'விடுதலை' நடந்த பாதை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 1, 2021

'விடுதலை' நடந்த பாதை!

விடுதலை’’ ஏடு வாரம் இருமுறை ஏடாக ஜஸ்டிஸ்  கட்சியின் சார்பில் டி. .வி.நாதன் அவர்களை அதிகாரபூர்வ ஆசிரியராகக் கொண்டு அரையணா விலையில் 1-6-1935 முதல் 14 மவுன்ட் ரோட், மதராஸ் என்ற முகவரியிலிருந்து வெளிவந்தது. (ஆதாரம்: 7-6-1935 ‘குடி அரசு'’). வருட சந்தா ரூ.3-10-0.

அதன்பின் 1-1-1937 முசல் துதே முகவரியில் பண்டித எஸ். முத்துசாமி பிள்ளை அவர்களை அதிகாரபூர்வ ஆசிரியராகக் கொண்டு நாளேடாக காலணா விலையில் வெளிவந்தது. (ஆதாரம்: ‘குடி அரசு’ 10-1-1937)

3-1-1937 முதல் விடுதலை நாளேடு காலணா விலையில் அவரையே ஆசிரியராகக் கொண்டு ஈரோட்டிலிருந்து வெளிவந்தது. (ஆதாரம் : ‘குடி அரசு‘ 3-1-1937)

1939இல் அண்ணா அவர்கள் விடுதலைஏட்டின் பொறுப்பாசிரியராக இருந்து, அதன் பின் 21-12-1941இல் அப்பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார்.

விடுதலைஏட்டில் வந்த ஒரு கட்டுரைக்காக 124- பிரிவின் படியும்விடுதலைவெளியீட்டாளர் .வெ.கிருஷ்ணசாமி அவர்கள் மீதும், ஆசிரியர் பண்டித முத்துசாமி பிள்ளை மீதும் ராஜகோபாலாச்சாரியார் அரசு வழக்குத் தொடுத்து அதன் காரணமாக இருவரும் 6 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டனர்.

அதன் காரணமாக . பொன்னம்பலனார்விடுதலையின் அதிகாரபூர்வஆசிரியர் பொறுப்பை 9-1-1939 முதல் ஏற்றுக் கொண்டார்.

விடுதலைஏடு யுத்தப் பிரச்சாரத்திற்காகத் தரப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் குத்தூசிகுருசாமி அவர்கள் 12-9-1943 மூதல் 30-9-45 வரை பொறுப்பாசிரியராக இருந்தார்.

என். கரிவரதசாமி அதிகாரபூர்வ ஆசிரியராக இருந்தார்.

யுத்தப் பிரச்சாரத்திற்காக வழங்கப்பட்டவிடுதலைமீண்டும் தந்தை பெரியாரின் பொறுப்புக்கு 6-6-1946 முதல் வந்தது. அதன் அதிகாரபூர்வ ஆசிரியராக கே. . மணி (அன்னை மணியம்மையார்) இருந்தார். தனி இதழ் விலை முக்காலணா. சென்னை, பாலகிருஷ்ணபிள்ளை தெருவிலிருந்துவிடுதலை' வெளியாகத் தொடங்கியது.

20-6-1943 முதல் குத்தூசி குருசாமி, ‘விடுதலைபொறுப் பாசிரியராக இருந்தார். 2-1-1962  வரை அவர் அப் பொறுப்பில் இருந்தார்.

ஒவ்வோர் ஆண்டும் ஜூலை முதல் தேதியன்று "திராவிட நாடு பிரிவினை நாள்" கொண்டாடுமாறு தோழர்களுக்கு தந்தை பெரியார்விடுதலை'யில் அறிக்கை விட்டார். சென்னை மாகாண அரசு வாளா இருக்குமா? ‘விடுதலைமீது பாய்ந்தது. ரூ.2000 ‘விடுதலை'க்கு ஜாமீன் கட்ட வேண்டும் என்று ஏட்டின் பதிப்பாசிரியரும், வெளியீட்டாளருமாகிய அன்னை மணியம்மையார் அவர்களுக்கு அரசு ஆணை பிறப்பித்தது.

