பா.ஜ.க. ஆளும் அசாமில் மருத்துவர்மீது தாக்குதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 3, 2021

பா.ஜ.க. ஆளும் அசாமில் மருத்துவர்மீது தாக்குதல்

 மருத்துவர்கள் கண்டனம்

கவுகாத்தி, ஜூன்  3- அசாம் மாநிலம் ஹோஜாய் நகரில் உள்ள உதலி மாடல் மருத்துவமனையில் கரோனா நோயாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந் தார். இதுபற்றி தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர், உறவி னர்கள் ஆத்திரத்தில் மருத்துவ மனையை அடித்து நொறுக்கினர்.

இதனால் மருத்துவமனையில் உள்ள ஊழியர்கள் அவசரம் அவசர மாக மருத்துவமனையில் இருந்து வெளியே றினர். மருத்துவர் சேனாபதி ஒரு அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டார். ஆனால், அந்த கும்பல் கதவை உடைத்து மருத்துவரை கொடூரமாக தாக் கினர். இதில் பலத்த காய மடைந்த அவர், அருகில் உள்ள வேறு ஒரு மருத்துவ மனையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அசாம் மாநிலத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவர் சேனாபதி தாக் கப்பட்டபோது எடுத்த வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. உயிரை பணயம் வைத்து கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவப் பணியாளர் களுக்கு இந்த நிலையா? என பலரும் சமூக வலைத்தளங்களில் கண்டனங் களை பதிவு செய்தனர்.   இந்த தாக்குதல் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 24 பேரை கைது செய்துள்ளனர். குற்றவாளிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அசாம் மருத்துவ சேவை சங்கம் வலியுறுத்தி உள்ளது.

No comments:

Post a Comment