சென்னை, ஜூன் 19 காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் பணியை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவை கலைத்து தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடகா அரசு 9000 கோடி ரூபாய் செலவில் அணை கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.அணை கட்டப்பட்டால் காவிரி டெல்டா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர் என தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த திட்டத்திற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியது.இந்நிலையில் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் பெறாமல் மேகதாதுவில் அணை கட்டும் பணி நடைபெறுவதாக செய்தி வெளியானது. அதனால் தேசிய பசுமை தீர்ப்பா யத்தின் தென்மண்டல அமர்வு வழக்கு பதிவு செய்தது.
சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் பெறாமல் அணை கட்டப்படுகிறதா என ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைத்து உத்தரவிட்டது.இதற்கிடையில் வழக்கை டில்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்தது. அப்போது கரு நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ‘மேகதாதுவில் அணை கட்ட அனுமதி கோரி கர்நாடக அரசு சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அளித்த மனு நிலுவையில் உள்ளது. அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்ற விசாரணையில் உள்ளது.’எனவே இந்த வழக்கை தென்மண்டல அமர்வில் விசாரித்தால் குழப்பம் ஏற்படும். அதனால் இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும்‘ என்றார். அதை ஏற்று தென்மண்டல அமர்வு நியமித்த குழுவை கலைத்து தீர்ப்பாயம் வழக்கை முடித்து வைத்தது.
No comments:
Post a Comment