இந்தப் பிரச்சினையை பொது மக்களிடத்தில் தந்தை பெரியார் வைத்தார்! ‘விடுதலையின் ஈடு இணையற்ற தொண்டின் அவசி யத்தை உணர்ந்த பொது மக்களோ ரூ. 15,200 அள்ளித் தந்தனர்.

குருசாமி அவர்களைத் தொடர்ந்து கி.வீரமணி அவர்கள்விடுதலை' பொறுப்பாசிரியராக  இருந்து வந்தார். அன்னை மணியம்மையார் அவர்களது மறைவுக்குப் பிறகு 21-3-1978 முதல் கி. வீரமணி அவர்கள் அதிகாரபூர்வ ஆசிரியராகவும், பிரசுரதாரராகவும் இருந்து வருகின்றார்.

விடுதலையின் அதிகாரபூர்வ ஆசிரியர்கள்

1. டி. . வி. நாதன், 2 பண்டித எஸ். முத்துசாமி பிள்ளை , 3. . பொன்னம்பலனார், 4. என். கரிவரதசாமி, 5. கே. . மணி (அன்னை மணியம்மையார் அவர்களின் ஆரம்பப் பெயர்). 6. . வெ. ரா. மணியம்மை ( திருமணத்திற்குப் பின்னர் பெயரில் சிறிது மாறுதல்), 7. கி. வீரமணி

விடுதலையின் பொறுப்பாசிரியர்கள்:

1. சி. என். அண்ணாதுரை, (அறிஞர் அண்ணா ), 2. சா. குருசாமி, 3. சாமி. சிதம்பரனார், 4. கி. வீரமணி

விடுதலைமலர்கள்

1956ஆம் ஆண்டு செப்டம்பர் 17இல் தந்தை பெரியார் அவர் களின் 78ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டிவிடுதலைமலர் வெளிவந்தது. அதன் விலை 4 அணா-ஆசிரியர் குருசாமி அவர் களால் அது வெளியிடப்பட்டது.

அதன் பின்விடுதலைஆசிரியராக கி. வீரமணி அவர்கள் பொறுப்பேற்றதிலிருந்து 1962ஆம் ஆண்டு முதல் (தந்தை பெரியார் 84ஆவது ஆண்டு பிறந்த நாள்) தொடர்ந்து பெரியார் பிறந்தநாள் மலரை வெளியிட்டு வருகிறார்கள்.

தந்தை பெரியார் மறைந்த முதலாண்டு முடிவின் போது 1974 டிசம்பர் 24இல் நினைவு நாள் மலரும் வெளியிடப்பட்டது.

விடுதலை காலண்டர்

1966ஆம் ஆண்டுவிடுதலை' காலண்டர் அய்யா அவர்களின் பல்வேறு கோணங்களின் உருவந்தாங்கி பல வண்ணங்களில் ஆப்செட்டில் அச்சிட்டு விற்கப்படுகிறது.

ஒரு தாளில் மூன்று மாதங்கள் வீதம் நான்கு தாள்களில் தேதி கள் அச்சிடப்பட்டு இருந்த அந்தக் காலண்டரின் விலை 60 காசுகள். நாட்காட்டி அளவு 14" ஜ் 19" ஆகும்.

புதுமனை புகுதல்

20-6-1943 முதல் சென்னை சிந்தாதிரிப்பேட்டை பால கிருஷ்ண பிள்ளைத் தெருவிலிருந்த வாடகைக் கட்டடத்தில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த விடுதலை’ 15-12-1965 முதல் 2, ரண்டால்சு சாலையில் (இப்பொழுது 50 . வெ.கி.சம்பத் சாலை என்று புது இலக்கமும் சாலை பெயர் மாற்றமும் இதே இடம் பெற்றுள்ளது) சொந்தக் கட்டடத்திலிருந்து வெளிவந்து கொண்டு இருக்கின்றது.

