அ.இ.அ.தி.மு.க. அய்.டி. பிரிவு மண்டல செயலாளர் அய்பவர் சுவாமிநாதன் விலகல் - கட்சியின் தலை வருக்குத் தொலைநோக்குப் பார்வையில்லை என்று குற்றஞ்சுமத்தியும் உள்ளார்.
தேவை 10 கோடி
தமிழ்நாட்டுக்கு இன்னும் 10 கோடி தடுப்பூசி தேவை என்கிறார் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
பெண்கள் மயம்!
புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர், கோட்டாட் சியர், மாவட்ட வருவாய் அலுவலர் எல்லாம் பெண்கள் மயம். (பலே! பலே!!)
கருநாடகம் - தப்புவாரா எடியூரப்பா?
கருநாடக மாநிலத்தில் முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்ற உள்கட்சிக் குழப்பத்தைத் தொடர்ந்து பா.ஜ.க. மேலிடப் பொறுப்பாளர் அருண்சிங் பெங்களூரு வந்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
தடையில்லை!
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்புத் தேர்வு ரத்து செய் வதற்குத் தடையில்லை என்று கூறிவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.
பரிந்துரை
பாலியல் தொல்லை வழக்கில் சிக்கிய சிவசங்கர் பாபா கேளம்பாக்கத்தில் நடத்தும் இன்டர்நேஷனல் பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு செங்கற்பட்டு மாவட்டக் குழந்தைகள் நலக் குழுமம் பரிந்துரை.
No comments:
Post a Comment