பல சவால்களை ஏற்று உலக சாதனை செய்வது ஆசிரியரால் மட்டுமே முடியும் பணி!
மதிப்புக்கும் மரியாதைக்குரிய ஆசிரியர் அய்யா அவர்களுக்கு வணக்கம்.
நேற்று 1.6.2021 அன்று மாலை 5.30 மணியளவில் நடைபெற்ற '87ஆம் ஆண்டில் 'விடுதலை' காணொலி நிகழ்ச்சியைக் கேட்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன். இனமானம் காக்க போராடும் 'விடுதலை'யின் வளர்ச்சி, அதன் சாதனைகள் பற்றி பங்கேற்ற அனைவரும் எடுத்துரைத்தது மிகவும் அருமை.
87 ஆண்டுகள் பெருமையுடைய நாள் ஏட்டில் 59 ஆண்டுகள் ஆசிரியராக இருந்து, பல சவால்களை ஏற்று உலக சாதனை செய்வது தங்களால் மட்டுமே முடியும் பணி.
செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 1989ஆம் ஆண்டு எம்.ஏ. மேற்பட்டப் படிப்பு முடித்து, பெரியார் பெருந்தொண்டர் மறைந்த செய்யாறு பா. அருணாசலம் அவர்களால் நானும் 'விடுதலை' நாளிதழின் மூத்த செய்தியாளர் நண்பர் வே. ஸ்ரீதர் அவர்களும் 'விடுதலை' அலுவலகத்திற்கு வந்தோம். சுமார் 32 ஆண்டுகள் விடுதலையில் பணிபுரிந்து விடுதலையின் மூத்த செய்தியாளராக உயர்ந்தவர் நண்பர் வே. ஸ்ரீதர் ஆவார். ஆசிரியர், கவிஞர், அண்ணன் வீ. அன்புராஜ் ஆகியோர்களுக்கு உறுதுணையாக இருந்து வரும் நண்பர் வே. ஸ்ரீதர் அவர்களை இந்நிகழ்வின்மூலம் பெருமைப்படுத்தியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. விடுதலையில் பணிபுரியும் அனைவருக்கும் வாழ்த்துகள். நன்றி.
- வடமணப்பாக்கம், வி. வெங்கட்ராமன்
பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர், செய்யாறு.
No comments:
Post a Comment