இந்தப் பணிமனையை 31-10-1965 ஞாயிறு மாலை 5:30 மணிக்கு வைதீகர்கள் நடு நடுங்கும் இராகுகாலத்தில் தந்தை பெரியார் தலைமையில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் திறந்து வைத்தார்கள். கட்டடத்தின் மதிப்பீடு அப்போது 70 ஆயிரம் ரூபாய்.

தணிக்கைப் பாம்பு

இந்திராகாந்தியாரால் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட 1976இல் பத்திரிகைத் தணிக்கை முறை அமலுக்குக் கொண்டுவரப் பட்டது’ 1-2-1976 முதல்விடுதலைஏடும் தணிக்கை என்ற பெயரால் பார்ப்பனக் கொடியவர்களின் நச்சுக் கரங்களில் சிக்கியது. ஒவ்வொரு நாள்விடுதலையும் வெளிவருவது என்பது முதலை வாயில் நுழைந்து வெளிவருவது போன்று இருந்தது.

தணிக்கைப் பணியில் அமர்த்தப்பட்ட அத்தனைப் பேருமே பச்சைப் பார்ப்பான்கள். ‘விடுதலைக்கென்றுள்ள பாணியில் வெளி வந்த செய்திகளையெல்லாம் பாம்பாகச் சீறி எழுந்து கொத்தினார்கள்.

விடுதலையைத் தொடும் காரணத்தால் தினமும் வீட்டிற்குச் சென்றதும் குளித்து விட்டுத் தான் அடுத்த வேலையைச் செய்கிறேன் என்று அந்தப் பார்ப்பனர் சொன்னதை இன்று நினைத்தாலும் இரத்தம் கொதிக்கின்றது!

எந்த அளவுக்கு அவர்கள் சென்றார்கள் என்றால் தந்தை பெரியார் என்று போடக் கூடாது- வெறும் பெரியார் என் போடவேண்டும் என்று சொல்லுகின்ற அளவுக்கு அவர்களின் ஆணவக் கரம் நீண்டது. அதே நேரத்தில் சங்கராச்சாரி என்றுவிடுதலை'யில் செய்தி வெளிவந்த நேரத்திலே "யார்" சேர்த்து சங்கராச்சாரியார் என்று போடவேண்டும் என்று வலியுறுத்தி னார்கள்.

ஆனால், வீரத்தின் விளை நிலமாகிய அன்னை மணியம்மை யார் அவர்கள் வீராவேசத்துடன், அந்தக் கொடிய நெருக்கடி காலத்திலும்கூட தணிக்கை விதிகளைத் தூக்கி எறிந்து தந்தை பெரியார் என்றே வெளியிடும்படி சொன்னார்கள்! செய்தார்கள்! எச்சரித்தார்கள்!!

பார்ப்பான் பதுங்கி இருப்பதுபோல் காட்டிக் கொள்வது எல்லாம் பாய்ந்து குதறச் சந்தர்ப்பதை எதிர்பார்த்துக் கொண்டுதான் என்பதை நெருக்கடி காலம் விளக்கச் சுத்தமாகத் தெரிவித்து விட்டது.

விடுதலைநிறுத்தம்

1-4-1984 முதல் சென்னை மாவட்ட நூலகங்கள் 103க்கும் போடப்பட்டுக் கொண்டிருந்தவிடுதலை' இதழை தமிழக அரசு ரத்துச் செய்துவிட்டது.

சட்டமன்றத்தில் கேள்வி

எதிர்க்கட்சி ஏடுகளையெல்லாம் நூலகங்களில் நிறுத்தினீர்கள். எல்லா ஏடுகளையும் தான் நிறுத்தினீர்கள். ‘விடுதலையை யாவது போடக் கூடாதா? அதையுமா நிறுத்த வேண்டும்? என்று சட்ட மன்றத்தில் தி.மு.. உறுப்பினர் துரைமுருகன் வினா எழுப்பினார்.

