கேள்வி: அரசியல் தலைவர் கலைஞர், தமிழ றிஞர் கலைஞர் இதில் எதை அதிகமாக விரும்புகிறீர்கள்?
கலைஞர்: இந்த இரண் டையும்விட அய்யாவின் மாணவர் கலைஞர், அண் ணாவின் தம்பி கலைஞர் என்பதையே அதிகம் விரும் புகிறவன் நான்.
- ('தினகரன்' பேட்டி - 6.5.2006)
பதவியொரு முள் மாலை; இலக்கியப் பணி எனக்கு முல்லைச்சரம்.
பதவியொரு நெடும் பள்ளம்; பொதுப்பணி எனக் குப் பொதிகைக் குன்றம்.
மானமா? மகுடமா? எனக் கேட்டால், மானத்தை மட்டுமே மதிக்கும் மனிதன் நான்.
கிரீடமா? தலையா? எனக் கேட்டால், கிரீடமே போதுமென இளிக்கின்ற கிறுக்கனல்ல நான்.
அதனால்தான் 'உறவுக் குக் கைகொடுப்போம்' என்றுரைத்துப் பதவி துற வுக்கும் தயாராகிப் பத்தாண் டுக்கும் மேல் கழித்தவன் நான்.
பணிபுரியும் வாய்ப்புத் தான் பதவி.
பதவி, பவிசு, படா டோபம் எல்லாமே ஊதிய பலூனைப் போல் வெடித்து விடும்; பண்பார்ந்த தொண் டொன்றே வானைப் போல நிலைத்து நிற்கும்.
(தொலைக்காட்சியில் கலைஞர் அவர்கள் பாடிய கவிதையிலிருந்து ...14.4.1990)
நான் தலைவனாக விளங்குகின்றேனோ இல்லையோ, இளமை தொட்டு தென்னையின் விழாத மட்டைகள் தரும் பயன்களையும், விழுந்த மட்டைகள் விட்டுச் சென்ற வடுக்களையும் கண்டு ணர்ந்து தொண்டுள்ளத் தைத் தொலைக் காமல் இருப்பவன். மானமிகு இல் லையேல், மாண்புமிகுவுக்கு மதிப்பில்லை என்று அறிந் தவன்.
- (முரசொலி 15.9.2006)
சேகர் குப்தா: நீங்கள் கட வுளை நம்புகிறீர்களா?
கலைஞர்: ஆமாம். ஒரே ஒரு கடவுளை நம்புகிறேன்.
சேகர் குப்தா: எந்தக் கடவுளை நம்புகிறீர்கள்?
கலைஞர்: எனது மன சாட்சியை.
(என்.டி.டி.வி. தொலைக் காட்சிக்கு முதலமைச்சர் கலைஞர் அளித்த பேட்டியிலிருந்து)
அரசியலில் இருந்து கொண்டு - அதே நேரத்தில் தன்னை வளர்த்துத் தாலாட் டிய சுயமரியாதை இயக்கத் தின் - அதன் தலைவர் தந்தை பெரியாரின் அடிப் படைத் தத்துவக் கொள் கைக் குருதியோட்டத்தி லிருந்து கடுகு மூக்கு அளவும் விலகாத மாறாத தொண்டால் அளந்த - உயர்ந்த தலைவருக்குப் பெயர்தான் "மானமிகு கலைஞர்!"
இன்று அவர் பிறந்த பொன்னாள்! (1924) வாழ்க கலைஞர்!
- மயிலாடன்
No comments:
Post a Comment