுப்பெடுத்தார்.
முதல் வகுப்பில் அய்ந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களுடைய சந்தேகங்களை கேட்டறிந்து தெளிவு பெற்றனர்.
இந்த வகுப்பு எளிமையாகவும் பயனுள்ள வகையிலும் அமைந் திருக்கிறது என மாணவர்கள் வாட்ஸ்அப் குழுவில் பின்னூட்டம் செய்திருந்தனர்.
தொடர்ந்து இந்த வகுப்பில் பங்கு பெறும் மாணவர்களின் வருகைப் பதிவு, பதிவு செய்யப்பட்டது.
இத் தொடக்க விழாவில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, மன்னார்குடி கழக மாவட்டத்தைச் சார்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள், பெரியாரியல் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு இருக்கும் மாணவர்கள், அவர்களுடைய பெற்றோர் என ஏராளமான பார்வையாளர்கள் பங்கெடுத்
தனர்.
No comments:
Post a Comment