பெரியாரின் பத்திரிகை நாணயம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 2, 2021

பெரியாரின் பத்திரிகை நாணயம்

திராவிடன் இதழுக்கு ஜே.எஸ். கண்ணப்பன் அவர்களுடன் பெரியாரும் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு பணியாற்றினார். சுயமரியாதை, பகுத்தறிவு, தொழிலாளர் நலன் ஆகியவையே அதன் கொள்கையாக இயங்கின. 'திராவிடன்' இதழுடன் 'குடிஅரசு' இதழையும் தொய்வில்லாமல் கவனித்து வந்தார் பெரியார். 'குடிஅரசு' விற்பனை வாரந்தோறும் பதினாயிரமாக உயர்ந்தது. அதனையும் அத்துடன் சேர்த்துத்  'திராவிடன்' நாளிதழையும் அச்சிட வேண்டியிருந்ததால் 'குடிஅரசு' இதழின் பக்கங்களை 16 ஆகக் குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் கட்டுரைகளும், செய்திகளும் வெளியிடுவது பாதிக்கப்படக் கூடாதே என்பதற்காக விளம்பரங்களைப் பாதி அளவாகக் குறைத்துக் கொண்டு விளம்பரம் தந்தவர்களுக்குப் பெரியார் வருத்தம் தெரிவித்தார். பெரியாரின் தொழில் நேர்மைக்கு இது ஒரு சான்று. விஷயங்களை நிறைவாகத் தர வேண்டும் என்பதற்காக தான் விளம்பரங்கள் மூலம் வரும் வருமானத்தை இழக்க முன் வருவார்கள்.

(பெரியார் .வெ.ரா. - ஆறு.அழகப்பன்

சாகித்திய அகாடமி வெளியீடு பக்கம் 59-60)

No comments:

Post a Comment