கரோனா தடுப்பூசி விவகாரத்தில் குளறுபடி! மத்திய அரசை கடுமையாக சாடிய உச்சநீதிமன்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 4, 2021

கரோனா தடுப்பூசி விவகாரத்தில் குளறுபடி! மத்திய அரசை கடுமையாக சாடிய உச்சநீதிமன்றம்

புதுடில்லி  ஜூன் 4- கரோனா தடுப்பூசி விவகாரத்தில்  பெரும் குளறுபடி ஏற் பட்டுள்ளது என அதி ருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம், மத்தியஅரசு பிரம்மாண பத்திரம் தாக் கல் செய்ய உத்தரவிட்ட துடன் கடுமையாகவும் சாடியது.

நாடு முழுவதும் தடுப் பூசிகளுக்கு இரு வேறு விலை எதற்கு என்று கேள்வி எழுப்பியதுடன், ஒரே  விலை இருக்க வேண் டும் என்றும், தடுப்பூசிகள் கொள் முதல் மற்றும் கோவின் பயன்பாட்டில் கட்டாய பதிவு குறித்து விளக்கமளிக் கவும் உத்தரவிட்டு உள்ளது.

நாடு முழுவதும் கரோனா2வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியாவில் ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. முதல்கட்ட முன்களப் பணி யாளர்களுக்கு செலுத்தப் பட்ட நிலை யில், 2-வது கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 3-ஆவது கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர் கள், 4ஆவது கட்டமாக தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

ஆனால், நாட்டு மக்க ளுக்கு தடுப்பூசி போடுவ தற்கு பற்றாக்குறை ஏற் பட்டு உள்ளது. முன்ன தாக, இந்தியாவில் தயா ரிக்கப்பட்ட தடுப்பூசி களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி வழங்கியதால் தான், நமது நாட்டில்  பற்றாக்குறை ஏற்பட்டது என குற்றம்சாட்டப்பட்டு வருகிறத.

இந்த நிலையில் நாடு முழுவதும் கரோனா2ஆவது அலை பரவல், அதை  தடுக்க மத்திய அரசு மேற் கொண்டு வரும் நடவடிக் கைகள் சூமோட்டோ வழக்காக விசாரித்து வரும் உச்சநீதி மன்றம், இன் றைய விசாரணை யின் போது, தடுப்பூசி விவகா ரத்தை  கையி லெடுத்தது.

விசாரணையின் போது, மத்திய அரசின் சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் நாடுமுழுவ தும் 18- வயதுக்கு மேற் பட்ட தகுதி வாய்ந்த இந் திய குடிமக்கள் அனை வருக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள்  தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும் என்றும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசிகளை கொண்டே திட்டம் நிறைவேற்றப்படும் தெரி வி க்கப்பட்டிருந்தது.

இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள்,  ‘‘44 வயதுக்கு மேற்பட் டோருக்கு தேவையான தடுப்பூசியை  மத்திய அரசு தான் வாங்கி மாநிலங் களுக்கு விநியோகம் செய்கிறது. ஆனால்,  18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர் களுக்கு போடப்படும்  தடுப்பூசி யில் 50 சதவிகிதத்தை மத் திய அரசு வாங்கி விநியோ கிக்கிறது. மீதி  50 சதவிகி தத்தை தனியார் மருத்துவ மனைகள் வசம் ஒப்ப டைத்து விட்டது.

இந்திய அரசு தடுப்பூசி களை வாங்கி அனைத்து மாநிலங்களுக்கும் விநி யோகிக்க வேண்டும்.  ஆனால், அதை செய்யா மல் மாநிலங்கள் தடுமாற் றத்தில் விடப்படுகின்றன. அரசு  மற்றும் தனியார்  கொள்முதலுக்கு அரசு விலை நிர்ணயம் செய் கிறது. நாடு முழுவதும் தடுப்பூசிகளுக்கு இரு வேறு விலை எதற்கு என்று கேள்வி எழுப்பி யதுடன், ஒரே  விலை இருக்க வேண்டும் என் றும், தடுப்பூசிகள் கொள் முதல் மற்றும் கோவின் பயன்பாட்டில் கட்டாய பதிவு குறித்து விளக்கம ளிக்கவும், தடுப்பூசி ற் றாக்குறை தொடர்பாக வும் ஏராளமான புகார் கள் தொடர்ந்து தகவல் கள் வருகின்றன என தெரிவித்தது.

கரோனா தடுப்பூசி தொடர்பாக எழுந்துள்ள குளறுபடிகளை போக்க உத்தரவிட்ட நீதிபதிகள், தடுப்பூசி தொடர்பான கொள்கை முடிவுகள் அடங்கிய பிரமாண பத்திரத்தை 2 வாரங்களில் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு அவகாசம் வழங் கியது. மேலும், நாடு முழு வதும் 18- வயதுக்கு மேற் பட்ட அனைவருக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் கண்டிப்பாக கரோனா தடுப்பூசி செலுத்த வேண் டும்’’ என்றும் உத்தரவிட் டது.

No comments:

Post a Comment