சிறைகளில்விடுதலைஏடு வாங்க தமிழக அரசு விதித்த தடையை எதிர்த்துவிடுதலைஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களால் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு 14-2-1983 அன்று விசாரணைக்கு எற்கப்பட்டது.

1-4-1983 முதல்விடுதலை'க்கு.. செய்தி நிறுவன செய்தித் தொடர்பு ஏற்பட்டது. டெலிபிரின்டர் 1-5-1983 முதல்விடுதலையில் இயங்கத் துவங்கியது

வெளிநாட்டுப் பதிப்பு

விடுதலைவெளி நாட்டுப் பதிப்பாக மாதம் ஒரு முறை 15-1-1985 முதல் வெளிவந்து கொண்டு இருக்கிறது.

உலகத் தமிழர் செய்திகளும், தமிழ்ச் நாட்டுச் செய்திகளும் அதில் இடம்பெற்று வருகின்றன.

27.11.1987 அன்று உள் துறை தனிச்செயலாளர் ஆணையின்படி தடை நீக்கப்பட்டதால், வழக்கு விசாரணை தொடர்ந்து தேவை இல்லை என்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்திய தேவ் தீர்ப்பளித்தார்.

ஆஃப்செட்டில் விடுதலை

56ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் விடுதலை 7.06.1990 முதல் ஆஃப்செட் முறையில் அச்சிடப்பட்டு வெளிவரத் துவங்கியது. 30 லட்ச ரூபாய் மதிப்புள்ள நான்கு வண்ணம்வரை அச்சிடத் தகுதியுள்ள அக்கியமா (AKIYAMA) என்கிற அச்சு இயந்திரம் விடுதலைக்குச் சொந்தமானது.

விடுதலை ஞாயிறுமலர்

விடுதலை நாளேட்டோடு சேர்ந்து 4 பக்கம் கூடுதலான அளவில் விடுதலை ஞாயிறுமலர் 18.08.1991 முதல் வெளிவந்தது. நன்கொடை ரூ.1.50 3.11.1991 முதல் 12 பக்கங்கள் கொண்ட தனி விடுதலை ஞாயிறுமலராக வெளிவருகிறது. நன்கொடை ரூ.1.50.

28.12.2000 அன்று புதிய அச்சு இயந்திரம் (Po24 Germany poly Graph-planeta) வாங்கப்பட்டது. இது ஒரே நேரத்தில் இரண்டு வண்ணங்கள் அச்சிடும் எந்திரம்.

8.3.2003 அன்று ஒரே நேரத்தில் 8 பக்கங்களையும், அதில் 1 மற்றும் 8ஆம் பக்கங்களை பல வண்ணங்களிலும் அச்சிட்டு, தானே மடித்துத்தரும் புதிய வெப் ஆப்ஃசெட் அச்சு எந்திரம் இயங்கத் தொடங்கியது.

16.9, 2007 அன்று வரலாற்றில் முதல்முறையாக விடுதலையின் இரண்டாம் பதிப்பு  திருச்சியிலிருந்து வெளிவரத் தொடங்கியது.

17.09.1996 முதல் இணையத்தில் வெளிவரும் முதல் தமிழ் இதழாக விடுதலை வெளியானது. பிறகு ஒருங்குறியில்(Unicode) வெளியான முதல் தமிழ் நாளேடாகவும் விடுதலையே தடம் பதித்தது.

ஆன்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் திறன்பேசிகளில் இயங்கும் விடுதலை செயலியும் பயன்பாட்டில் உள்ளது.

தற்போது Flip வடிவிலும், ரீட்வேர் மற்றும் மேக்ஸ்டர் தளங்களிலும் வெளிவருகின்றது.

No comments:

Post a Comment