செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 18, 2021

செய்தியும், சிந்தனையும்....!

அச்சம் - கடவுள் நம்பிக்கை அஞ்சாமை - கடவுள் மறுப்பு!

கேள்வி: எம்.எல்.,க்களாகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும் நிகழ்வுகளில்உளமார', ‘கடவுள்' அறிய என்று கூறுகிறார்களே, இரண்டில் எது சரி?

பதில்: நாத்திகர்களிடம் அஞ்சுபவர்கள்உளமார' என்று கூறிப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள். கடவுளிடம் அஞ்சுபவர்கள்கடவுள் அறிய' என்று கூறிப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள். அரசியல் சாசனப்படி இரண்டுமே சரிதான்.

- ‘துக்ளக்', 9.6.2021

>>  முக்கிய திருத்தம். நாத்திகர்களிடம் அஞ்சுபவர்கள் அல்ல - நாத்திகத்தை நேசிப்பவர்கள்உளமார' என்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள். கடவுளிடம் அஞ்சுபவர்கள்கடவுள் அறிய' என்று சொல்லுவது சரியே!

அச்சம்தானே கடவுள் நம்பிக்கை -

அஞ்சாமைதானே கடவுள்மறுப்பு!

போகப் போகத் தெரியும்!

* புதுச்சேரி மாநிலத்தில் பா...வைச் சேர்ந்த செல்வம் பேரவைத் தலைவராகத் தேர்வு.

>>   கட்டுச் சோற்றுக்குள் பெருச்சாளி!

பா(ப்)பாக்கள்!

* சிவசங்கர் பாபா டில்லியில் கைது.

>> பக்தியின் யோக்கியதை!

பார்ப்பன விஷமம்

* உதயநிதி ஸ்டாலின் தொகுதியில் சட்ட விரோதம் - கொலை மிரட்டல் புகாரில் தி.மு.. பிரமுகர்.

- ‘தினமலர்' செய்தி

>> அது என்ன உதயநிதி தொகுதியில்? அந்தப் பகுதியில் எது நடந்தாலும் உதயநிதிதான் பொறுப்பா? காஞ்சி சங்கராச்சாரியார் ஊரில் கொலை என்று செய்திப் போடலாமா?

No comments:

Post a Comment