அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு
சென்னை,ஜூன்16- சென்னை கீழ்ப்பாக்கத் தில் செயல்பட்டு வந்த சீதா கிங்ஸ்டன் தனியார் பள்ளி மூடப் படுவதாக அறிவிக்கப்பட்ட நிலை யில், அப்பள்ளியை இனி இந்து சமய அறநிலையத் துறையே ஏற்று நடத்தும் என அமைச்சர் பி.கே. சேகர்பாபு அறிவித்துள் ளார்.
காஞ்சிபுரம்
ஏகாம்பர நாதர் கோவிலுக்கு சொந்த மான இடத்தில் குத்தகைக்கு சீதா கிங்ஸ்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல் பட்டு வந்தது. 1969ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த இந்த பள்ளி நிலத்தின் குத்தகை காலம் நிறை வடைந்தது. மேற்கொண்டு வாடகை செலுத்த முடியாத காரணத்தினால் பள்ளியை இழுத்து மூடுவதாக நிர்வாகம் அறிவித்தது. இதனால் பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இறுதியில் அறநிலையத் துறை அமைச்சரிடம் இது தொடர்பாக முறையிட்டனர்.
பின்பு
அதனை விசாரித்த அறநிலையத்துறை இன்று பள்ளி வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டது. அமைச்சர் சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற் கொண்டு முடித்த பின் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது
பேசிய அமைச்சர் சேகர்பாபு, இந்த தனியார் பள்ளி இதுவரை காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் வாடகை அடிப் படையில் இயங்கி வந்தது. தொடர்ந்து வாடகை செலுத்த முடியாத காரணத்தினால் இழுத்து மூடப் படுவதாக அறிவித்தது. இந்த தகவலை பெற்றோர்கள் தெரிவித்ததால் இனி இந்த பள்ளியை இந்து சமய அறநிலையத் துறையை ஏற்று நடத்தும் என அறிவித் தார்.
இதற்கு முன்பு பள்ளியில் என்ன கட்டணம் வசூலிக்கப்பட்டதோ அதே கட்டணமே வசூலிக்கப்படும் என்றும் கட்டணத்தில் மாற்றம் ஏதும் இருக்காது என்றும் கூறினார். மேலும் பள்ளியில் என்ன மாதிரியான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறதோ அதே நடைமுறைகள் தொடரும் என்றும் அறிவித்துள்ளார்.
இந்த
பள்ளி மேலும் மேம்படுத்தப்பட்டு அதிகமான மாணவர்கள் சேர்ந்து படித்து பயனுறும் வகையில் பல்வேறு வசதிகள் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் ஏற்படுத்தித்தர உள்ளதாகவும் அவர் கூறினார்.
சென்னையில்
மின்சார ரயில் சேவை அதிகரிப்பு
சென்னை,
ஜூன்16- சென்னையில் கரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் கடந்த 14 ஆம் தேதி முதல் ஊரடங்கில் மேலும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னை ரயில்வே கோட்டமும், மின்சார ரயில் சேவையை அதிகரித்தும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த 7ஆம் தேதி முதல் 208 ஆக இருந்த மின்சார
ரயில் சேவையின் எண்ணிக்கையை, 279 ஆக சென்னை ரயில்வே
கோட்டம் அதிகரித்தது. இந்த நிலையில் இன்று முதல் மேலும் கூடுதலாக மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து
சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, மூர்மார்க்கெட், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மார்க்கத்தில் 113 மின்சார ரயில் சேவையும், மூர்மார்க்கெட், கும்மிடிப்பூண்டி, சூலூர்பேட்டை மார்க்கத்தில் 60 சேவையும், சென்னை கடற்கரை-வேளச்சேரி மார்க் கத்தில் 36 ரயில் சேவையும், கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு, திருமால்பூர் மார்க்கத்தில் 120 ரெயில் சேவையும் என 323 மின்சார ரெயில் சேவை இயக்கப்படும்.
அதேபோல்,
ஆவடி-பட்டாபிராம் மிலிட்டரி சைடிமங் மார்க்கத்தில் 4 மின்சார ரயில் சேவையும், பட்டாபிராம்-பட்டாபிராம் மிலிட்டரி சைடிமங் மார்க்கத்தில் 10 மின்சார ரயில் சேவையும் அதிகரிக் கப்பட்டுள்ளது.
அதன்படி
இன்று முதல் சென்னையில் 343 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படும். மேலும் 20ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் 98 மின்சார ரெயில் சேவைகளும் இயக்கப்படும்.
No comments:
Post a Comment