சிறுநீரகச் செல்களைப் பாதிக்கும் கரோனா வைரஸ் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 19, 2021

சிறுநீரகச் செல்களைப் பாதிக்கும் கரோனா வைரஸ்

கரோனா தொற்று சிறுநீரகத்தை பாதிக்குமா என்பதை ஆராய்ச்சி செய்வதற்காக மனித சிறுநீரக செல்களை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வகத்தில் ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள்அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் நெப்ராலஜிஎன்ற இதழில் வெளிவந்துள்ளன.

கரோனா தொற்று பாதிக்கும் பல நபர்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால் இது வைரஸால் நேரடியாக ஏற்பட்ட விளைவா அல்லது தொற்று பாதித்த உடலின் பிரதிபலிப்பா என்பது இதுவரை தெளிவாக தெரியவில்லை. இதனை ஆய்வு செய்வதற்கு பெஞ்சமின் டெக்கெல் (ஷெபா மருத்துவ மய்யம், இஸ்ரேல்) தலைமையிலான குழு ஆய்வகத்தில் மனித சிறுநீரக செல்களை உருவாக்கி அதில் SARS-CoV-2 தொற்றை செலுத்தினர்.

SARS-CoV-2  கரோனா வைரஸ் மனித சிறுநீரக செல்களில் தொற்று பாதிப்பை ஏற்படுத்தி அதில் ரிப்லிக்கேட் செய்யக்கூடும். ஆனால் உயிரணு இறப்புக்கு வழிவகுக்காது. ஏற்கெனவே சிறுநீரக செல்களில் பாதிப்புகள் இருந்தால் மிகவும் எளிதாக பாதிக்கப்பட்டு கூடுதலாக பாதிப்பு உருவாக்கக்கூடும். நோய்த்தொற்றுக்கு முன்னர், உயிரணுக்களில் அதிக அளவு இன்டர்ஃபெரான் சமிக்ஞை மூலக்கூறுகள் இருக்கும். நோய்த்தொற்று ஏற்பட்டவுடன் உடலில் பாதிப்புகளை தடுக்கக்கூடிய அமைப்பு இந்த மூலக்கூறுகளை அதிகரிக்கும். இதற்கு நேர் மாறாக அத்தகைய மூலக்கூறுகளில் உள்ள குறைபாடுள்ள சிறுநீரக செல்கள் செல் இறப்புக்கு வழிவகுக்கிறது.

இந்த சோதனைகளில் உள்ள செல்கள் ஆரோக்கியமான சிறுநீரகத்தைப் பின்பற்றும் முப்பரிமாண கோளமாக அல்லது தீவிரமாக பாதிப்படைந்த சிறுநீரகத்தின் செல்களைப் பிரதிபலிக்கும் இரு பரிமாண அடுக்காக வளர்ந்தன. கடுமையாக பாதிப்படைந்த சிறுநீரகத்தை பிரதிபலிக்கும் செல்கள் தொற்று மற்றும் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்றும் உயிரணு இறப்பு ஏற்படாது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

COVID-19 நோயாளிகளில் காணப்படும் கடுமையான சிறுநீரக பாதிப்புக்கு வைரஸ் ஒரு முக்கிய காரணம் என்பது சாத்தியமில்லை என்று தரவு குறிப்பிடுகிறது. எந்தவொரு காரணத்தினாலும் சிறுநீரகத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அதை வைரஸ் தீவிரப்படுத்தும் என ஆய்வு கூறுகிறது. ஆகையால், கடுமையான சிறுநீரகக் பாதிப்பை முதலில் கட்டுப்படுத்த முடிந்தால், வைரஸால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்கான வாய்ப்பு இருக்கலாம் என்று டாக்டர் டெக்கலை மேற்கோள் காட்டி ASN வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment