மதுரை, ஜூன் 1 மதுரை திராவிடர் கழக காப் பாளர் சே.முனியசாமி..தனபாக்கியம் ஆகியோ ரின் மகள் இந்திரா---சிவக் குமார் ஆகியோரின் செல்வி சத்ய பிரியா - பட்டுக் கோட்டை ஆசிரியர்கள் ஜெயசீலன்--கிறிஸ்டி விமலா ஆகியோரின் செல்வன் பொறியாளர் ஜெ.ஜெஃப்ரிக்கும், 17.-05.-2021 திங்கள் காலை 10 மணிக்கு மதுரை இரயில் நிலையம் எதிரில் உள்ள ராயல் கோர்ட் ஹோட்டலில் வாழ்க்கை இணை ஏற்பு விழா நடை பெற்றது.விழாவில் திராவிடர் கழகத்தின் மாவட்டத் தலைவர் அ.முருகானந்தம், பகுதி செயலாளர் ஆட் டோ செல்வம் மற்றும் உறவுகள் உள்பட 50 பேர் முகக்கவசம் அணிந்து, சமூக இடை வெளியோடு கலந்து கொண்டனர்.மண மகளின் சகோதரர் அருண் விழா விற்கு வருகை தந்தவர்களை வர வேற்றார்.
ஜாதி, மதமறுப்பு வாழ் விணையர் ஏற்பு விழாவாக நடந்த நிகழ்ச் சிக்கு தென் மாவட்ட பிரச்சார குழு தலைவர் தே.எடிசன்ராஜா தலை மையேற்றார்.மாநில வழக்குரைஞரணி செயலாளர் மு.சித்தார்த் தன் துணை செயலாளர் நா. கணேசன் மண்டல செயலாளர் கா.சிவகுரு நாதன் மண மகனின் பெரியதந்தை அருள்ஜோதிமணி ஆகி யோர் மணமக்களை வாழ்த்தி உரையாற்றினர்.அருட் தந்தை அருள் ஜோதிமணி உரையாற்றிய போது இவ்விடத்திலி ருந்து முழுக்கால் ஆடை யும் சட்டையும் போட்டு ஒரு கல்வியாளனாக இங்கே நிற்பதற்கு கார ணம் தந்தை பெரியார். சமூகத்தில் அடித்தட்டு மக்களின் கல்வியறிவு பெற தந்தை பெரியாரே காரணம் என்பதை நன்றி உணர்வோடு தெரிவித்து கொள்வதாக கூறினார்.மண மக்களை வாழ்த்தி ,தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வாழ்த்து செய்தியினை, திராவிடர் கழகத்தின் மாநில அமைப் புச் செயலாளர் வே.செல் வம் வாசித்து அளித்தார்.
மணமக்களை உறுதி மொழியை சொல்லச் சொல்லி, இணை ஏற்பு விழாவை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் முனைவர் வா. நேரு நடத்திவைத்தார். அவர் தனது உரையில் அய்யா சே.முனியசாமி அவர் களின் இல்ல இணை ஏற்பு விழாவை நடத்தி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி, அய்யா சே.முனி யசாமி அவர்கள் உழைப் பால் உயர்ந்தவர். இராம நாதபுரத்திற்கு அருகில் உள்ள ஊரில் பிறந்து, வாழ்க்கையில் பல்வேறு சவால்களைச் சந்தித்து, தனது உழைப்பால், நேர் மையால், தந்தை பெரியார் கொள்கையால் வெற்றி பெற்று காட்டியுள்ளவர். உலகின் பல நாடுகளுக்கு பய ணம் செய்தவர்.
ஜெர்மனியில் நடை பெற்ற பெரியார் பன் னாட்டு மய்ய மாநாட் டுக்கெல்லாம் சென்று வந்தவர். இது ஒரு காதல் திருமணம். ஜாதி மறுப்பு, மத மறுப்பு, சடங்குகள் மறுப்பு திரு மணம். வெகு சிறப்பாக அய்யா ஆசிரியர் அவர்களை வைத்து, ஒரு கொள்கைத் திருவிழாவாக நடத்த வேண்டும் என்று அய்யா முனியசாமி ஆசைப்பட்டார். அய்யா ஆசிரியர் தேதி இல்லாத தால், துணைத்தலைவர் கவிஞர் அவர்களிடம் தேதி வாங் கினார். கரோ னா காலம் என்பதால் அவரும் வர இயலவில்லை. இருந்தாலும் இன்றைக்கு கழகப் பொறுப் பாளர் களை வைத்து இங்கு இணை ஒப்பந்தம் நடை பெறுகிறது. ஒரு வகையில் தந்தை பெரியார் சொன்ன சிக்கனத்திருமணமாக, வெகு குறை வான எண் ணிக்கையில் வாழ்த்து பவர்கள் இருக்கக்கூடிய நிலையிலே இத்திருமணம் நடைபெறுகிறது. இல் லறம் ஏற்கும் இருவரும், நல்ல படிப்பு படித்துள் ளார்கள். பணியாற்று கிறார்கள். நல்ல வரு மானம் பெறுகிறார்கள். எங்கள் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், எல்லாத் திருமண வீடு களிலும் மறக் காமல் ஒரு செய்தியைச் சொல்வார்.
மணமக்களே, நீங்கள் படித்துள்ளீர்கள், பணி யாற்றுகிறீர்கள். எந்த நிலையிலும் உங்கள் பெற் றோரை நீங்கள் கவனித் துக்கொள்ளுங்கள்.
இன்று பெற்றோர்கள் பிள்ளைகளிடம் எதிர் பார்ப்பது எல்லாம் அன்பு, பாசம் தான் .அதற்கு குறைவில்லாமல் பார்த் துக்கொள்ளுங்கள் என்று சொல்வார்.
அந்த வகை யில் நீங்கள் நடந்து கொள் ளுங்கள்.
தந்தை பெரியாரின் சிக் கனத்தைப் பின்பற்றுங்கள்.மற்றவர்களுக்கு தொண் டறம் செய்யும் வாழ்வாக உங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளுங் கள் என்று குறிப்பிட்டு, சுயமரியாதைத் திருமண நிகழ்வுக்கு ஒத்துக் கொண்ட மணவீட்டாரைப் பாராட்டி, மணமகளின் பெற் றோரையும் பாராட்டி, இந்த இனிய இணை ஏற்பு நிகழ்வுக்கு காரணமான சே.முனிய சாமி-தனபாக்கி யம் தம்பதி யரையும் பா ராட்டி உரையாற்றினார். மாநில அமைப்புச் செய லாளர் வே.செல்வம் மண விழா மணப்பெண் மற்றும் மணவிழா சிறப் புடன் நடை பெற முனிய சாமி குடும்பத்தினர் மண மகன் வீட்டார்களை பாராட்டி நிகழ்வை ஒருங் கிணைத் தார். நிறைவாக பெரி.காளியப்பன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment