தடுப்பூசியை இலவசமாக அளிக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்: பினராய் விஜயன் கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 1, 2021

தடுப்பூசியை இலவசமாக அளிக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்: பினராய் விஜயன் கடிதம்

 திருவனந்தபுரம், ஜூன்கரோனா தடுப் பூசியை இலவசமாக வழங் குவதற்கு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும், என்று தமிழ் நாடு உள்பட 11 பா... அல்லாத இதர மாநில முதல்வர்களுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் கடிதம் எழுதியுள் ளார்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவு கிறது. மாநில அரசுகளுக்கு மத்திய அரசு முறையாக தடுப்பூசிகளை விநியோ கம் செய்ய மறுத்து வரு கிறது. மாநிலங்கள் சொந்த மாகவே தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய வேண் டும் என்று தெரிவித்துள் ளது. இதனால் தமிழ்நாடு, கேரளா உள்பட பல மாநிலங்கள் சொந்தமாக வே தடுப்பூசியை வாங்க பன்னாட்டு அளவில் டெண்டர் கோரியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஆந்திரா, தெலங்கானா உள்பட  பாஜ அல்லாத இதர 11 மாநில முதல்வர்களுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது:

இந்த மோசமான சூழ் நிலையில் மாநிலங் களுக்கு மத்திய அரசு போதிய தடுப்பூசி வழங்காமல் இருப்பது வாய்ப்பு கேடா னது. மாநிலங்கள் சொந்த மாக தடுப்பூசி வாங்கிக் கொள்ள  வேண்டும் என்று மத்திய அரசு கூறு கிறது. ஆனால், தடுப் பூசிக்கு கடும் தட்டுப்பாடு இருப்பதால் மாநில அரசு களால் அதை வாங்க முடியாத நிலை உள்ளது. வெளிநாட்டு நிறுவனங் கள் தடுப்பூசியை விற்பனை செய்வது தொடர்பாக மாநில அரசுகளிடம் ஒப் பந்தம் ஏற்படுத்த மறுக் கிறது. போதுமான அளவு தடுப்பூசி இருந்தால் மட்டுமே நம்மால் 3வது அலையை சமாளிக்க முடி யும்.  எனவே மக்களின் நல னைக் கருத்திற் கொண்டு போதிய தடுப் பூசிகளை மாநிலங்களுக்கு வினி யோகிக்க மத்திய அரசை நாம் இணைந்து வலி யுறுத்த வேண்டும். அனை வருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதி கரித்தால் மட்டுமே கரோ னாவை நாம் வெல்ல முடியும் என கடிதத்தில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment