டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* கருநாடகா முதல்வர் எடியூரப்பா ஆட்சியில் ரூ.21,473 கோடி அளவில் ஊழல் நடைபெற்றுள்ளதாக பாஜக சட்ட மேலவை உறுப்பினர் ஏ.எச். விஸ்வநாத் குற்றம் சாட்டியுள்ளார்.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* மூன்று நாட்கள் டில்லி சென்று திரும்பியுள்ள தமிழ் நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர்கள் சோனியா காந்தி, சீதாராம் யெச்சூரி, டி.ராஜா ஆகியோரைச் சந்தித்ததும், பிரதமரிடம் பாஜக கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்கள், குடியுரிமை திருத்த மசோதா உள்ளிட்டவைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்ததும் இந்திய அளவில் எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பை முன்னிறுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* யூடியுப்பில் பெண்களிடம் ஆபாசமாக பேசியது தொடர்பாக மதன் அவரது மனைவி கைது செய்யப் பட்டுள்ளனர்.
* அமெரிக்க நாட்டில் அடிமை முறை ஒழிக்கப்பட்டதை நினைவு கூரும் வகையில் ஜூன் 19 அரசு விடுமுறையாக அதிபர் பைடன் அறிவித்துள்ளார்.
தி இந்து:
* இந்திய அளவில் கரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கையில் ஏனைய பெரு நகரங்களை விட சென்னை முன்னிலையில் உள்ளது.
தி டெலிகிராப்:
* பிரதமர் குறித்த தகவல்கள் 2014-க்குப் பிறகு மட்டுமே தங்களிடம் உள்ளதாக பிரதமர் அலுவலகம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் கேட்கப்பட்ட தகவலுக்கு பதில் தெரிவித்துள்ளது.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment