உச்சநீதிமன்ற அறிவுரைக்கு இணங்க தெளிவான கொள்கையை வகுத்து அவசரமாக செயல்படுக!
கரோனாவை
ஒழிக்கும் பணியில் மாநில அரசு அதிவேகமாக செயல்படும் ஒரு சூழலில்- தருணத்தில் தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசு தாமதம் காட்டலாமா? உச்சநீதிமன்றத்தின் கேள்விகளுக்கு என்ன பதில்? உச்சநீதிமன்ற அறிவுரையை ஏற்று, தெளிவான கொள்கையை வகுத்து மத்திய அரசு செயல்படட்டும் என்று திராவிடர்
கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள்
அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை
வருமாறு:
கரோனா
கொடுந்தொற்றின் இரண்டாம் அலைவீச்சின் வேகம் கடந்த சில நாள் களாக சற்று குறைந்து வருகிறது; என்றாலும், உயிர்ப்பலிகள் அதிகம். அத்துடன் கரும் பூஞ்சை என்ற கொடிய நோய் கண்களை (கரோனாவுடன் அதிகமான நீரிழிவு நோய் கட்டுப்பாடற்ற நிலையில் உள்ளவர்களுடன்) பாதித்து உயிர்க்கொல்லியாகி வரும் நிலை யில், முழு ஊரடங்கு - தளர்வற்ற நிலையில் என்று மாநில அரசுகள் கசப்பு மருந்தினை மக்களுக்கு அளித்து கரோனாவை கட்டுக்குள் கொணர்ந்து, அறவே ஒழிக்க ஆயத்தமாகி வருகின்றன.
மத்திய
கூட்டரசு தனது பங்கை அதிக மாக செலுத்தவேண்டிய இந்தக் காலகட்டத் தில், தடுப்பூசி விநியோகம்பற்றிய திட்ட வட்டமான கொள்கையை அறிவிக்காமல், அவ்வப்போது தோன்றுவதை திட்டவட்ட மாகக் குறிப்பிடுவதால், மக்களை நேரிடை யாக ஆளும் மாநில அரசுகள் பல வகை யில்,
தங்களது முயற்சிகளுக்குத் தேக்கம் ஏற்படும் நிலையே திணிக்கப்பட்டுள்ளது.
மக்களின் உயிர் காப்பு - நல வாழ்வு - வாழ்வாதாரப் பாதுகாப்பு பணிகள்!
எடுத்துக்காட்டாக,
தமிழ்நாட்டில் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின்
தலைமையில் அமைந்துள்ள தி.மு.க.
ஆட்சி நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் மற்ற பணிகளை சற்று ஒதுக்கி வைத்து, கரோனா ஒழிப்பிற்கு முன்னுரிமை கொடுத்து - மக்களின் உயிர் காப்பு - நல வாழ்வு - வாழ்வாதாரப்
பாதுகாப்புக்காக - மக்களி டையே விழிப்புணர்வு பிரச்சாரம்
(முகக் கவசம் அணிதல், தனி நபர் இடைவெளி, அடிக்கடி சோப்புப் போட்டு கைகளைக் கழுவுதல், கிருமி நாசினி பயன்படுத்துதல், தடுப்பூசி போட்டுக் கொள்ளத் தயங்காமை) சிறப்பாக செய்தும், மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறைப் போக்கக் கூடுதல் படுக்கைகள், ஆக்சிஜன் செறி வூட்டிகள், பசித்த நோயாளிகளுக்கு இலவச சத்துணவு, மருந்துகள் இவற்றைத் தருவ திலும் மிகுந்த கவனஞ் செலுத்தி வருகிறது.
முன்பு
தடுப்பூசி போடத் தயங்கிய மக்கள், இளைஞர்கள் உள்பட தாமே முன்வந்து போட்டுக்கொள்ள ஆயத்தமாகி - ஆங்காங்கே மருத்துவமனைகளுக்கும், மய்யங்களுக்கும் ‘படையெடுக்கின்றனர்!'
வெந்த புண்ணில் வேலைச் செருகுவது!
இந்நிலையில்,
தமிழ்நாட்டில் இந்த வேகத்திற்கு - ஒரு வேகத் தடை போல - தடுப்பூசி போடப்படுவது சில நாள்கள் நிறுத்தி வைக்கப்பட வேண்டிய நிலை - மத்திய அரசிடமிருந்து கிடைக்கவேண்டிய தடுப்பூசி வராத காரணத்தால் தடுப்பூசி போட முடியாத நிலை (ஜூன் 6 ஆம் தேதி வரை) ஏற்பட்டுள்ளது என்பது வெந்த புண் ணில் வேலைச் செருகுவதாக இருக்கிறது!
மக்கள்
நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர்
இராதா கிருஷ்ணன் தடுப்பூசி விநியோகம் இல்லை என்பதால், தடுப்பூசி போடப்படுவது நிறுத்தி வைக்கப்படுகிறது என்று கூறியுள்ளனர்.
உச்சநீதிமன்றம்
எழுப்பியுள்ள கேள்வி கள் வருமாறு:
‘‘1. தடுப்பூசி
வழங்குவதில் மத்திய அரசு என்ன கொள்கை வகுத்துள்ளது?
2. மத்திய
அரசு குறைந்த விலைக்கு தடுப்பூசிகளை வாங்கும் நிலையில், மாநிலங்களுக்கு மட்டும் அதிக விலை நிர்ணயித்திருப்பது ஏன்?
3. மாநிலங்கள்
அவர்களாகவே சமாளித்துக் கொள்ளட்டும் என்று மத்திய அரசு விட்டுவிடப் போகிறதா?
4. உடனே
தடுப்பூசிக் கொள்கை ஒன்றை வகுத்து அதனை மாநிலங்களுக்குத் தெரிவிக்கவேண்டும்.
5. தடுப்பூசிக்கு
மத்திய அரசு விலை நிர்ணயம் செய்யாவிட்டால் தட்டுப்பாடு வரும்போது, ரூ.2,000 வரை கூட வசூலிக் கப்படலாம். ரெம்டெசிவீர் மருந்து பற்றாக் குறை நிலவியபோது அதன் விலை உச்சத்துக்குச் சென்றுள்ளது ஏன்?''
உச்சநீதிமன்ற நீதிபதியின் சரமாரியான கேள்விக் கணைகள்!
உச்சநீதிமன்ற
நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்
தலைமையில் அமைந்த மூன்று நீதிபதி களைக் கொண்ட அமர்வில் இப்படி சரமாரி யான பல கேள்விகளை மத்திய
அரசின் வழக்குரைஞரை நோக்கிக் கேட்டுள்ளனர்.
அமர்வின்
தலைவராக உள்ள ஜஸ்டீஸ் டி.ஒய்.சந்திரசூட்
கரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்; வேதனை தாள முடியாமல், ‘‘மத்திய அரசுக்கு உதவத்தான் நாங்கள் இத்தனை கேள்விகளைக் கேட்கி றோம்; தவறை ஒப்புக்கொள்வதுதான் ஓர் அரசுக்குத் துணிவு, பெருமையும்கூட! தனிப்பட்ட எனது உடல்நலத்தை விட நாட்டு மக்களின் பாதுகாப்பே முக்கியம்'' என்றெல்லாம் கூறியிருப்பது எதை உணர்த்துகிறது?
பிரதமர்
மோடி தலைமையிலான அர சுக்கு கரோனா
தொற்றில் குறிப்பாக தடுப் பூசி வழங்குவதில் ஏற்பட்டுள்ள தடுமாற்றம், தடமாற்றம் - இவற்றைப் பற்றியதைத்தானே!
குழப்பங்களும், குளறுபடிகளும் ஏன்?
