தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம் மீண்டும் கர்நாடகாவிற்கு கொண்டுசெல்ல முயன்றபோது ஆர்.எஸ்.எஸ் பிரமுகரின் காரில் பணம் பிடிபட்டது. அது கறுப்புப்பணம் என்றும், அது தேர்தல் செலவிற்காக பா.ஜ.க. தலைமையால் கொடுக்கப்பட்டது என்றும் பிடிபட்ட ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வாக்குமூலம் அளித்துள்ளார்
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. கடும் தோல் வியைச் சந்தித்தது. அக்கட்சிக்கு மேலும் சோதனையாக அதன் பிறகு, கோடகரா கறுப்புப் பண வழக்கில் கட்சி சிக்கியுள்ளது. பா.ஜ.க. ஒரு ‘வித்தியாசமான கட்சி’ என்பது இது தானோ!
ஏற்கெனவே மாநிலத் தலைமையால் தேர்தல் நிதி வழங்குவதில் பரவலான முறைகேடுகள் நடந்ததாக சில தலைவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு. ஒரு பகுதியினருடன் உட்கட்சிப் பூசல் தீவிரமடைந்தது.
கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி கோடகராவில் சென்று கொண்டிருந்த ஒரு காரில் இருந்து பிடிபட்ட கணக்கில் வராத பணம் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஒதுக் கப்பட்டது என ஆர்.எஸ்.எஸ் தொண்டரும் இளைஞர் அணி முன்னாள் தலைவரும் ஆன ஒருவர் தெரிவித்தார். இந்தக் காரில் ரூ.3.5 கோடி இருந்தது. இந்தப் பணம் கர்நாடகாவிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதையொட்டி மாவட்ட அளவிலான பல தலை வர்களை காவல்துறையினர் விசாரித்துள்ளனர். இவர்களில் பா.ஜ.க. மாநிலப் பொதுச் செயலாளர் (அமைப்பு) எம். கணேசன் மற்றும் மாநில அலுவலகச் செயலாளர் ஜி. கிரீசன் ஆகியோரும் அடங்குவர், இந்த விசாரணை மூத்த தலைவர்கள் வரை செல்லலாம் என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
கோடகரா நிகழ்வுக்குப் பிறகு பா.ஜ.க.வின் இருபிரிவினருக்கு இடையே நடந்த வன்முறை மோதலால் கட்சியின் மரியாதை கேலியானது. இது குறித்து திருச்சூர் மாவட்டத் தலைவர்கள் மீது முகநூலில் குற்றம் சாட்டிய பா.ஜ.க. பிரமுகர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கறுப்புப் பண விவகாரத்தைக் கண்டு கொள்ளாமல் பா.ஜ.க. மாநில தலைவர் சுரேந்திரன் விலகி உள்ளார். அவர் அனைத்துத் தேர்தல் செலவுகளும் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் வெளிப்படையாக நடந் துள்ளதாகக் கூறி உள்ளார். பின் ஏன் பதவி விலக வேண்டுமாம்? கேரள மாநிலத்தில் ஓரிரு இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என எதிர்பார்க்கப் பட்ட நிலையிலும்கூட, கேரள மாநிலத்தில் பா.ஜ.க. பெருமளவில் பணம் செலவழித்ததுதான் வேடிக்கை!
ஒரு கட்சியைப் பொறுத்தவரை, பிரச்சினைகள் உருவாகும் நேரத்தில் அது பின்பற்றும் நிலைப்பாட்டைப் பொறுத்தே மதிக்கப்படுகிறது. பா.ஜ.க. தனது தொண் டர்களை விடப் பணத்தை நம்பி தொடர்ந்து நம்பி வருகிறது. பா.ஜ.க. மாநில பிரிவுகளுக்கு இடையே தேர்தல் நிதி குறித்து கடும் புகார்கள் எழுந்துள்ளதால் உள் தணிக்கை நடக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர். இந்த நிதி ஒதுக்கீடு தொகுதிகளை ஏ,பி,சி என வகைப்படுத்தி அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில் இது போல் கோடிக்கணக்கான செலவழிக்காத பணம் கேரள பா.ஜ.க. பிரமுகர்களிடம் உள்ளது என்றும், அவற்றை எல்லாம் தலைமை கேட்டு உள்ளது என்றும், அவற்றை தலைமைக்குக் கொண்டு செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் பிடிபட்ட ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் கூட பா.ஜ.க. போட்டியிடும் ஒவ்வொரு தொகுதிக்கும் ரூபாய் 13 கோடி ஒதுக்கி இருந்ததாக ஒரு நடிகர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். தற்போது ஒரு இடம் கூட வெற்றி பெற முடியாது என்று தெரிந்தே கேரளத்தில் பல கோடிகளைச் செலவளித்த பா.ஜ.க. தமிழகத்தில் செலவழித்தபணம் எவ்வளவு என்று தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஹிந்துத்துவா என்பதும், ராமராஜ்ஜியம் என்பதும் இந்தத் தரத்தைச் சார்ந்தவை தானா என்பதுபற்றி நாட்டு மக்கள்தான் சிந்திக்க வேண்டும்.
சூத்திரன் சம்பூகனை ராமன் கொடு வாளால் வெட்டியது வருணாசிரம தர்மத்தைக் காப்பாற்றத்தானே!
பா.ஜ.க. என்பதும் வருணாசிரம தர்மத்தைக் காப் பாற்றும் கொள்கை உடையது என்பதைப் புரிந்து கொண்டால் இதன் பின்னணி என்ன என்பது விளங்கும்.
No comments:
Post a Comment