பொதுமக்களின் வாட்ஸ் ஆப் தகவல்களையும் மனுக்களாக கருதி நடவடிக்கை: விழுப்புரம் ஆட்சியர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 17, 2021

பொதுமக்களின் வாட்ஸ் ஆப் தகவல்களையும் மனுக்களாக கருதி நடவடிக்கை: விழுப்புரம் ஆட்சியர்

 விழுப்புரம், ஜூன்17- பொதுமக்களின் வாட்ஸ் ஆப் தகவல்களையும் மனுக்களாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என, விழுப்புரம் மாவட்டத்தின் 21ஆவது ஆட்சியராக பொறுப்பேற்ற மோகன் உறுதியளித்தார்.

விழுப்புரம் ஆட்சியராக பணியாற்றிய அண்ணாதுரை வேளாண்மைத்துறை இயக்குநராக பணிமாறுதல் செய்யப் பட்டார். இதனை தொடர்ந்து, டாஸ்மாக் மேலாண்மை இயக்குநராக பதவி வகித்த மோகன் இன்று (ஜூன் 16) காலை விழுப் புரம் ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நேற்று முதல்அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் புதிதாக பொறுப்பேற்க உள்ள ஆட்சி யர்களுக்கு எப்படி பணியாற்ற வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்பட்டது. முதல் அமைச்சரின் 7 அம்ச திட்டத்தை இம்மா வட்டத்தில் செயல்படுத்த முழு கவனம் செலுத்துவேன். 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக முடிவுகள் எடுக்கப்பட்டு, தீர்வு காணப்படும். திங்கட் கிழமைகளில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சம்பிரதாயமாக இல்லாமல் அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காணப்படும். பொதுமக்கள் திங்கட் கிழமைகளில் என்னை நேரில் சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம். இம்மாவட் டத்தை கரோனா இல்லாத மாவட்டமாக கொண்டுவர சுகாதாரத்துறையினர் ஒத்து ழைப்புடன் நடவடிக்கை எடுக்கப்படும். என் மொபைல் எண்ணுக்கு எப்போதும் தொடர்புகொண்டு பேசலாம். வாட்ஸ் ஆப் மூலம் பெறப்படும் தகவல்களும் மனுக் களாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறினார்.

 

மேற்குவங்கத்தில் தனியாக செயல்பட உள்ள 14 பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள்

கொல்கத்தா,  ஜூன் 17 மேற்கு வங்க பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் 24 பேர் திருணாமுல் காங்கிரஸ் கட்சி தாவலாம் எனக் கூறப்படுகிறது.

மேற்கு வங்க தேர்தலின் போது திருணாமுல் காங்கிரஸை சேர்ந்த பலர் பாஜகவுக்குத் தாவினர்.  தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்னும் ஊகத்தில் பலரும் தாவினர்.  ஆனால் தேர்தல் முடிவுகள் வேறு விதமாக அமைந்தது.  ஆளும் கட்சியான திருணாமுல் காங்கிரஸ் அறுதி பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.   திருணாமுல் காங்கிரஸ் தலைவி மம்தா மீண்டும் முதலமைச்சர் ஆனார்.

இதையொட்டி ஒவ்வொருவராக மீண்டும் திருணாமுல் காங்கிரசுக்குத் திரும்ப விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.  பாஜகவில் 5 வருடங்களுக்கு மேல் இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் முகுல் ராய் மீண்டும் திருணாமுல் திரும்பி உள்ளார்.  மேலும் பலர் கட்சிக்கு திரும்பி வர விரும்பிய போதிலும் கட்சித் தாவல் சட்டம் காரணமாகப் பயந்துள்ளதாகக் கூறப்படுகிறது.நேற்று தேர்தலுக்கு முன்பு பாஜக தாவிய சுவேந்து அதிகாரி தலைமையில் மேற்கு வங்க ஆளுநர் ஜகதீஷ் தன்கரை சந்தித்தனர்.  அப்போது மொத்தம் உள்ள 74 பேரில் 24 சட்டமன்ற உறுப்பினர்கள் ஏக்கள் பங்கேற்கவில்லை.  இது பாஜக  தலைமைக்குக் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.  

No comments:

Post a Comment