முதலில்
எல்லோருக்கும் இலவசத் தடுப்பூசி போடப்படும் - வழங்கப்படும் என்ற அறிவிப்பு, பிறகு ஒவ்வொரு கட்டம் - பிறகு மாநிலங்களுக்கே பொறுப்பை விட்டுவிட்ட ஒரு புது நிலைப்பாடு, பிறகு மாநிலங்கள் நேரடியாக வரவழைக்க முயலு கையில், அதில் மருந்து கம்பெனிகளின் தயக்கம், முட்டுக்கட்டை போல மாநிலங் களுக்கு மருந்து கம்பெனிகள்மூலமாக தனியே விற்பதில் தடை - இத்தனை குழப்பங்களும், குளறுபடிகளும் ஏன்?
தடுப்பூசிதான்
ஒரே போராயுதம் இப் போது என்பது தெளிவாகி விட்ட நிலையில், இந்த வேகத் தடையை அகற்றி, மக்களின் உயிர் காக்க மாநிலங்களை ஊக்கப்படுத் திடவேண்டாமா மத்திய அரசு!
மத்திய அரசு ஒப்புதல் தருவதில் ஏன் இப்படி மெத்தனம்?
செங்கற்பட்டில்
6 ஆண்டுகளாக மூடிக் கிடக்கும் தொழிற்சாலையை இயக்கி, தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்குவதற்கு, மாநில அரசு தனது தொழில்துறை அமைச்சர்
தங்கம் தென்னரசு அவர்களை டில்லிக்கு அனுப்பி, தி.மு.க. நாடாளுமன்ற
கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு
அவர்களோடு சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரைப் பார்த்து ஒரு வாரம் ஆகிறது; இன்னும் ‘‘உண்டு, இல்லை'' என்ற பதில் வரவில் லையே! போர்க்கால நடவடிக்கை போல மாநில அரசு செயல்படும்போது, மத்திய அரசு ஒப்புதல் தருவதில் ஏன் இப்படி மெத்தனம்?
மக்களின்
உயிர்ப் பிரச்சினை அல்லவா?
தடுப்பூசி
வழங்குவதில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு அளவுகோல் என்பது போன்ற மத்திய அரசின் அணுகு முறை; அது பாரபட்சத்துடன் நடத்துகிறது என்ற குற்றச்சாட்டு எழ வழிவகுப்பதாக இல்லையா?
கேரள
முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள், தடுப்பூசி வழங்குவதில் மத்திய அரசின் நடவடிக்கைகள் பாரபட்சமாக இருப்பதை மாற்றிக் கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தி, பா.ஜ.க.
அல்லாத 11 மாநில முதலமைச்சர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
மக்களை
ஏமாற்றத்திற்கு உள்ளாக்கலாமா?
கூட்டுறவு
கூட்டாட்சி (Co-operative Federation) என்று பா.ஜ.க.
கூறிக் கொண்டே இப்படி மக்களின் உயிர் காக்கும் போரில்கூட தொய்வும், தேக்கமும் ஏற்பட்டு, தடுப்பூசி போட முன் வந்த மக்களை - இளைஞர்களை மிகுந்த
ஏமாற்றத்திற்கு உள்ளாக்கலாமா?
உதவாதினி
தாமதம் - உடனே செயல் பட்டு, தடுப்பூசிகளைத் தட்டுப்பாடின்றி தமிழகத்திற்கும்
மற்ற மாநிலங்களுக்கும் அனுப்ப மத்திய அரசு ஏற்பாடு செய்வது அவசரம், அவசியம்!
அவசரத்
தேவையாகும்!
உச்சநீதிமன்றத்தின்
அறிவுரைக்கு இணங்கி, ஒரு தெளிவான கொள்கை வகுத்து நாட்டுக்கு அறிவிப்பதும் அவசரத் தேவையாகும்!
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
1.6.2021
No comments:
Post a Comment